Saturday, July 16, 2005

இந்தியாவிற்காக ஏதாவது செய்ய விருப்பமா?

பல சமயங்களில் என் நண்பர்கள் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொழுது, "ரம்யா இந்தியாவில் உள்ள சில தொண்டு நிறுவனங்களோடு தொடர்புடையவள். இங்கிருந்து நிதி திரட்டுகிறாள்," என்று சொல்வார்கள். அதற்கு கிடைக்கும் சில standard பதில்கள்:

1. 'அப்படியா. நாங்களும் XYZ charityஐ சப்போர்ட் பண்ணுகிறோம்.'
2. 'எனக்கும் செய்யணும்னு ஆசை தான். ஆனா நாம அனுப்புற பணம் சரியா உபயோகப்படுமா? Will it reach the right hands?"
3. 'எப்படி அனுப்பணும்? இங்கேயிருந்து அனுப்பினா bank charges அது இதுன்னு நிறைய செலவாகுமா?'
4. 'அனுப்பினா அது எப்படி உபயோகப்படுத்தினாங்கன்னு feedback எதாவது கிடைக்குமா?'
5. 'இந்தப் புடவை சுந்தரி சில்க்ஸ்ல தானே வாங்கினீங்க. நான் கூட அங்கே போகாம வரவே மாட்டேன்'


நீங்க முதல் பதில் அல்லது கடைசி பதிலைச் சொல்லும் பிரிவை சேர்தவர்னா இந்தப் பதிவு உங்களுக்கு இல்லை. 2 to 4ன்னா என் அனுபவத்திலே தெரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். உபயோகமா இருந்தா சந்தோஷம்.

பணம் அனுப்ப விருப்பமா? இணையம் மூலம் donate செய்யலாம்

www.cry.org and www.giveindia.org. இந்த இரண்டு சைட்கள் மூலம் நான் credit card உபயோகித்து onlineல் donate செய்திருக்கேன். CRY பற்றி நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். CRY பற்றி ஒரு தவறான கருத்து உண்டு. 'அது ஒரு பெரிய NGO. நிறைய பணம் வரும். Administration costs அதிகம்,' என்பது தான் அது. போன வருடம் சிங்கைக்கு வந்திருந்த CRYயின் ex-CEO பெர்வின் வர்மாவுடன் இதைப் பற்றி வெளிப்படையாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தெளிவுபடுத்தியது என்னவென்றால்: "CRY ஒரு umbrella organizationஆக செயல்படுகிறது. CRYயின் கீழ் இப்பொழுது கிட்டதட்ட 170 சின்ன charities இருக்கின்றன. அதில் பல mainstreamல் தெரியாதவை. அவர்களால் advertisingக்கு செலவழிக்க முடியாது. ஆனால் மிகவும் முக்கியமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களுக்கு நாங்கள் உதவி அளிக்கிறோம். இரண்டாவது நீங்கள் தரும் donationல் ஒரு சிறு பங்கு administration costsக்கு செல்வது உண்மைதான். ஆனால் நாங்கள் சமூக சேவையில் பட்டமும், அனுபவமும் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதால் எங்களிடம் கொடுக்கும் பணத்திலிருந்து நாங்கள் அதிக value extract செய்கிறோம். எங்களால் திட்டமிட்டு சரியான முறையில் projects execute செய்ய முடிகிறது' என்றார்.

GIVE Foundation பற்றி தெரியாதவர்களுக்கு: GIVE இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு rating agency போல் செயல்படுகிறது. GIVEன் CEO வெங்கட் IIMAயில் படித்தவர். மிகவும் dynamic person. GIVEன் நிர்வாகிகள் நல்ல முறையில் செயல்படும் தொண்டு நிறுவனங்களைப் பற்றி பல தகவல்களை சேகரித்து, சரி பார்த்த பின்பு தான் அவர்களை தங்கள் சைட்டில் list செய்ய அனுமதிக்கிறார்கள். அதனால் நீங்கள் தரும் நிதி சரியான இடத்திற்கு தான் போகிறது என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். GIVEன் இன்னோரு சிறப்பு என்ன தெரியுமா? மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் நீங்கள் கொடுத்த பணம் எப்படி உபயோகிக்கப்பட்டது என்பது பற்றி ஒரு ரிப்போர்ட் (ஃபோட்டோக்களோடு) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். என்ன கேள்வி இருந்தாலும் வெங்கட்டிற்கு ஒரு மெயில் தட்டி விட்டால் 24 மணி நேரத்தில் பதில் வரும்.

பொருட்கள் அனுப்ப விருப்பமா? இதோ சில தகவல்கள்:

www.goonj.org GOONJ என்ற பெயரில் தில்லியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் என்ன செய்கிறது தெரியுமா? RECYCLING. "இந்தியர்கள் கவனமாகவும், பொறுப்பாகவும் தங்களின் பொருட்களை recycle செய்தால் இல்லாமை என்ற ஒரு விஷயம் இந்தியாவில் இல்லாமல் போகும்" என்கிறார் கூஞ்ச்சின் தலைவர் அன்ஷு குப்தா. இவர் பெரிய நகரங்களிலிருந்து பழைய துணிமணி, பாத்திரங்கள், காலணிகள் போன்றவற்றை சேகரித்து இந்தியா முழுவதும் இல்லாதவர்களுக்கு விநியோகம் செய்கிறார். இவரின் தற்போதைய ப்ராஜெக்ட்டின் பெயர்: "School to School". நகரங்களில் இருக்கும் பள்ளிகளின் உள்ள மாணவர்களிடத்திலிருந்து பழைய சீருடைகள், பை, ஷூ, புத்தகங்கள் போன்ற பொருட்களை வருட இறுதியில் சேகரித்து கிராமங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்.

நீங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியராக இருந்தால் நீங்கள் செல்லும் ஊரில் உள்ள சில நல்ல நிறுவனங்களுக்கு தரலாம். கூஞ்ச்சின் சிறப்பு என்னவேன்றால் யாருக்கு எது உபயோகப்படும் என்று பார்த்து தருவது மற்றும் மிக முக்கியமான சமயங்களில் உதவி அளிப்பது (உதாரணமாக வடக்கே குளிர் காலங்களில் ரோட்டோரவாசிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த சமயத்தில் கூஞ்ச் அவர்களுக்கு துணிகள் விநியோகம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளது).

ஷாப்பிங் செய்ய விருப்பமா? இதோ தொண்டு நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள்:

www.craftsbridge.com , http://www.cry.org/shopping/shopallpd.htm போன்ற வலைத்தளங்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் செய்த அல்லது அவர்களுக்கு ஒரு பங்கு தரும் companies விற்கும் பொருட்களை இணணயம் மூலமாக வாங்கலாம். நீங்க வெளிநாட்டில் இருக்கிறவரா இருந்தால் இந்தியாவில் இருக்கும் நண்பர்/உறவினருக்கு gifts அனுப்ப இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம். ஒரே கல்லுலே இரண்டு மாங்காய்!

http://mayaorganic.com/products_pages/toy/product_lac.htm

பெங்களூர்வாசிகள் கண்டிப்பாக மாயா விளையாட்டு சாமான் வாங்குங்கள். மிக அழகான lac finishல் பளபளக்கும் பொம்மைகள்!


http://www.akanksha.org/index1.htm (இந்த பேஜ் downloadஆனவுடன் கீழே products என்ற icon வரும்.)

மும்பய்வாசிகள் ஆகாங்க்ஷா பொருட்கள் வாங்கலாம்.

உங்கள் கிராமத்திற்கு இணைய வசதி கொண்டு வர வேண்டுமா?


ஒரு சிறு முதலீடு செய்தால் நீங்கள் இதை செய்யலாம்.

http://www.n-logue.com/overview.htm


இந்தியா பற்றிய நல்ல செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

www.goodnewsindia.com D.V. ஸ்ரீதரன் என்ற 61 வயது இளைஞர் நடத்தும் வலைத்தளம். D.V. ஒரு சுவாரஸ்யமான மனிதர். இந்தியாவில் வெறும் நல்ல செய்திகள் மட்டும் தானா? மற்ற செய்திகள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "கெட்ட செய்திகளை போட மற்ற பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் "objective pessimism'த்தோடு எழுதுகிறார்கள் நான் "subjective optimism"த்தோடு எழுதுகிறேன் என்று.


மேலும் சில உபரித் தகவல்கள்


வட அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் பற்றி உங்களுக்கேல்லாம் தெரிந்திருக்கும். எனக்கு நன்றாக தெரிந்த இரு நிறுவனங்கள்:

www.aimsindia.net (தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறப்பாக நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம். தமிழ் நாடு based projects நிறைய உண்டு).

http://www.nri-home-coming.com/ இவர்கள் தற்பொழுது மதுரையில் உள்ள DHAN Foundation உடன் இணைந்து ராமநாதபுரம் districtல் சில ஊரணிகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறார்கள். இப்பணியில் உதவ விருப்பபுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு கடைசி தகவல்: நான் ஒன்றும் பெரிய சமூக சேவகி இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் என்று நம்புகிறேன். என்னாலான சிறு சிறு உதவிகள் தான் செய்து வருகிறேன். எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாமே என்று மட்டுமே நினைத்தேன். பின்னூட்டத்தில் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே! நன்றி!

27 Comments:

At 9:25 pm, July 16, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

ramya
I use AIM and cry India org. If you send used clothes and computer to org not for profit), US Postal system send it free by surface mail.it is very useful information.

 
At 11:20 pm, July 16, 2005, Anonymous Anonymous said...

Ms Ramya ji,
It is very nice to see your blog in net, wonderful job, i am bala from dubai, i was searching for your e mail id for communication, but failed, can you update your profile with valid e mail id...
my e mail: itit_3@lycos.com
bala.

 
At 12:55 am, July 17, 2005, Anonymous Anonymous said...

Dear Ramya,

Thanks for the info...you havent mentioned about Asha...which is a well known NGO in the US....they did a lot of stuff during the recent tsunami disaster.

Radha

 
At 7:25 am, July 17, 2005, Blogger cholai said...

Dear Ramya,
CRY and goodnewsindia are the only sites, which were familiar to me. The entire article was a great value addition to me. Once again a good job.
Solai

 
At 10:07 am, July 17, 2005, Blogger Vijayakumar said...

பாரதி சொல்கிறார்...

"................................
நெஞ்சு பொறுக்கு திலையே --இதை
நினைந்து நினைந்தினு, வெறுக்குதிலையே;
கஞ்சி குடிப்பத்திற் கிலார் --அதன்
காரணங்கள் இவை யென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே --இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே (நெஞ்சு)
.........................."

(http://www.pondy.com/bharathiar/)

அருமையான தகவல்கள் ரம்யா. உங்களுக்கு ஏற்படும் "நிகழ்வின் தாக்கங்களை" விட இந்த பதிவின் தாக்கங்கள் மக்களிடன் அதிகம் ஏற்பட வேண்டும்.

 
At 1:26 pm, July 17, 2005, Blogger Ramya Nageswaran said...

அன்புள்ள பத்மா, தாமரை குழலி, கோயிஞ்சாமி 8A, சோலை, விஜய் அனைவருக்கும் பதிவு உபயோகமானதாக இருந்தது குறித்து மகிழ்ச்சி. ராதா, ஆஷா (www.ashanet.org) பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி. Bala, thank you for your kind words. I will send a mail to the id you have given.

 
At 8:24 am, July 18, 2005, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள ரம்யா, இது மிகவும் தேவையான பதிவு. இன்னும் ஒவ்வொரு திட்டத்தைப்பற்றியும் முடிந்தபோது விவரமாக எழுதினால், தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவசதியாகும். செயலில் இறங்குபவர்களுக்கும் தான். இந்தப்பதிவை ஒருவருடம் கழித்து மீண்டும் மறுபதிவு கூடச் செய்யலாம்.
என்றென்றும் அன்புடன், ஜெயந்தி சங்கர்

 
At 9:16 am, July 20, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, ஜெயந்தி..சத்தமில்லாமல் பலர் சமுதாயத்திற்காக எவ்வளவோ செய்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி நிச்சயம் எழுதுகிறேன்.

 
At 10:36 am, July 20, 2005, Blogger Adaengappa !! said...

Quite informative..
Will spread the word across my friends..Thanks a lot !!

 
At 3:30 pm, July 20, 2005, Blogger Ramya Nageswaran said...

Adengappa, thank you for your visit. Hope your friends also find it useful.

 
At 5:43 pm, July 21, 2005, Blogger ஜெ. ராம்கி said...

AIMS நண்பர்களுடன் எனக்கு தொடர்பு உண்டு. ஆனால், CRY விஷயத்தில் எனக்கு இரண்டாவது கருத்து உண்டு. காரணத்தை வெளிப்படையாக எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.

 
At 7:13 pm, July 21, 2005, Blogger Ramya Nageswaran said...

திரு. ராம்கி.. உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவம் என்ன என்று தெரியவில்லை. சிலருக்கு உபயோகமாக இருக்கலாம் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 
At 1:30 pm, July 22, 2005, Blogger கருப்பு said...

தன்னலமற்ற சேவை உங்களுடையது. கருணையுள்ளம் கொண்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 
At 5:51 pm, July 22, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, திரு. கருப்பு.. ஆனா நீங்க சொன்ன அளவுக்கெல்லாம் இன்னும் நான் ஒண்ணும் செய்யலை. ஆசைகளை படிப்படியா குறைச்சுகிட்டு செய்யணும் ஆசை தான்! பார்க்கலாம்..

 
At 9:29 am, August 17, 2005, Blogger எம்.கே.குமார் said...

உருப்படியான விஷயங்களை அறியத்தந்ததற்கு மிக்க நன்றி ரம்யா.

எம்.கே.குமார்

 
At 7:58 am, August 19, 2005, Blogger Ramya Nageswaran said...

குமார், வாங்க.. ரொம்ப நாள் கழிச்சு வலை உலாவா? பதிவு பிடித்தது குறித்து மகிழ்ச்சி!

 
At 4:36 am, October 04, 2005, Anonymous Anonymous said...

Ramya,
I liked this article - I server as the President for the Chicago Tamil Association and would like to share this article with our members via our news letter. Is that ok ?
Muthusamy

 
At 2:35 pm, October 04, 2005, Blogger Ramya Nageswaran said...

Mr. Muthuswamy, please do so. I will be happy if the message reaches as many people as possible. Please see another related article titled "Oru thundu thuni"

Thanks for your comments and your thoughtful gesture.

 
At 3:01 pm, October 04, 2005, Anonymous Anonymous said...

Thank you Dear Ramya.

 
At 5:44 pm, October 04, 2005, Blogger abcdef said...

குறிப்பிடத்தக்க மேலும் இரண்டு தொண்டு நிறுவனங்கள்

1. http://www.ilpnet.org/ - இது குழந்தை தொழிலாளர் ஒழிப்பை முன்னிறுத்துவது.

2. http://aidindia.org/ - ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றத்தை முன்னிறுத்துவது. கடலூரைச் சுற்றி சுமார் 70 க்கும் மேற்பட்ட இரவுப் பள்ளிகளை குழந்தைகளுக்காக முன்னெடுத்துள்ளார்கள்

 
At 10:03 am, October 05, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி திரு. இறை நேசன். its me, AID பற்றி தெரியும். India Literacy Project பற்றி கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

 
At 5:34 am, October 06, 2005, Blogger கூத்தாடி said...

good information Ramya .

நன்றி . சில charity பற்றித் தெரியும் ,நானும் சில வற்றிற்கு உதவியுள்ளேன்.ஆனால் நீங்கள் நிறைய தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.

Indiateam.org is also good and small .அவர்கள் சின்ன அளவில் நமது பள்ளிகளுக்கு உதவி வருகிறார்கள்.

 
At 3:52 am, October 29, 2005, Blogger குமரன் (Kumaran) said...

This comment has been removed by a blog administrator.

 
At 8:10 am, October 29, 2005, Blogger குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்ல வலைப்பதிவு ரம்யா

 
At 9:54 am, October 29, 2005, Blogger Ramya Nageswaran said...

குமரன், உங்க வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

 
At 9:56 am, October 29, 2005, Blogger Ramya Nageswaran said...

கூத்தாடி, உங்க பின்னூட்டத்தை இப்பொழுது தான் பார்த்தேன். நீங்க சொல்லியிருக்கிற தளத்தை பார்க்கிறேன். வருகைக்கு நன்றி.

 
At 1:33 am, December 10, 2005, Anonymous Anonymous said...

Dear Ms.Ramya,
I am sure you may like to Include Tamilnadu Foundation(www.tnftnc.org adn E-Mail: tnftnc@vsnl.net) also as a NGO worthy of receiving donations in cash and kind to benefit the underprivileged and the most deserving. You can also mention about the efficient delivery and reporting system in position with Tamilnadu Foundation.

-P.Chandrasekaran

 

Post a Comment

<< Home