Sunday, September 18, 2005

கேள்வியின் நாயகியே....

நாலு நாளைக்கு ஒரு பதிவு போடலைன்னா என் பெயரை 'காணவில்லை' பட்டியல்லே சேர்க்க சில பேர்கள் தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் வீ லே ஆரம்பிச்சு எம் லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும்).


சில கேள்விகள் கேட்டு வைப்போமேன்னு ஒரு பதிவு. இந்தக் கேள்விகள் 'lateral thinking' வகையைச் சேர்ந்தவை. அதாவது நாம் பிரச்சனைகளை கையாளும் பொழுது சில விஷயங்களை assume செய்வோம். அப்படி செய்யாமல் fundamentalsஸிலிருந்து பிரச்சனைகளை ஆராய கற்றுக் கொடுக்கும் இந்த exercises என்று சொல்கிறார்கள்.

டோண்டு ஸார் இதையேல்லாம் முன்னாடியே கேட்டுட்டாரான்னு தெரியலை. 'புதுசு கண்ணா புதுசு'ன்னா முயன்று பாருங்க....இல்லைன்னா சொல்லுங்க வேற ஒரு கடி பதிவு போட்டுடறேன்.! :-)

1. ஜாக் தரையில் செத்துக் கிடக்கிறார். ஜன்னல் வழியாக பறந்து வந்த ஒரு கூரிய கல் அவரின் சாவுக்கு காரணம். ஆனால் அவரைச் சுற்றி ரத்தம் இல்லை. தண்ணீர் இருக்கிறது.

2. Barருக்குள் வரும் ஒருவர் bartenderரிடம் தண்ணீர் கேட்கிறார். அவரோ துப்பாக்கி எடுத்து hands up என்கிறார். சில நொடிகள் கழித்து வந்தவர் 'நன்றி' என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

3. ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார். உடனே தன் கவனக் குறைவால் பல உயிர்கள் பலி என்று புரிந்து கொள்கிறார்.

4. கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில் ஒருவர் ஊருக்கு திரும்புகிறார். அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார். அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.

5. ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.

6. இரு அமெரிக்கர்கள் பாரிஸில் உள்ள ஒரு ம்யூசியத்தில் நுழைய உள்ளார்கள். ஒருவர் மற்றவரின் மகனுக்கு தந்தை.

7. ஒரு பூட்டிய அறையில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். அவர் காலடியில் இருந்த தண்ணீரைத் தவிர அந்த அறையில் வேறேந்த பொருளும் இல்லை. அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?

8. ஜோன்ஸ் கீழே விழுந்ததால் காலில் காயம். பெரிய டாக்டர் வந்து அதை சரி செய்து விடுகிறார். இருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த காயத்தால் ஜோன்ஸின் மரணம் நிகழுகிறது.

9. மாடர்ன் ஆர்ட் பிடிக்காத ரோஜர், ஒரு நாள் ஒரு பெரிய ம்யூசியத்தில் உள்ள மாடர்ன் ஓவியங்களின் மேல் தண்ணீரை கொட்டி பாழடித்து விடுகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை.

10. கெவினும் (6 வயது) அவனுடைய அண்ணனும் (8 வயது) சோபாவில் அமர்ந்து ஒரு xxx படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மா உள்ளே நுழைகிறாள். ஆனால் அவர்களை கண்டிக்கவில்லை.


கூகிள் உதவியில்லாம கண்டுபிடிக்கிறவங்களுக்கு தன்யா வரைந்த படத்தை அன்பளிப்பாக அனுப்பி வைப்பேன்.

34 Comments:

At 9:28 pm, September 18, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Her Excellency, You need not prove your presence in tamil blog world by asking such questions :)

 
At 9:54 pm, September 18, 2005, Blogger Ramya Nageswaran said...

Hi Ravi..not really..just wanted to try my hand at some light stuff!! :) Lateral thinking exercises used to be my favorite during college days.

Appreciate your thought though!! :)

 
At 9:55 pm, September 18, 2005, Blogger குழலி / Kuzhali said...

//1. ஜாக் தரையில் செத்துக் கிடக்கிறார். ஜன்னல் வழியாக பறந்து வந்த ஒரு கூரிய கல் அவரின் சாவுக்கு காரணம். ஆனால் அவரைச் சுற்றி ரத்தம் இல்லை. தண்ணீர் இருக்கிறது.
//
பனிக்கட்டி கத்தி

//2. Barருக்குள் வரும் ஒருவர் bartenderரிடம் தண்ணீர் கேட்கிறார். அவரோ துப்பாக்கி எடுத்து hands up என்கிறார். சில நொடிகள் கழித்து வந்தவர் 'நன்றி' என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
//
தண்ணீர் ஊற்ற hands up சொன்னதாக நினைக்கின்றார்

//3. ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார். உடனே தன் கவனக் குறைவால் பல உயிர்கள் பலி என்று புரிந்து கொள்கிறார்.
//
ஜார்ஜ் புஷ்?!
//4. கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில் ஒருவர் ஊருக்கு திரும்புகிறார். அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார். அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.
//
ஹி ஹி நான் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு இன்னும் பலர் உயிரோடு இருக்கின்றனர்
//5. ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.
//
ஹி ஹி ஒரே மாதத்தில்னு சொல்லவில்லையே

//7. ஒரு பூட்டிய அறையில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். அவர் காலடியில் இருந்த தண்ணீரைத் தவிர அந்த அறையில் வேறேந்த பொருளும் இல்லை. அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?
//
பனிக்கட்டியில் நின்று தற்கொலை
//8. ஜோன்ஸ் கீழே விழுந்ததால் காலில் காயம். பெரிய டாக்டர் வந்து அதை சரி செய்து விடுகிறார். இருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த காயத்தால் ஜோன்ஸின் மரணம் நிகழுகிறது.
//
டாக்டருக்கு தலைகால் புரியாமல் தலையில் அறுவை செய்துவிடுகின்றார்?

//9. மாடர்ன் ஆர்ட் பிடிக்காத ரோஜர், ஒரு நாள் ஒரு பெரிய ம்யூசியத்தில் உள்ள மாடர்ன் ஓவியங்களின் மேல் தண்ணீரை கொட்டி பாழடித்து விடுகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை.
//
அதுவும் மாடர்ன் ஆர்ட் மாதிரி இருந்ததால் அல்லது மாடர்ன் ஆர்ட்டை அழிக்க உத்தரவு
//10. கெவினும் (6 வயது) அவனுடைய அண்ணனும் (8 வயது) சோபாவில் அமர்ந்து ஒரு xxx படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மா உள்ளே நுழைகிறாள். ஆனால் அவர்களை கண்டிக்கவில்லை.
//
இரண்டு பேரும் நாய்கள் அல்லது செல்ல பிராணிகள்

 
At 9:57 pm, September 18, 2005, Blogger குழலி / Kuzhali said...

//6. இரு அமெரிக்கர்கள் பாரிஸில் உள்ள ஒரு ம்யூசியத்தில் நுழைய உள்ளார்கள். ஒருவர் மற்றவரின் மகனுக்கு தந்தை.
//
புஷ்?!

 
At 10:01 pm, September 18, 2005, Blogger Ramya Nageswaran said...

குழலி..7 மற்றும் 10 சரி. மற்றவை தவறு. 5 வது அதே மாதம் தான்.

 
At 10:10 pm, September 18, 2005, Blogger குழலி / Kuzhali said...

10 க்கு விடை சந்தேகப்பட்டுக்கொண்டுதான் கூறினேன்...

//5. ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.
//
கி.பி., கி.மு.

 
At 10:25 pm, September 18, 2005, Anonymous Anonymous said...

XXX என்றொரு action படம் வந்தது.

 
At 12:14 am, September 19, 2005, Blogger தாணு said...

நேர் திங்கிங்கே தடுமாற்றம்,இதில் லாட்டெரல் வேறையா? என் பொண்ணுகிட்டெ சொன்ன ஒரு நிமிஷம்தான். நாளை சொல்றேன்

 
At 2:19 am, September 19, 2005, Blogger லதா said...

3. அவர் ஒரு வாகன ஓட்டி (driver for train / bus etc)

8. ஜோன்ஸ் ஒரு பந்தயக் குதிரை. (racehorse)

 
At 2:32 am, September 19, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

u mean lateral thinking popularised by edward de bono.
i have read po beyond yes and no, and other books but he often
repeats the same ideas in different
make ups :)
now a days i have forgotten to
think laterly as life has gone
on a zigzag path and so is
my thinking :)

 
At 3:23 am, September 19, 2005, Anonymous Anonymous said...

2. வந்தவருக்கு.. வி.. வி.. வி.. ஹ்ஹ்க்க்.. விக்கல்.
5. ட்ரிப்லெட்ஸ்.

6. அமெரிக்கால இதெல்லாம் சகஜமப்பா!!.

7. தூக்கு மாட்டிக் கொண்டு...

10. அமெரிக்க குழந்தைகளா இருந்திருக்கும்.

 
At 3:41 am, September 19, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

sarav:
I object your statement for question #10. What do you think that american chidlren watch all kinds of movies.

 
At 4:28 am, September 19, 2005, Blogger லதா said...

9. அந்த மியூசியத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர் தண்ணீர் ஊற்றினார்.

 
At 4:34 am, September 19, 2005, Blogger லதா said...

10 ச்சும்மா லுலுவாகாட்டிக்கு - பாவம் அவங்க அம்மாவிற்குக் கண்ணும் தெரியாது, காதும் கேட்காது :-))

 
At 8:18 am, September 19, 2005, Anonymous Anonymous said...

இல்ல தேன் துளி. Was just kidding. அமெரிக்க குழந்தைகளுக்கு உறிமை அதிகமாச்சேன்னு சொன்னேன். One of friends' son called 911, கண்டிச்சதுக்காக..

 
At 9:04 am, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

மக்களே, கேள்விகளை போட்டுட்டு சிங்கையிலே தூங்கி எழுந்து காலையிலே பார்த்தா, கிட்டதட்ட எல்லாத்துக்குமே பதில் கண்டுபிடிச்சுட்டீங்க.

மஞ்சுளா, நான்கு பதில்களுமே சரியான விடைகள்.

தாணு, சீக்கிரம் கேளுங்க உங்க பொண்ணு கிட்டே..

லதா, 8வது பதில் சரி.

சரவ், 2, 5 சரி. மற்றவை :-) தேன் துளி உங்க 6வது பதிலை பார்க்கலை!

பத்மா, லதா..அவை செல்லப் பிராணிகள்ங்கிற பதிலை குழலி சொல்லிட்டார்.

லதா, பத்தாவது கேள்விக்கு நல்ல முயற்சி. 9வது சரியான விடை. ரோஜர் ஒரு தீயணைப்புதுறை அதிகாரி.

Ravi, will think of some zig-zag puzzles for you soon! :)

 
At 1:02 pm, September 19, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

நான் கொஞ்சம் லேட்

இருந்தாலும் விட்டு போனவைக்கு மதியம் விடையளிக்கிறேன். (இப்போ மணி 10:30)

 
At 2:23 pm, September 19, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

மற்றவைகளுக்கு மற்றவர்கள் பதில் சொன்னதால்...

4.தீவில் அவருடைய நட்பு வட்டத்தில் ஒன்றா அந்தப் பறவை?

 
At 2:26 pm, September 19, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

3. அவர் ஒரு இரவுக் காவலாளி அல்லது விமான ஓட்டியாக இருக்க வேண்டும் !!!

 
At 2:30 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..சீக்கிரம் சொல்லுங்க..ரெண்டு கேள்விகள் தான் பாக்கி.

ஷ்ரேயா..நான்காவது கேள்வி தான் ரொம்பவே யோசிக்க வேண்டிய ஒரு கேள்வி. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

பாலா..அதே line of thinkingல வாங்க..

 
At 4:59 pm, September 19, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

//4. கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில் ஒருவர் ஊருக்கு திரும்புகிறார். அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார். அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.//
சூப்பை சாப்பிட்டுப் பார்க்கிறார் அது seagull சூப் மாதிரி இருக்கவில்லை. அதனால் ஒரு வேளை இறந்து போன தம் கப்பல் பிரயாணிகளின் சூப் என நினைத்து தற்கொலை செய்து கொள்கிறார்.

 
At 5:40 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..கிட்டதட்ட வந்துட்டீங்க. அவர் சாப்பிட்டது தான் சீகல் சூப். அந்த கோணத்துலே யோசிச்சு பாருங்க.

 
At 6:12 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

டி ராஜ்.. சரியான விடை.

கப்பலின் captain உயிரோடிருந்த மாலுமிகளுக்கு சீகல் சூப் என்று சொல்லி இறந்த மாலுமிகளின் சடலத்தை சூப்பாக்கி கொடுத்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருந்தார்.
'தன் சகாக்களை உண்டு நாம் வாழ்ந்தோம்' என்று புரிந்தவுடன் இவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

மூன்றாவது கேள்வி மட்டும் தான் பாக்கி!

 
At 8:02 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

That sounds like a possible answer but the actual answer is more precise. Think of someone working in a tall building, who sleeps early and therefore forgets to do something and then looks out of the window...

 
At 8:25 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

Yes, Raj.. you got it. He works at the lighthouse, comes in the evening (while there is light) and goes off to sleep without turning on the light. He notices a ship wreck and realizes his mistake!

மக்களே!! எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுவிட்டது.

1. ஜாக் ஒரு மீன். கல் பட்டு மீன் தொட்டி உடைந்து மீன் இறந்துவிட்டது.

2. அவருக்கு விக்கல். அதனால் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சியில் விக்கல் சரியாகிவிடும் என்பதால் துப்பாக்கி காட்டியிருக்கிறார் மற்றவர். விக்கல் சரியானதற்கு நன்றி கூறிவிட்டு செல்கிறார் முதலாமவர்.

3. அவர் கலங்கரை விளக்கத்தில் வேலை செய்பவர். விளக்கை உயிரூட்டாமல் தூங்கி விடுகிறார்.

4. கப்பலின் captain உயிரோடிருந்த மாலுமிகளுக்கு சீகல் சூப் என்று சொல்லி இறந்த மாலுமிகளின் சடலத்தை சூப்பாக்கி கொடுத்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருந்தார்.
'தன் சகாக்களை உண்டு நாம் வாழ்ந்தோம்' என்று புரிந்தவுடன் இவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

5. இன்னும் ஒரு மகனும் பிறக்கிறது அந்த தாய்க்கு. அதனால் அந்தப் பெண் குழந்தைகள் triplets.

6. அவர்கள் கணவன் மனைவி.

7. பனிக்கட்டியில் நின்று தற்கொலை செய்து கொண்டார்.

8. ஜோன்ஸ் ஒரு பந்தயக் குதிரை. (racehorse)

9. ரோஜர் ஒரு தீயணைப்புதுறை அதிகாரி. ம்யூசியத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலமை.

10. இரண்டு பேரும் நாய் குட்டிகள்.

கலந்து கொண்டு கலக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி. இதற்கு மேல் கேள்வி கேட்டு படுத்த மாட்டேன். :-)

 
At 9:02 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

Well...a clear winner did not emerge.. so, unfortunately, all her master pieces will have to continue remaining on my fridge! :-)

 
At 9:26 pm, September 19, 2005, Anonymous Anonymous said...

will give a try

1. ஜாக் ஒரு மீன். கல் பட்டு மீன் தொட்டி உடைந்து மீன் இறந்துவிட்டது.

2. அவருக்கு விக்கல். அதனால் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சியில் விக்கல் சரியாகிவிடும் என்பதால் துப்பாக்கி காட்டியிருக்கிறார் மற்றவர். விக்கல் சரியானதற்கு நன்றி கூறிவிட்டு செல்கிறார் முதலாமவர்.

3. அவர் கலங்கரை விளக்கத்தில் வேலை செய்பவர். விளக்கை உயிரூட்டாமல் தூங்கி விடுகிறார்.

4. கப்பலின் captain உயிரோடிருந்த மாலுமிகளுக்கு சீகல் சூப் என்று சொல்லி இறந்த மாலுமிகளின் சடலத்தை சூப்பாக்கி கொடுத்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருந்தார்.
'தன் சகாக்களை உண்டு நாம் வாழ்ந்தோம்' என்று புரிந்தவுடன் இவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

5. இன்னும் ஒரு மகனும் பிறக்கிறது அந்த தாய்க்கு. அதனால் அந்தப் பெண் குழந்தைகள் triplets.

6. அவர்கள் கணவன் மனைவி.

7. பனிக்கட்டியில் நின்று தற்கொலை செய்து கொண்டார்.

8. ஜோன்ஸ் ஒரு பந்தயக் குதிரை. (racehorse)

9. ரோஜர் ஒரு தீயணைப்புதுறை அதிகாரி. ம்யூசியத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலமை.

10. இரண்டு பேரும் நாய் குட்டிகள்.

enna correcta ?

 
At 9:54 pm, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

டுபுக்கு..பளாக்லே இருக்கிற நக்கல் பார்ட்டியேல்லாம் ஒரு கட்சி ஆரம்பிச்சா தலைவர் ரெடி!! :-)

enna correcta?

 
At 10:13 pm, September 19, 2005, Blogger வீ. எம் said...

அப்பா.. ஒரு வழியா நான் சொல்லிக்கொடுத்த பதிலை குழலி, மஞ்சுளா, டி. ராஜ் , சர்வ் மற்றும் சிலரும் வந்து சொல்லிட்டு போயிருக்காங்க..
எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் இவங்ககிட்ட சொல்லியனுப்பி இருந்தேன் ரம்யா அக்கா...
என்ன நான் சொன்னதை ஞாபகம் வெச்சு ஒரே ஆளா வந்து சொல்லியிருக்கலாம்.. இருந்தாலும் பரவாயில்லை.. அக்கா பதிவுக்கு 35 கருத்து வந்த்துல சந்தோஷம்..

நல்ல டீம் ஒர்க் வலைப்பூ நண்பர்களே.. வாழ்த்துக்கள்..

துளசியக்காக்கும் சொன்னேன்... ஓட்டியானம் வாங்கறதுல மறந்துட்டாங்க போல.. இந்த முகமூடியும் அப்படித்தான்.. ஞாபக மறதி அதிகம்.. சரி சரி விடுங்க..

ரம்யா அக்கா,
உங்களுக்காக 10 நாட்கள் என்ற வரையறையை மாற்றி 20 நாட்கள் காத்திருந்து பின் காணவில்லை ... போடும்படி அந்த வீ ல் ஆரம்பித்து எம் ல் முடியும் அவரை யாரென கண்டுபிடித்து சொல்லிவிடுகிறேன்....

 
At 4:53 am, September 20, 2005, Blogger சின்னவன் said...


பின்னூட்டத்தின் நாயகியே

 
At 4:57 am, September 20, 2005, Blogger Gnana Kirukan said...

ramya - I have put the blog informing my readers about ur previous post. Thanks for giving me permission to do so :).

 
At 9:59 am, September 20, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம்.. நல்ல சமாளிப்பு!! :-) 20 நாளாக்கினதுக்கு நன்றி.. இல்லைன்னா இப்படிதான் 'கடி'பட வேண்டியிருக்கும்!

Arjuna, thanks a lot!

ராஜ், ஸ்ருதி குட்டி பெயிண்டிங்ஸை பரிசா அறிவிச்சு ஒரு போட்டி நடத்திடுங்க!!

 
At 10:58 am, September 20, 2005, Blogger துளசி கோபால் said...

தான்யாவோட பெயிண்டிங் கிடைச்சது ரம்யா.
தேங்க்ஸ்.

பதிலையெல்லாம் சொல்லிக்கொடுத்தாலும், வீ.எம் இப்படிச் சொதப்பிட்டு, இன்னும் பலருக்கும் சொல்லியிருந்ததும் இப்பத்தான் தெரிஞ்சது.

ஒட்டியாணம் டிசைன் சரியா வரலைன்னு கொஞ்ச நாள் அதுலேயே பிஸியா இருந்துட்டேன்.

 
At 4:01 am, September 23, 2005, Blogger Unknown said...

Ramya,
I just sent an email to your gmail id. please check and respond.

Thank you.

 

Post a Comment

<< Home