Monday, September 12, 2005

ஒரு துண்டு துணி....





மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வோரு மாதமும் ஒவ்வோரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான். அது தான் ஸானிடரி நாப்கின். இதை ஒரு பெரிய விஷயமாக நம்மில் பலர் நினைக்க மாட்டோம். இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன், கூஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் அன்ஷு குப்தாவின் பேச்சை கேட்கும் வரை.

என் நண்பர்களோடு சேர்ந்து நான் சிங்கையில் நடத்தும் NRI Singapore என்ற ஒரு சிறு அமைப்பின் அழைப்பை ஏற்று பிப்ரவரி மாதம் அன்ஷு சிங்கைக்கு வந்தார். நாங்கள் அவர் அமைப்பின் ஸ்கூல்-டு-ஸ்கூல் திட்டத்திற்கு பண உதவி செய்து கொண்டிருக்கிறோம். ('என் முந்தைய பதிவில் அதை பற்றி எழுதியிருக்கிறேன்) அத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். "Every woman needs a clean piece of cloth for five days every month" என்று தன் பேச்சை ஆரம்பித்தவர், சமீபத்தில் கிராமங்களுக்கு சென்று, பெண்களோடு பேசி அவர் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார். சாப்பாட்டுக்கே கஷ்டபடும் மக்கள் ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்து பார்க்க முடியுமா?

'சரி, பழைய துணிகள், பஞ்சு?' என்று கேட்கலாம்.

'இரண்டே புடவைகள் இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது கூட குதிரைக் கொம்பு தான்' என்கிறார் அன்ஷு.

'அப்படியா? என்னதான் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்?'

சிலர் தரையை துடைக்க வைத்திருக்கும் துணியை உபயோகிக்கிறார்கள். சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள். சில சமயம் இரண்டு நாட்களுக்கு ஒரு துணி தான். அந்தத் துணியை பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ கூடாது. அதனால் சரியாக காயாத ஒரு அழுக்கு துணியை ஐந்து நாட்கள் உபயோகிக்க வேண்டும்! ஒரு வீட்டில் ஒன்றிர்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்! இது எப்படிப்பட்ட கொடுமை என்பது பதிவை படிக்கும் பெண்களுக்கு புரியும். இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம். "இப்படிபட்ட பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப் பெண்கள் கர்ப்பமானால் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை. அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பிவிடுகிறார்கள். இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது, " என்கிறார் அன்ஷு.

கிராம மருத்துவ நலத்திட்டங்கள் பல இருந்தும் அடிப்படையான இந்தத் தேவையை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை ஸானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்களான P&G, Hindustan Lever போன்றவைகள் தான் செய்கின்றன. இதன் விலையைப் பார்த்தால் ஒரு அத்தியாவசிய பொருளின் விலை போல இல்லை. ஒரு cosmetic பொருளின் விலை போல் தான் உள்ளது. எனக்கு தெரிந்தவரை இது சுற்றுப்புறத்திற்கும் தீங்கிழைக்கும் வகையில் தான் செய்யப்படுகிறது. அதாவது bio-degradable பொருட்களால் செய்யப்படுவதில்லை.

இதற்கு பெரிய தீர்வுகள் யோசிப்பதை விட அன்ஷுவின் செயல்படுத்தக் கூடிய திட்டத்திற்கு வருவோம். பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார் அன்ஷு. நேற்று அவரிடம் தொலைபேசியில் உரையாடினேன். "முதல் batch ரெடி. ஃபரிதாபாதுக்கு அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு சென்று பெண்களின் கருத்துக்களை கேட்டு மடலனுப்பிகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். வாரயிறுதியை உற்சாகமாக்கிய செய்தி.

நாம் அனைவரும் அவருக்கு உதவலாம். அவர் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

போன வாரம் அவரைப் பற்றி Hindu வில் வந்த செய்தியைப் படிக்க இங்கே சுட்டவும்.

யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute!

64 Comments:

At 6:52 pm, September 12, 2005, Blogger Kannan said...

ரம்யா,

தகவலுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி!

 
At 6:55 pm, September 12, 2005, Blogger குழலி / Kuzhali said...

//சிலர் தரையை துடைக்க வைத்திருக்கும் துணியை உபயோகிக்கிறார்கள். சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள். சில சமயம் இரண்டு நாட்களுக்கு ஒரு துணி தான். அந்தத் துணியை பகிரங்கமாக தோய்கவோ, உலர்த்தவோ கூடாது. அதனால் சரியாக காயாத ஒரு அழுக்கு துணியை ஐந்து நாட்கள் உபயோகிக்க வேண்டும்!
//
வெள்ளைப்படுதல் என கிராமங்களில் மிக சாதாரணமாக அழைக்கப்படும் நோயிற்கு முக்கிய காரணம் இது என கேள்விப்பட்டுள்ளேன்(பெயரை சரியாக குறிப்பிட்டுள்ளேனா என்று சந்தேகம் உள்ளது), எங்கேயோ படித்த புள்ளிவிவரம் 50% க்கும் மேற்பட்ட இந்திய கிராமத்து பெண்களுக்கு இந்த நோய் ஒரு முறையேனும் தாக்கியுள்ளதாம்.

நன்றி

 
At 6:57 pm, September 12, 2005, Blogger தாணு said...

சுனாமி நிவாரணத்துக்காக உதவ நினைத்தபோது,பழைய ஆடைகளைத் தவிர்த்து புது துணிகளாகவே தருமாறு வாலண்டியர்கள் கேட்டபோது, நாங்கள் மேற்கூறிய 3 நாட்களின் தேவைக்கு உதவட்டுமே என்று பழைய துணிகளையும் அதனுடன் அனுப்பியது நினைவுக்கு வருகிறது. பெண்களின் தேவைக்காக உதவ வந்துள்ள அவருக்கு நாமும் உதவுவோம்.

 
At 7:23 pm, September 12, 2005, Blogger மதுமிதா said...

உங்களின் ஒவ்வொரு பதிவும்
உயர்ந்த சிந்தனையை
வெளிப்படுத்துவதாகவே உள்ளது ரம்யா

இது பொன்ற விஷயத்தை தோழியரில் உஷாவும் நானும் எழுதியதாக நினைவு
இரு வருடங்களுக்கு மேல் இருக்கும்
சுட்டி எப்படித்தரணுமெனத் தெரியவில்லை

கிராமத்தில் மட்டுமல்ல நகரங்களிலும் பொருளாதார ரீதியில் அடிமட்ட
குடும்பங்களின் சிரமங்கள் எண்ணிலடங்கா

 
At 7:57 pm, September 12, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

Ramya
This matter has been bothering me for a while. i think Ramki discussed this in my blog. I had used old cloth when I was in my 17 and not only it is inconveninet, ti causes rashes. The reason why it was on my mind for a while is because a girl had kept her cloth in a roof and a centipede got in to it due to blood smell. It entered herself, bit her and she died. This happened in TN and was brought to our attention. I had written on it and was hesitating for some unknown reason and thanks for bringinging it up.
In schools in India there are no proper disposal facilities. In public places too.
This is something that needs to be addressed and it is problem in many of the countries.

 
At 8:08 pm, September 12, 2005, Blogger துளசி கோபால் said...

ஆமாம் ரம்யா. நாப்கின் வாங்கறது ஒரு பிரச்சனைன்னா அதைச் சரியான வகையில் டிஸ்போஸ் பண்ணரதுக்கும் வழி இல்லை.

சென்னை போன்ற நகரங்களிலே அடுக்கு மாடிக் குடியிருப்புகளீன் வெளீயே பிரமாண்டமானகுப்பைத்தொட்டி வைத்திருந்தாலும் சரியான முறையில் பேக் செஞ்சு போடாம
சில நாப்கின்கள் தெருவுலே காத்துலே அடிச்சுக்கிட்டுப் போறதைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கேன்.

இந்த மாடுகளும் அந்த binஐ எப்படியோ தட்டிக் கவிழ்த்திருதுங்க.அதுங்க கதை ஒரு பரிதாபம். பால் கறக்க மட்டும் உடமையாளன், பராமரிக்க இல்லை.

இதுவிஷயமா நல்லமுறையில் பரிகாரம் தேடற அந்த 'இளைஞருக்கு என் வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி ரம்யா.

 
At 10:43 pm, September 12, 2005, Blogger Aruna Srinivasan said...

//யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute! //

ரம்யா, உங்களுக்கும் இதேப் பாராட்டும் நன்றியும் - இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு

 
At 12:17 am, September 13, 2005, Blogger dinesh said...

This comment has been removed by a blog administrator.

 
At 12:32 am, September 13, 2005, Blogger dinesh said...

Indha maadhiri yaarum yosikkaadha vishayangal a patri yosikkira avarukku oru salute. Problem a mattum eduthu sollittu, solution - left to the readers nu vidaama, adhukku oru solution a kuduthu, how to help nu solli, comprehensive a seyyara avarukkum ungalukkum, oru periya salute.

Wonderful !

I have written directly to him, to find out how we can help. Hope to hear from him soon.

Thanks !

 
At 12:54 am, September 13, 2005, Blogger தெருத்தொண்டன் said...

ஆம் தேன் துளி, ராம்கி உங்கள் பதிவில் பேசியிருந்தது அந்நாட்களில் வீட்டிற்குள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவது குறித்து..கழிப்பறைக்கு அருகில் சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்லும் உயர்கோட்பாடு குறித்து..சொந்த வீட்டிலேயே அனாதையாகும் அவலம் குறித்து..

 
At 8:45 am, September 13, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி கண்ணன்.

குழலி, நீங்க சொல்வது ஒரு விதமான infection என்று நினைக்கிறேன். டாக்டர் என்பதால் தாணுவிற்கு தெரிந்திருக்கும்.

தாணு, சுனாமியின் பொழுது வந்த துணிகள் சென்னையில் Govt. godownகளில் டன் கணக்கில் குவிந்திருக்கின்றன. அதை sort செய்து, distribute செய்ய சில மாதங்களுக்கு முன் அன்ஷு அனுமதி பெற்றார். பணத்தட்டுப்பாட்டால் அவரால் இன்னும் அத்தனை துணிகளையும் பகிர்ந்தளிக்க முடியவில்லை.

உங்கள் பாராட்டுக்கு நன்றி, மதுமிதா. நான் கேள்விப்படுவதை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவு தான். தோழியரில் சென்று பார்க்கிறேன்.

 
At 9:03 am, September 13, 2005, Blogger Ramya Nageswaran said...

பத்மா, நீங்கள் சொன்ன பயங்கரத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும், துளசிக்காவும் சொல்வது போல் இதை பொறுப்பாக dispose செய்வது ஒரு பிரச்சனை தான்.

அருணா, நன்றி.

தினேஷ், அவரை தொடர்பு கொண்டது குறித்து ரொம்ப மகிழ்ச்சி. நிர்வாகத்தை பொறுத்த வரை அவர் ஒரு one man show. பெரிய நகரங்களில் அவரின் அமைப்புக்கு volunteers தேடிக் கொண்டிருக்கிறார்.

தெருத்தோண்டன், நீங்க நினைவூட்டியது இந்தப் பிரச்சனையின் வேறோரு பரிமாணம்.

 
At 9:30 am, September 13, 2005, Anonymous Anonymous said...

Thank you for the info.
It is indeed a noble effort. It needs the supportbof all who care for the environment. May God bless the initiative.
I will explore how I could contribute effectively to this admirable initiative.
Peter Johnson
Kuala Lumpur.

 
At 12:08 pm, September 13, 2005, Anonymous Anonymous said...

ரம்யா.. சுபாவின் இணையதளத்திலிருந்து வந்தேன். மிக அருமையாக எழுதுகிறீர்கள்.. சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன எல்லாமே. அடிக்கடி வருவேன்..

 
At 2:52 pm, September 13, 2005, Blogger Ramya Nageswaran said...

டி ராஜ், நன்றி..எங்கள் குழுவைப் பற்றி வேறோரு சமயம் எழுதுகிறேன்.

Peter Johnson, thank you for your offer of support to Anshu Gupta.

GP, மிக்க நன்றி..சுபா யாரேன்று தெரியவில்லை. அவர் வலைப்பதிவிற்கு சுட்டி தர முடியுமா?

 
At 3:34 pm, September 13, 2005, Blogger அன்பு said...

மனதை மிகப் பிசையும் ஒரு பதிவு. பதிவிலும், பின்னூட்டங்களிலும் கூறப்பட்ட விடயங்கள் ஊரில் பார்த்து/கேள்விப்பட்டிருந்தாலும் - இன்றுவரை தீட்டு என்ற ஒற்றைச்சொல்லாகவே அறிந்திருந்தேன் - அதனுடைய மறுபக்கம், தாக்கம் இன்றுதான் உணரமுடிகிறது. என்னசெய்வது/சொல்வது என்றே தெரியவில்லை - முடிந்த உதவி செய்கிறேன்.

இளையர் அன்ஷு-க்கு பாராட்டுக்களும், அதை எங்களுக்கு கொண்டுசேர்த்த உங்களுக்கு நன்றியும்.

 
At 4:26 pm, September 13, 2005, Anonymous Anonymous said...

இது போன்ற விசயங்களை எதிர்கொள்வதும், பேசுவதும், வெளிக்கொணர்வதுமே அவ்விசயங்களை சூழ்ந்துள்ள கற்பிதங்களை மாற்ற உதவும். அவ்விதத்திலே உங்களுக்கும் நன்றி!

 
At 4:51 pm, September 13, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

ரம்யா....

தெரியாத, தெரிஞ்சுக்கணும்னு நினைக்கக் கூட செய்யாத பெண்கள் பிரச்சினைகளை முன் வைக்கிறீர்கள். கொஞ்சம் நெகிழ்வாகவும் பல சமயம் வேதனைப்படவும் வைக்கின்றன உங்களுடைய பதிவுகள். இத்தனையும் மீறி சில ஆண்கள் அரங்கேற்றும் தொந்தரவுகள் என பெண்களின் துயரங்கள் நீளுகின்றன. மாதமொருமுறை பாக்கெட்டில் பணமில்லையென்றாலே குதிப்பேன். மாதமொருமுறை காலையில் குடிக்கும் காபி பவுடர் தீர்ந்து விட்டாலே வீட்டில் ரணகளம் தான்.

அப்போ எல்லாம் கேட்டது எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த மாதிரி விஷயங்கள கேட்கக்கூட முடியாம .... there are manything for me to look and think regarding women.

23 வயசில கொஞ்சம் முதிர்ச்சி அடைஞ்சதாகவே உணர்ந்திருக்கிறேன். ஆனா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என உங்கள் பதிவைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் சிந்திக்கிறேன். அது உங்கள் வெற்றி.

உங்கள் பதிவின் நோக்கமும் நிறைவேற வாழ்த்துக்கள்

 
At 6:27 pm, September 13, 2005, Blogger தாணு said...

இந்தக்கால மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், etc,etcவும் அப்போதைய தங்கள் தாவணிப் பருவங்களில் இதுபோன்ற நெகிழ்வான தருணங்களைத் தாண்டியே வந்திருக்கிறோம். நாம் பட்ட கஷ்டங்கள் நம் குழந்தைகள் படக் கூடாதென்று அதற்கு மாற்று செய்ததைத் தவிர active ஆக வேறு எதுவுமே செய்யவில்லை என்ற உணர்வு இந்த பதிவை வாசித்தது முதல் மனதைக் குடைகிறது.
சரிவர சுத்தம் செய்யத் தெரியாமலும், அதைச் சொல்லித்தரும் விவேகம் நிறைய அன்னையரிடம் இல்லாததாலும்
பெண்குழந்தைகள் நிறைய கிருமி தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். வெள்ளை படுதலும் அதில் ஒரு பகுதியே! விலையுயர்ந்த உள்ளாடைகளை `நாயுடு ஹால்' போன்ற பாஷ் கடைகளில் வாங்கித் தருவதில் காட்டும் ஆர்வத்தை, அதை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுப்பதில் காட்டுவதில்லை, நிறைய அன்னையர்!

 
At 8:38 pm, September 13, 2005, Anonymous Anonymous said...

உண்மை மனதை என்னவோ செய்கிறது.

யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute!

உங்களுக்கும் தான்..

 
At 10:43 pm, September 13, 2005, Blogger Ramya Nageswaran said...

அன்பு, தங்கமணி, டுபுக்கு..நன்றி.

கோ. கணேஷ்..உங்கள் புரிதல் குறித்து மிக்க மகிழ்ச்சி.

தாணு, நேரம் இருக்கும் பொழுது ஒரு தாய் சொல்லித் தர வேண்டிய முக்கிய குறிப்புகள் பற்றி ஒரு பதிவு போடலாமே நீங்க..

 
At 11:30 pm, September 13, 2005, Blogger வீ. எம் said...

நல்லதொரு பதிவு ரம்யா,
இந்தியாவின் பல ஏழைகள் வீட்டிலும் இதே நிலை தான்..
தேவையற்ற பல விஷயங்களை செய்யும் அரசாங்கம்.. இதற்கு ஏதாவது செய்யலாம்..!

 
At 2:11 am, September 14, 2005, Blogger தருமி said...

ரம்யா, இரண்டொரு மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு napkins செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக செய்தித் தாளில் படித்தேன்.

 
At 2:50 am, September 14, 2005, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ரம்யா, மிகவும் நல்ல பதிவும் செயலும். அந்த இளைஞரின் செயல்பாடுகளும் போற்றத்தக்கதே. இது போன்ற பிரச்சினைகளும் பலரும் அறிய வெளிக்கொணர்வதும் முக்கியம். லேசாக ஈரம் பட்ட உள்ளாடையை நீண்ட நேரம் அணிந்திருந்தாலே உண்டாகும் எரிச்சலை எண்ணும்போது...

 
At 10:22 am, September 14, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

தகவலுக்கும் சுட்டிகளுக்கும் பதிவுக்கும் நன்றி!

 
At 1:14 pm, September 14, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம், செல்வராஜ், ஷ்ரேயா.. பதிவை படித்த உங்களுக்கு நன்றி.

தருமி, அந்த அமைப்போட பெயர் தெரியுமா? இருவரும் அவரவர் அனுபவப் பாடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

 
At 11:12 pm, September 14, 2005, Blogger Maravandu - Ganesh said...

அன்புள்ள ரம்யா

மிகவும் நல்ல பதிவு, அன்ஷூ உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர் .
நான் முன்பு எழுதிய கவிதை ஒன்றில், இந்தப் பதிவோடு சம்பந்தப்பட்ட விஷயத்தை
நாசூக்காக எழுதியிருக்கிறேன் . இது கிராமத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளில் ஒன்று .
பெண்கள் * சுத்தமாக * இல்லையென்றால் வீட்டிற்குள் தேள் , பாம்பு ஏதாவது வந்து விடும்
என்று சொல்வார்கள் .
இதோ முழு கவிதையும் .. (இந்தக் கவிதை தினம் ஒரு கவிதையில் பிரசுரமானது)


மூட(ர்) நம்பிக்கை
--------------------

அரிசிய அதக்காத புள்ள
கல்யாணத்தன்னைக்கு
அடை மழை பிடிக்கும்

கால ஆட்டாதடா படுவா..
வூட்டுக்கு ஆவாது ..

புல்லறுக்கப் போற பொம்பளைக
**சுத்த பத்தமா** போகனும்
இல்லாங்காட்டி
பூச்சி கீச்சி பின்னாலேயே
வந்துப்புடும்

ஒத்தப் புளியமரம்
பக்கம் போகாதீக
முனி அடிச்சுப்புடும்......


இப்படி ஏதாவது
கோளாறு சொல்லிக்கிட்டுக்
கிடந்த அப்பத்தா......

ஊசியாய் குத்தும்
மார்கழிப் பனி இரவொன்றில்
சொல்லாமல் கொள்ளாமல்
பொசுக்கென்று போய்விட்டாள் ..

ராவுல நாய்
ஊளையிடும் போதே
எனக்குப் பட்டுச்சுன்னு
புலம்பிக்கிட்டார் தாத்தா !!

என்றும் அன்பகலா
மரவண்டு

 
At 11:33 pm, September 14, 2005, Anonymous Anonymous said...

This is a test

 
At 3:19 am, September 15, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

good post, you have written well about a sensitive issue.

 
At 2:00 pm, September 15, 2005, Blogger Ramya Nageswaran said...

கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மரவண்டு கணேஷ்.

நன்றி ரவி.

 
At 10:36 pm, September 15, 2005, Blogger ச.சங்கர் said...

அன்புள்ள ரம்யா நாகேஸ்வரன்,
நல்ல பதிவு மற்றும் தகவல்கள்,
HLL போன்ற நிருவனங்களுக்கு இந்திய
கிராமப்புரங்களைப் பற்றி என்ன கவலை.அவர்கள் லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடியவர்கள்.மனிதாபிமானம் கிலோ என்ன விலை?வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்குமா என யோசிக்கக் கூடியவர்கள்.
அன்புடன்...ச.சங்கர்

 
At 6:34 am, September 16, 2005, Blogger Murali said...

Hello Ramya
Thanks for your article on a sensitive topic.

From URL:
http://www.tn.gov.in/policynotes/rural_development.htm
#

Personal hygiene needs of women are taken care of by one Self Help Group in each Block. Over 100 Women’s Self Help Groups are engaged in the production of sanitary napkins which are marketed in Women Sanitary complexes, Girls Schools, Self Help Group Melas and Hospitals. The availability of easily disposable sanitary napkins has, in particular, contributed to reducing the number of girl dropouts in high and higher secondary schools.
#

Facilities in the form of incinerators have been provided for the safe disposal of used sanitary napkins in all girls' schools and women’s sanitary complexes. So far 6,923 Incinerators have been provided in women’s sanitary complexes and girls' schools.
-------------------
I do hope the info is true and if so, it is a good step in the right direction.

Murali

 
At 8:05 am, September 16, 2005, Anonymous Anonymous said...

Ramya,

thanks for the article. I was using cloths myself until I went to college. oneday, i had an embarassing situation because of that and I decided to change to napkins. I had tough time convincing my mother for that also. she from yester generation never understood the convenience of napkins. the next thing is the cost involved, a small pack causes easily about Rs. 100/- minimum, an average house hold cannot spend monthly Rs. 200/- for this. they will definitely think washable cloths better, especially in houses with two, three girls.

cloths can be used but with proper hygenic methods, proper washing and storing them for the next use. if not the contamianted dirty cloths will cause UTI, skin rashes and fungal infections.

Raj

 
At 8:25 am, September 16, 2005, Blogger Ramya Nageswaran said...

உங்கள் வருகைக்கு நன்றி சங்கர்.

முரளி, தகவலுக்கு நன்றி. இந்த விஷயத்தை யோசித்து ஒரு திட்டம் தீட்டி இருப்பதே சந்தோஷமான விஷயம். எல்லா கிராமங்களுக்கும் போய் சேருமா என்பது கேள்விக் குறி.

ராஜ், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

 
At 4:44 pm, September 16, 2005, Blogger Gnana Kirukan said...

ramya - that was a nice post..Can I put the link u put in my blog as well - so that ppl who read my blog may be able to help him..let me know..

 
At 5:51 pm, September 16, 2005, Blogger Ramya Nageswaran said...

Arjuna, please do.. no need to ask my permission at all.. we all need to come together to make at least a small but meaningful difference in the lives of fellow human beings.

BTW, saw your profile..interesting!!

 
At 11:28 pm, September 16, 2005, Blogger வீ. எம் said...

என்ன அக்கா 4 நாளாச்சு, காணவில்லை ..காணவில்லை.. பதிவு போட்டுடலாமா??

 
At 1:41 am, September 17, 2005, Blogger தருமி said...

அந்த SHG பெயரைக் கண்டு பிடிக்க முற்சிக்கிறேன்.

ஆனாலும், இந்த "காணவில்லை" போஸ்டர் அடிக்கிற ஆளோட லொள்ளு தாங்கவில்லை; இல்ல?

 
At 8:59 am, September 17, 2005, Blogger Ramya Nageswaran said...

தருமி..நன்றி. அன்ஷுவுக்கு அவர்க்ளைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

யப்பா..வீ.எம் தம்பி... நாலு நாளைக்கு ஒரு பதிவு போடறதுக்கேல்லாம் விஷயம் இல்லே நம்ம கிட்டே.. பத்து நாளைக்கு ஒண்ணு போட்டா பெர்ய விஷயம்! :-)

ஒரு மாசத்துக்கு சத்தம் வரலைன்னா போட்டுடலாம் காணவில்லைன்னு!! :-)

 
At 9:31 am, September 17, 2005, Blogger Unknown said...

தருமி,
மதுரையில் ஒரு இடத்தில் பெண்கள் அமைப்பு குறைந்த விலையில் சானிடரி நாப்கின்களை செய்து கொடுக்கிறது. நான் பல நாட்களுக்குமுன் எங்கோ படித்த ஞாபகம். விசாரிக்க முடியுமா?
அவர்களை இந்த இளைஞருடன் தொடர்பு கொள்ளச் செய்யலாம்.

ரம்யா,
நல்லவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி.

 
At 3:37 pm, September 17, 2005, Blogger Ramya Nageswaran said...

பலூன் மாமா, உங்கள் வருகைக்கு நன்றி. தருமி நீங்க சொன்ன செய்தியை தன்னுடைய முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கார்.

 
At 5:34 pm, September 17, 2005, Blogger Gnana Kirukan said...

"BTW, saw your profile..interesting!! "

Thanks ramya and I have blogrolled u :)

 
At 6:52 pm, September 17, 2005, Blogger Chandravathanaa said...

அதென்ன ஒரு துண்டு துணி என்று பார்த்தால் இப்படியொரு விடயம்.
நான் கூட இது பற்றிப் பெரிதாகச் சிந்தித்ததில்லை. வறுமைக் கோட்டுக்குள் வாழும்
பெண்களுக்கு இப்படியொரு பிரச்சனையும் இருப்பது இப்போதுதான் என் கவனத்துக்குள்ளும் வந்தது.

நன்றி ரம்யா இப்படியான விடயங்களை மற்றவர்களின் சிந்தனைக்கும் தருவதற்கு

 
At 9:51 pm, September 17, 2005, Blogger Ramya Nageswaran said...

Arjuna, thanks :)

உங்கள் வருகைக்கு நன்றி சந்திரவதனா.

 
At 1:02 am, September 18, 2005, Blogger ஒரு பொடிச்சி said...

//இத்தகைய அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் எத்தனை எத்தனை. நாம் பல நேரங்களில் இவற்றை செளகரியமாக மறந்தேபோகிறோம்.//
உண்மை.
உஷா எழுதியது படிக்கவில்லை.
இங்கும்தொடர்பாக கொஞ்சம் பேசப்பட்டிருந்தது.
மிக்க நன்றி ரம்யா.
நமது வட்டத்துக்குள் வராத பிரச்சினைகளைப்பற்றி நாம் யோசிப்பதேயில்லை என்பது உறைக்கிறது.

 
At 9:07 am, September 18, 2005, Blogger Ramya Nageswaran said...

வாங்க, பொடிச்சி..கருத்துக்களுக்கும், சுட்டிக்கும் நன்றி..படிக்கிறேன்.

 
At 11:08 am, September 18, 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்தப் பதிவுக்கு நன்றி ரம்யா!

நிறைய யோசிக்க வைத்தது. இதைப்பற்றி இதற்கு முன்பு யோசித்ததில்லை என்பதை நினைக்க வெட்கமாகவும் இருக்கிறது.

உங்கள் பதிவைப் படிக்கும்போதே ஈழத்தில் போர்க்காலத்திலும் இடப்பெயர்வு சமயத்திலும் பெண்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசித்தேன். இடப்பெயர்வு சமயத்தில் ஒரு தாய்க்கு ஏற்பட்ட அனுபவமாக குந்தவையின் கதை படிக்கக் கிடைக்கிறது. ஆனால், இம்மாதிரியானவை பதிவு செய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. பதிவு செய்வதை விட முக்கியம், ஏதாவது செய்வது. அப்படி செய்யப்பட்டதாவென்றும் தெரியவில்லை. சாதாரண பொதுமக்களை விடுத்து, போராட்டத்தில் பங்குபெறும் மகளிர் என்ன செய்தார்கள் என்று யோசித்தேன்.

நன்றி ரம்யா.

-மதி

 
At 1:57 pm, September 18, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி மதி..நீங்களும், பொடிச்சி கொடுத்த சுட்டியில் சொல்லியிருக்கிற பெண்களின் நிலையை நினைத்தால் ரொம்ப வருத்தமா இருக்கு.

நம்மால் இயன்ற வரை தீர்வு காண முயற்சிப்போம். சில சமயம் நாம் செய்வது கடலில் கரைத்த பெருங்காயம் என்று எனக்கு தோன்றினாலும் இருட்டை பழிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்றி வை என்பது ஞாபகத்துக்கு வரும்.

 
At 8:19 pm, September 18, 2005, Anonymous Anonymous said...

Thanks a lot for comments and suggestions. I don't understand Tamil but am very keen to know everything which is written here. Ramya translated some of these and I could gather a lot of info from that..this helps me to understand the subject better ..if possible do write the same in english also to my email id..

Anshu K. Gupta ( Ashoka Fellow)
Founder- Director, GOONJ..

 
At 1:47 am, September 19, 2005, Blogger மு. மயூரன் said...

நல்ல சிந்தனை,
நான் சிந்தித்துப்பார்த்திராத ஒரு பக்கத்தை நோக்கிய பார்வையை தந்தமைக்கு நன்றி..

 
At 9:07 am, September 19, 2005, Blogger Ramya Nageswaran said...

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மயூரன்.

 
At 2:49 pm, September 25, 2005, Blogger தருமி said...

"மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்."
இந்த அமைப்பினைப்பற்றி மேலும் விவரங்களை அறிய முயற்சி எடுத்துள்ளேன். கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.
'கல்வெட்டில்' பதிந்ததின் நகல் இது.

 
At 11:00 pm, October 05, 2005, Blogger ammani said...

Ramya! Pramaadam! Tamizh font illadadal English-il thodarugiren...
Loved your entries. This one particularly. It has been my dream to do something like this for our women in the villages. I remember reading about a young girl who was bitten by a scorpion which had hidden itself in the piece of sanitary cloth which she had left out to dry on her roof. What a shame that we are not providing the basic sanitary requirement for our women. And it has taken a man to come up with a cheap and affordable solution. Kandippa yedaavadu help pannanum.
Great blog. Keep them coming.

 
At 7:22 pm, October 10, 2005, Blogger கலை said...

மிகவும் அருமையான, மனதை தொடும் கட்டுரை. வாழ்த்துக்கள் ரம்யா. நாமெல்லாம் இதைப்பற்ரியெல்லாம் அதிகம் சிந்திக்காமல் இருந்துவிட்டோம் என்பது உண்மையில் வெட்கப்பட வைக்கிறது. அந்த இளைஞனுக்கு மனமார்ந்த நன்றிகள்.

 
At 9:10 pm, October 10, 2005, Blogger Ramya Nageswaran said...

Ammani, I saw your response only today. Thanks a lot..I have also seen your effort to help Project WHY. Great job!

கலை, உங்க ஊக்க மொழிகளுக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டை அவருக்கு நிச்சயம் தெரிவிக்கிறேன்.

 
At 9:15 pm, October 10, 2005, Anonymous Anonymous said...

I have never posted a comment for any blog before, eventhough i am reading them for about 6 months now. I can't stop myself from posting a comment for this blog. This is just the kind of blogs that i expect to see everyday. This is an excellent piece of thought and action by Goonj and Thanks a lot Ramya for bringing this up here.

 
At 10:58 pm, October 10, 2005, Blogger Ramya Nageswaran said...

Sukumar, Anshu will be very happy to hear that you have chosen this article to write your first comment! Thanks a lot for your kind words of appreciation. I am glad Anshu's work has reached many good souls.

 
At 5:42 am, October 12, 2005, Blogger Me too said...

Came here blog-hopping! Very affecting post! In this 21st century, with so much developments that we boast about, it aches to find women folk still struggling.

 
At 4:55 am, October 31, 2005, Anonymous Anonymous said...

Mikavum Avasiyamaana Mukkiyatthuvam Vaaynthap Pirachanai Ithu! Namathu Ammakkalum,Sakotharikalum Maathaamatham Etthakaiya Pirachanaikalai Santhithu Varukiraarkal Enbathai Sinthikkumpothu ... appapaa...Udanadiyaaka Itharkkoru Theervuk kandaaka Vaendum...Itharkkentru Oru Vizippunarchi Piraachchaara Iyakkam Erppaduvathu Avasiyam.....

 
At 9:01 pm, November 02, 2005, Blogger சிங். செயகுமார். said...

உங்கள் கதையினை படித்தபின் கொஞ்சம் அசந்து போய்ட்டேன் .உங்களை போல நல்ல உள்ளங்கள் வார்த்தையோடு இல்லாமல் செயலிலேயும் அதே வேகத்தை பார்க்கும் போது ரியலி .யு ஆர் கிரேட்.வாழ்த்துக்கள் ரம்யா. நல்ல விஷயங்கள் காலத்தால் என்றும் அழியாது.பரிசு இல்லாவிட்டல் என்ன? பரிசுத்தமான அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு போதுமே!

 
At 10:37 pm, November 02, 2005, Blogger Ramya Nageswaran said...

me too..saw your comment only now. Thanks!

ஹமீத் அவர்களே நன்றி. தப்பா நினைக்க மாட்டீங்கங்கிற நம்பிக்கையிலே ஒரு கோரிக்கை. ஈ-கலப்பை download பண்ணிடுங்களேன். இந்த தங்கிலிஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

செயகுமார், உங்க அன்பான ஊக்கத்திற்கு மிக்க நன்றி. நானும், கணவரும் சின்னச் சின்ன உதவிகள் தான் முதலில் செய்ய ஆரம்பித்தோம். இப்பொழுதும் நண்பர்களின் உதவியோடும், ஊக்கத்தாலும் தான் சற்றே பெரிய விஷயங்கள் செய்ய முடிகிறது.

உங்களால் தூங்கிக் கொண்டிருந்த என்னுடைய பல பதிவுகள் மீண்டும் ஒரு பவனி வருகின்றன. அதற்காக இன்னோரு நன்றி!!

 
At 9:46 pm, November 25, 2005, Blogger Paavai said...

Hats off to Anshu and you for creating this awareness and action. Govt can supply these bio degradable product manufactured by self help groups through PDS (ration shops).

 
At 6:10 pm, April 11, 2006, Anonymous Anonymous said...

Hi Ramya,

Pl go thru the below link with regard to your subject.

http://epaper.tamilmurasu.in/2006/A
pr/07/16.html

 
At 4:41 pm, September 01, 2008, Blogger ஜோசப் பால்ராஜ் said...

மிக மலிவான விலையில் நாப்கின் தாயாரிப்பது குறித்து இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளேன். உங்கள் நண்பரும், சமூக சேவகருமான அனுஷ் அவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.
http://maraneri.blogspot.com/2008/09/blog-post.html

 

Post a Comment

<< Home