Sunday, August 14, 2005

பாட்டிக்கு ஒரு அஞ்சலி

'பாட்டி போயிட்டா' போன வாரம் அதிகாலையில் ஃபோன் செய்தி. வெளிநாட்டில் இருப்பதால் சந்தோஷங்களிலும் தொலை தூர பங்களிப்பு தான், துக்கத்திலும் அதே தான். துக்கத்தில் பங்கு கொள்ள எனக்கு தைரியம் கிடையாது. அதனால் தூரம் உதவியாக இருந்தது.

பாட்டிக்கு 90 வயது. மூன்று வருடங்கள் முன்பு 92 வயதாகியிருந்த தாத்தா போய்விட்டார். தாத்தா இருந்த வரை பாட்டி சற்று ஆரோக்கியத்துடன் தான் இருந்தார் என்று சொல்ல வேண்டும். 'தாத்தாவை தான் தான் கவனிக்க வேண்டும்' என்பது அவருடைய எண்ணம். நாங்கள் பார்த்துக் கொண்டாலும் அவ்வளவு திருப்தி இருக்காது. இத்தனைக்கும் சின்ன வயதில் தாத்தாவின் முன் கோபத்தால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். 9 குழந்தைகளில் 2 தான் தங்கியது. தாத்தா 'முணுக்'கென்று கோபம் வந்தால் வேலையை விட்டு விட்டு வந்துவிடுவார். எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறார் பாட்டி.

கடைசி காலத்தில் தாத்தாவை ஒரு பெண் புலி தன் குட்டியை பார்த்துக் கொள்வது போலத்தான் பார்த்துக் கொண்டார். டாக்டர் 'லைட்டான உணவு கொடுங்கள்' என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதில் தாத்தாவுக்கு ஒரு பங்கு என்று வாங்கிக் கொள்வார். அவரால் கடிக்க முடியாவிட்டாலும் அதை தண்ணீரில் கரைத்து சாப்பிட வைத்துவிடுவார்!

அன்று முழுக்க பல நினைவுகள் வந்து போய் கொண்டே இருந்தன:

திரைப்படம் கல்யாணத்தில் முடிந்தால் தான் நல்ல படம் என்று சர்டிஃபிகேட் கொடுக்கும் பாட்டி...

ஈ-மெயிலில் வரும் குடும்ப ஃபோட்டோக்களை பார்த்து 'என்ன அதிசியம் பார்த்தியா? இது கார்தாலே எழுந்து பார்த்தாலும் தெரியுமா?' என்று வியக்கும் பாட்டி..

நான் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டால் 'இதுக்கு மேலே ஒரு சொக்கா போட்டுண்டு தானே வெளிலே போவே? என்று கேட்கும் பாட்டி..

'உனக்கு சிங்கப்பூருக்கு வண்டி சத்தம் எவ்வளவு ஆகும்?' என்று ஒவ்வோரு முறையும் தவறாமல் கேட்கும் பாட்டி..

என்னுடைய அம்மா சோபாவில் சரிசமமாக என் கணவருடன் உட்கார்ந்து பேசுவதால், 'மாப்பிள்ளை தங்கமானவர்' என்று புகழும் பாட்டி..

(கடைசி வரை பாட்டிக்கு தலைமுடி நரைக்கவே இல்லை! போட்டோ ஃபிப்ரவரியில் எடுத்தது.)

தன்யா இவ்வளவு வயசானவரை சிங்கையில் பார்த்ததில்லை. போன விடுமுறையின் பொழுது
செல்வராஜின் குழந்தைகளைப் போல் "அம்மா.. why is she so old?" என்றாள். "எல்லோருக்கும் வயசாகும் தன்யா. அம்மாவும் ஒரு நாள் பாட்டி மாதிரி ஆயிடுவேன்," என்றேன். "Then who will look after me?" என்றாள். அவரவர் கவலை அவரவருக்கு!

உடம்பில் வலுவிழந்து போனதால் இரண்டு வருடங்களாக எங்களை பார்க்கும் பொழுதெல்லாம் "நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்? என்னை ஏன் பகவான் அழைச்சுக்க மாட்டேங்கிறான்?" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். வேதனைப்படுத்தும் கேள்வி. என்ன பதில் சொல்வது? கையைப் பிடித்துக் கொண்டும், ஏதோ பழைய விஷயங்கள் பேசியும் பேச்சை மாற்றுவேன்.

மிகவும் கஷ்டப்படாமல் போனதால், செய்தி கேட்டவுடன் கண்ணீர் வழிந்தாலும் ஒரு நிறைவு என்று தான் சொல்ல வேண்டும். போன விடுமுறை முடிந்து வந்த பொழுது என் கையில் 100 ரூபாய் திணித்து, "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு" என்று சொன்ன பாட்டியின் முகம் தான் கடைசி நினைவு.

50 Comments:

At 10:52 pm, August 14, 2005, Blogger Srikanth Meenakshi said...

Please accept my condolences, Ramya. It seems that a contented life ended in a peaceful manner. We should all be so lucky...

 
At 10:58 pm, August 14, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

ரம்யா
என் ஆழ்ந்த அனுதாபங்கள். நினைவுகள் இருக்கும் வரை மனிதர்கள் இறப்பதில்லை.

 
At 11:22 pm, August 14, 2005, Blogger மாயவரத்தான் said...

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் (குடும்பத்தினரின்) வருத்தத்தில் பங்கு கொள்கிறேன். பாட்டியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 
At 12:20 am, August 15, 2005, Blogger ஜென்ராம் said...

ரம்யா
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
At 12:52 am, August 15, 2005, Blogger முகமூடி said...

ஒரு வார்த்தையில் பகிர்ந்து கொள்வதல்ல சோகம். சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இது சமயமல்ல.. ஆழ்ந்த அனுதாபங்கள் ரம்யா.

 
At 8:53 am, August 15, 2005, Blogger டி ராஜ்/ DRaj said...

Ramya,
Let her soul rest in peace.

Draj

 
At 12:02 pm, August 15, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

our deepest condolences Ramyakka.

//நினைவுகள் இருக்கும் வரை மனிதர்கள் இறப்பதில்லை.//

very true. May her memories comfort you and all others in the family.

 
At 2:44 pm, August 15, 2005, Blogger ச.சங்கர் said...

// போன விடுமுறை முடிந்து வந்த பொழுது என் கையில் 100 ரூபாய் திணித்து, "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு" என்று சொன்ன பாட்டியின் முகம் //

இந்தப் பாசத்திற்கு கோடி பொன்னும் ஈடாகுமா ?
with deep condolences
அன்புடன்...ச.சங்கர்

 
At 5:36 pm, August 15, 2005, Blogger Ramya Nageswaran said...

அனைத்து அன்பான நெஞ்சங்களுக்கும் நன்றி!

 
At 6:10 pm, August 15, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

Ramya,
my condolences !!!!

anthak kAlathththu manitharkaL veLippaduththum anbE thani enpathu mattum theLivu.

 
At 7:52 pm, August 15, 2005, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

I almost cried while reading the last sentences,..
Let her soul rest in peace !

 
At 12:30 am, August 16, 2005, Blogger Manjula said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள் ரம்யா.

 
At 12:50 am, August 16, 2005, Blogger wichita said...

my condolences :(
May her soul rest in peace

 
At 5:47 am, August 16, 2005, Blogger neyvelivichu.blogspot.com said...

Please accept my condolences, Ramya.

you reminded me of my grandma..

anbudan
vichchu
neyvelivichu.blogspot.com

 
At 11:30 am, August 16, 2005, Blogger மயிலாடுதுறை சிவா said...

ரம்யா
ஆழ்ந்த அனுதாபங்கள்...பாட்டியின் நினைவிற்கு என்றுமே இறப்பு இல்லை...

http://manikoondu.blogspot.com/2005_04_01_manikoondu_archive.html

மயிலாடுதுறை சிவா....

 
At 12:04 pm, August 16, 2005, Blogger Nirmala. said...

ரம்யா... எதேதோ ஞாபகங்கள். நானும் தூரத்தில் இருப்பதில் இதை ஒரு சௌகரியமாகவே பார்க்கிறேன். கையை இறுக்கிப் பிடித்து வழியனுப்பிய பெரியப்பா, வாய் நிறைய கூப்பிடும் அத்தை... இந்த முகங்கள் தான் கடைசியாக மனசில் இருக்கிறது.

நிர்மலா.

 
At 12:58 pm, August 16, 2005, Anonymous Anonymous said...

பாட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். உங்கள் பாட்டியின் அன்பை படிக்கும்போது என் பாட்டியும் நினைவில் வந்து போனார்.

 
At 1:39 pm, August 16, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

பாட்டியின் நினைவு பலவிஷயங்களை உசுப்பிவிட்டது.

எங்களோட மனமார்ந்த அனுதாபங்கள் ரம்யா. பாட்டிக்கு நல்ல சாவுதான். நம்ம பக்கம் கல்யாணச் சாவுன்னு சொல்லுவாங்க.

நாமெல்லாம் 92 வயசு இருப்போங்கறீங்க?

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 5:22 pm, August 16, 2005, Blogger Ramya Nageswaran said...

நண்பர்களே, நன்றிகள் பல..

 
At 7:35 pm, August 16, 2005, Blogger Sud Gopal said...

இப்போதும் ஒவ்வொரு முறை வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் திரும்பக் கூடை நிறைய எடுத்து வருவது பாட்டி,தாத்தா பற்றிய தீராத நினைவுகளும்,அவர்கள் மறைந்ததனால் உண்டான வெறுமையுமே.

உங்க பாட்டியைப் புகைப்படத்தில் பார்க்கும் போது அவ்வளவு வயசானவங்களாத் தெரியலயே,அக்கா???

அவரது ஆன்மா சாந்தியடைய என் உளமார்ந்த பிரார்த்தனைகள்.

 
At 8:25 pm, August 16, 2005, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ரம்யா, மிகவும் எளிமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள். எல்லோருக்கும் இப்படி ஒரு பாட்டியோ தாத்தாவோ இருக்கத் தான் செய்கிறார்கள்.

எனது ஆத்தா பற்றி எழுதியதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இன்று நானும் சென்று மீண்டும் அதனைப் படித்து வந்தேன். கிளறலுக்கு நன்றி.

 
At 10:00 pm, August 16, 2005, Anonymous Anonymous said...

Deep Condolences Ramya.

I couldn't go to India when my patti died and as Nirmala had said, I always remember her as "viboothi ittu vittu, jakkiradhaya irundhukkodi kuzhandhai, etc etc"nu paasama pesara pattidhan.

Patti-Pethi (Peran) ninaivugal oru pokkishamdhan.

 
At 10:31 pm, August 16, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

ரம்யா ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களது பாட்டியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

 
At 7:45 am, August 17, 2005, Blogger Ramya Nageswaran said...

நண்பர்களுக்கு மீண்டும் நன்றி.. செல்வராஜ், உங்கள் ஆத்தா பற்றி படித்தேன். அன்பை வெளிப்படுத்துவதில் எவ்வளவு ஒற்றுமைகள்! தங்கள் கடமைகளை முடித்து விட்டு, ஓய்வாக இருப்பதால் தாத்தா/பாட்டி அன்பு அவசரமில்லாத, எதிர்பார்ப்புகளில்லாத அன்பு.

 
At 7:47 am, August 17, 2005, Blogger Ramya Nageswaran said...

சுதர்சன் கோபால், பாட்டிக்கு தலைமுடி நரைக்காதது ஒரு குட்டி அதிசயம். அதனால் வயது தெரியவில்லை.

 
At 9:25 am, August 17, 2005, Anonymous Anonymous said...

இன்றுதான் காண நேர்ந்தது. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 
At 12:52 pm, August 18, 2005, Blogger -/சுடலை மாடன்/- said...

ரம்யா
என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாட்டிகள் எப்பொழுதுமே என்னை அசர வைப்பவர்கள்,
என்னுடைய இரண்டு பாட்டிகளுமே இப்பொழுது இல்லை, ஆனால் நான்
அவர்களைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

நேரமிருப்பின் இதைப் படிக்கவும்:

http://openscroll.org/ramesh/ramesh36.html

Ramesh is a hilarious writer!

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 7:59 am, August 19, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, மூர்த்தி, சங்கர். சுட்டிக்கு நன்றி சங்கர். கண்டிப்பாக படிக்கிறேன்.

 
At 1:00 pm, August 19, 2005, Blogger வீ. எம் said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள் ரம்யா.. அவரின் ஆன்மா உங்களுடனே இருந்து உங்களை வழி நடத்தும்..
வீ எம்

 
At 8:37 am, August 21, 2005, Blogger dinesh said...

Ramya,

Please accept my condolences. Enakkum similar experiences. Idhe maadhiriyaana oru paati (Thaatha va paatiye thaan paathukkanum nu adam pidikkara paati and sollukku erthabadi thaathava paathundadhu mattum illaama kudumbathukke oru pillar of strength maadhiri irundhaa). Idhe maadhiriyaana oru thaatha (He's still alive.Munkovam nu solla mudiyaadhu, anaa avasara pattu important decisions a thappa edukkara type. Paatti pinnadi irundhu azhaga direction kuduthathu kudumbathla thaatha va thavira ellarukkum theriyum. :).). "Indha photo naalaikku paarthaalum theriyuma" maadhiri, paatti oda neraya innocent and funny exchanges oda memories dhaan baakki. America poittu vandhu "Neraya english kathunutten, ellar kittayum english la thaan pesinen" nu solra paati, adha prove panrathukkaaga, every time coffee kudukkarcheyum, thavaraama, poruppaa, "Which do you prefer, coffee or tea (special emphasis on "prefer") nu kettadhu nyabagam varadhu :). Daily samayal bodhu, thavaraama, enna venum nu kettu, dhool pannuvaa paatti. Koottu, kari, kozhambu, rasam and payasam nu odambu mudiyaama irundha podhu kooda, strain panni samaichu, adhula oru satisfaction paatha. "Paatti poitta na ipdi ellam yaaru da onakku samaichu poduvaa" nu kepaa. Just like you did, paati kayya pudichu, edhavadhu funny a pesi, topic a deviate panradhu dhaan routine.

Paatti died a few years back. Dhukkathil pangu kolla enakkum dheyiriyam kedayaathu. Indha maadhiri feel panradhu thappo nu oru side la guilt. Paatiya kedaseeya paaka mudile nu kashtama irundhudhu oru pakkam. On another side,"cha, ippdi verum memories oda mattum paatti kku farewell kudkkarome nu" oru helpless feeling.

Your style of writing is excellent. I could relate to everything said here. Thanks.

 
At 10:23 am, August 21, 2005, Blogger Prabhu said...

My condolences.
"En kaila 100rs thinichu kuzhanthaiku ethavathu vangi kudu" - Typical grandparent feeling, totally been in that situation.

 
At 6:19 pm, August 21, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ. எம். நன்றி.

Dinesh, thanks for sharing your experience and thoughts.

Thanks for stopping by and for your comments Prabhu.

 
At 6:20 pm, August 21, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ. எம். நன்றி.

Dinesh, thanks for sharing your experience and thoughts.

Thanks for stopping by and for your comments Prabhu.

 
At 7:33 pm, August 22, 2005, Blogger பத்ம ப்ரியா said...

Ramya,

I didnt expect that i will post my first comment which is a condolence for your Grandma's demise.

கடைசி காலத்தில் தாத்தாவை ஒரு பெண் புலி தன் குட்டியை பார்த்துக் கொள்வது போலத்தான் பார்த்துக் கொண்டார்.

I cried while reading the above words.

Let us pray for her soul to rest in heaven with your grandpa's.

Then.. your writtings are very frank and analytical.

The story " Vidiyal " is excellent.

And my heartiest thanks for your comment on my Parinaama Valarchchi.

Thanks ramya.. take care.
M. Padmapriya

 
At 11:27 pm, October 10, 2005, Blogger ammani said...

Very moving. My condolences. I haven't stopped missing my paati who passed away 9 years ago.
Extremely well written.

 
At 1:12 am, October 11, 2005, Blogger Priyamvada_K said...

Ramya,
Sorry to read this. My condolences.

Priya.

 
At 6:03 am, October 11, 2005, Anonymous Anonymous said...

Ramya,

My deepest condolences.

Paati's are epitome of love

My sincere prayers to your parents to bear this loss

Kavya

 
At 10:17 am, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

Ammani, thank you....also for giving a link in your site.

Priya and Kavya, thank you.

 
At 12:31 pm, October 11, 2005, Anonymous Anonymous said...

Ramya,
The first time i am reading your post/blog. Very touching and nice. Paati's are epitome of love and tradition. My mothers' mother used to be like her. When i first got my earnings I got a saree for her
(9 yards) and gave to her and got her blessings, but she never wore that. She was bed ridden from stroke a few days after i gave her the saree and never came around during the 3 years she lived after that. it still hurts me. My father's mother is still alive, but then she is as distant to me as a stranger is. has never loved anybody in her life except herself. Even now with 87 years and two metal screws in her hip (the operation was done a few months back), she is going strong. has given mental torture to my mother all along even when she was carrying. none of her daughters come and visit her. if not for my mother i don't know where she will be. but even now she back bites behind my mom. i have never been so lucky like you.

 
At 1:00 pm, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

Thanks for sharing.. To an extent, I can understand how you feel.. my mother had similar experiences but she firmly believed that blessings of elders keep her children happy. So, she found a way to look beyond her pain. My patti finally appreciated her worth.

I hope you find a way to reach out to your patti and make peace with her.

 
At 2:23 pm, October 11, 2005, Blogger Raga said...

My deepest condolences Ramya. I am speechless. I too lost my grandmother 4 years ago. She was 96 then. She looked almost like your grandma - except that her hair was completely white!
When I got selected in my Campus interview (in a private software concern) and told this news to her, her first innocent question was "Pension kuduppala?"!!!
She is the most patient person I have ever seen in my life!
Thanks to your blog, I could jog all my memories of my patti!

 
At 3:01 pm, October 11, 2005, Anonymous Anonymous said...

my condolences...extremely well written.
-J

 
At 9:52 pm, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

//"Pension kuduppala?"!!!//

Typical patti question Raghavendran..thanks for your comments.

Thank you J.

 
At 6:38 am, October 12, 2005, Anonymous Anonymous said...

Dear Ramya,
My condolences to you and your family.
I just broke down after seeing your post, remembering my patti and thatha who passed away 10 years back. It is very very difficult to find someone who will take their place.
They had their own way of showering genuine love and affection.
Take care..

 
At 2:10 pm, October 12, 2005, Blogger Nagarathinam said...

தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். அருமை. உங்கள் வலைப்பூவை தினமலரில் பிரசுரித்துள்ளோம். இரண்டாம் பக்கம் வெளியாகி உள்ளது. தினமலர் வெளிநாடுகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால், இன்டர்நெட்டிலும் நீங்கள் அதைப் படிக்கலாம்.
http://www.dinamalar.com/2005oct11/flash.asp

அன்புள்ள நண்பன்,
சு.நாகரத்தினம்,
தினமலர், மதுரை.

 
At 2:33 pm, October 12, 2005, Blogger Ramya Nageswaran said...

RP, thank you for your visit and for your kind comments.

___________________________

நண்பர் நாகரத்தினம் அவர்களே, எங்களைப் போன்ற வலைப்பூ எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. நண்பர்கள் பலர் படித்து விட்டு தொடர்பு கொண்டார்கள்.

மீண்டும் நன்றி,
ரம்யா

 
At 3:01 pm, October 19, 2005, Blogger krish_lakshman said...

Hi Ramya,
You are blessed. You had such a nice patti and the priceless moments you have mentioned bring out all the goodness of your patti. Your patti is a rare kind who needs to be worshipped.

But, why did you miss saying good-bye to her? She deserved your presence.

 
At 3:41 pm, October 19, 2005, Blogger Ramya Nageswaran said...

Thank you for your visit and comments Krish Lakshmnan. I did not go because I didn't have the courage. It is easier to remember her the way I saw her during my last visit.

 
At 2:08 am, October 24, 2005, Anonymous Anonymous said...

Condolences, Ramya.

Rendu vishayam un(ga) manasa thethikka:
Onnu, ennai pola sila per thatha paatiye paarthathu kedayadhu.
Rendu, I think she'll be happier now, looking down on you all, with your thatha at her side.

 
At 11:59 am, October 24, 2005, Blogger Ramya Nageswaran said...

Thank you Prakash. Yes, I have to be grateful for at least spending time with them. I have not seen my mother's parents, which is my loss.

 

Post a comment

<< Home