Thursday, July 21, 2005

~சி



ஐந்தறிவு உள்ள நான் கூட
பசித்தால் தான் கொல்வேன் என்பது
ஆறறிவு உள்ள உனக்கு தெரியுமா?




இரு மனம் நேசித்ததால்
இந்த மண்ணில் மலர்ந்தேன்
இரு தேசம் வெறுத்ததால்
உன் மடியில் விழுந்தேன்




ஒற்றுமையாக வந்தோம்
ஒற்றுமையை குலைத்தோம்
ஒற்றுமையாக திரும்புவோம்

மிச்ச இரண்டுக்கும் இந்த மாதிரி வசனங்கள் கூட தோன்றவில்லை

(முதல் தடவை போட்டதை blogger தின்று விட்டது! அதனால் தான் ரிப்பீட்டூ!!)

19 Comments:

At 8:59 pm, July 21, 2005, Blogger சினேகிதி said...

matha 2 padathukum ellutha try panalame ramya

 
At 9:52 pm, July 21, 2005, Blogger Ramya Nageswaran said...

இன்னும் எவ்வளவு நேரம் காணாமல் போகாமல் இருக்கிறது இந்தப் பதிவு என்று பார்க்கிறேன். இது வரை ஐந்து முறை upload செய்துவிட்டேன். வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை இருக்கிறதா?

 
At 10:00 pm, July 21, 2005, Blogger SnackDragon said...

பதிவின் தலைப்பிற்கு முன் ~ போட்டு பாருங்கள்.

 
At 10:19 pm, July 21, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, கார்திக்ராம்ஸ், இப்ப அப்படி செஞ்சிருக்கேன். என் சோதனை முயற்சி bloggerக்கு பிடிக்கலைன்னா யார் என்ன செய்ய முடியும்? :-(

 
At 1:52 am, July 22, 2005, Blogger யாத்ரீகன் said...

முதலும், இறுதியும் அருமை

 
At 1:23 pm, July 22, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, செந்தில்.

 
At 4:41 pm, July 22, 2005, Blogger அன்பு said...

எழுதியிருக்கிறதே (அல்லது எனக்கு தெரிவதே) தலைப்பாக

சி

மட்டும்தான்...

முதலும், இறுதியும் அருமை
என்றால் எல்லாம் அருமை என்று சொல்ல வரீங்களா?

ரம்யா கவிதை எங்கே... அல்லது
சி
-தான் கவிதையேவா!?
(ஆவியின் சீ... போல:)

 
At 9:45 pm, July 22, 2005, Blogger யாத்ரீகன் said...

முதலாவது கவிதையும், இறுதிக்கவிதையும் என்று பொருள்

 
At 12:14 pm, July 23, 2005, Blogger பாலு மணிமாறன் said...

Great Wotk Ramya... Keep Going !!!

 
At 1:48 pm, July 23, 2005, Blogger Ramya Nageswaran said...

பாலு, நன்றி.. உங்க நல்ல மனசு புரியுது. அன்பு, தனியா மடல் அனுப்பி லேசா தலையிலே குட்டினாரு!! :-)

செந்தில், சில சமயம் blogger படுத்தினதுனாலே வெறும் டைட்டில் மட்டும் தான் வந்தது. அதனாலே வந்த குழப்பம் தான் அன்பு கேட்ட கேள்வி.

 
At 8:15 am, July 25, 2005, Blogger cholai said...

ரம்யா ! இரண்டாவது கவிதையைப் பத்திரப்படுத்தவும்.. ! சர்வதேசத்தரம் இருக்கிறது அதில்..உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!

 
At 1:16 pm, July 25, 2005, Blogger Ramya Nageswaran said...

சோலை, எல்லாம் உங்களைப் போன்ற நணபர்களின் சகவாசம் தான்!! :-)

நன்றி!

 
At 5:57 pm, July 25, 2005, Blogger NambikkaiRAMA said...

அருமையாக உள்ளது உங்களது ஹைக்கூ படக்கவிதை. வாழ்த்துக்கள்!

 
At 9:14 pm, July 25, 2005, Blogger இப்னு ஹம்துன் said...

அட!

 
At 9:24 am, July 26, 2005, Blogger Ramya Nageswaran said...

பாஸிடிவ் ராமா மற்றும் இப்னு ஹம்துன், நன்றி, நண்பர்களே!! (என் கவிதையை ஊக்குவிக்கும் எல்லோரும் நிச்சயம் என் நண்பர்கள் தான்!!! :-))

 
At 12:25 pm, July 26, 2005, Blogger மதுமிதா said...

அன்பு ரம்யா
கவிதைகள் அருமை
தொடருங்கள்
வாழ்த்துக்கள்

 
At 12:39 pm, July 26, 2005, Blogger Vijayakumar said...

வந்து பார்த்த போதெல்லாம் இந்த பக்கம் empty-ஆக இருந்தது. எப்போ படத்துடன் கவிதை வந்தது?

படமும் கவிதையும் உள்ளதை சொல்கிறது. கலக்கல்....

 
At 12:42 pm, July 26, 2005, Blogger Vijayakumar said...

எல்லாம் சரி நீங்க ப்ளாக்கர்லேயே படங்களை ஏற்றலாமே. ஏன் weblogimages பயன்படுத்துறீங்க.

 
At 12:58 pm, July 26, 2005, Blogger Ramya Nageswaran said...

மதுமிதா, நீங்க வந்து வாழ்த்து சொன்னது உண்மையிலேயே has made my day, month, year!!!! ரொம்ப நன்றி!

நேற்று தான் நிலாச்சாரல்லே உங்க நேர்காணல் படிச்சுட்டு (ஜெயந்தி link அனுப்பினாங்க) உங்களுக்கு தனிமடல் அனுப்ப நினைச்சுகிட்டிருந்தேன். தனி மடல்லே இன்னும் பேசுவோம்.

நன்றி விஜய். ப்ளாகர் எப்ப மனசு இருக்கோ அப்பத்தான் என் கவிதையை போடும்! :-)இப்ப கூட பாருங்க தலைப்பை முழுசா போடவே மாட்டேங்குது!!

நீங்க சொல்ற விஷயமேல்லாம் இன்னும் தெரியலையே!! போன் பண்ணி தெரிஞ்சுக்கறேன்.

 

Post a Comment

<< Home