Wednesday, October 05, 2005

ஒரு Green திருமணம்

வேலூர் ஸ்ரீநிவாசன் என்ற நண்பரை அறிமுகம் செய்யணும்னு வெகு நாட்களா நினைச்சுகிட்டிருந்தேன். வலைப்பதிவர்கள் பலர் தங்களுடைய திருமணம் பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்ட பொழுதே ஏற்பட்ட எண்ணம். இன்னும் சில கல்யாணம் ஆகாத தம்பிகள், தங்கைச்சிகள் இருக்காங்களே. அவங்க தங்களுடைய திருமண கொண்டாட்டங்களை திட்டமிடும் பொழுது இவரை கொஞ்சம் ஞாபகம் வைச்சுக்கங்க.

இவரைப் பற்றி பல நண்பர்கள் மூலம் தெரியும். போன வருஷம் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. சுற்றுப்புற சுகாதாரத்தில் மிகவும் ஆர்வமுள்ள இளைஞர். வேலூர் மலைகளைப் பச்சையாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதைத் தவிர கழிவு பொருட்களை கவனமாக அகற்றுவது, அனாதையாக அலையும் பசு மாடுகளை காப்பாற்றி அவற்றின் சாணத்திலிருந்து எரி பொருள் தாயாரிப்பது போன்ற பல விஷயங்களில் இவருக்கு ஆர்வம். இவரின் பணி பற்றிய சுட்டி இங்கே.

இவருக்கு இந்த வருடம் திருமணம் நடந்தது. அதைப் பற்றி அவருடைய தோழி சங்கீதா ஸ்ரீராம் அனுப்பிய மடல் இதோ:

Friends,

Many of you might be knowing that Vellore Srinivasan's wedding took place in Vellore on the 24th of April, last Sunday. It was declared a 'green wedding' since a SHG specially formed to handle waste generated in Marriage Halls took plantain leaves to cattle in the Vellore collectorate, food waste for composting, left over food to orphanages. There was no use of disposable plastic or paper containers / sheets. Packets of vermicompost, vegetable seeds and tree saplings were given to everyone who attended the wedding. And an exhibition on environment was held near the entrance. And so on.... W hen asked what he would like for a wedding gift, Srini suggested sponsorship for a vegetable roof garden in his own newly bought house in Vellore.

நாம் அனைவருமே இதை எல்லா விசேஷங்களுக்கும் இது போன்ற முயற்சிகளை செய்யலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்திய மடல்.

பொதுவாக திருமணம்/பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களின் பொழுது இருக்கிறவங்க இருக்கிறவங்களுக்கே பரிசு பொருட்கள் அல்லது பணமாக அன்பளிப்பு தருவது எனக்கு அவ்வளவா உடன்பாடில்லாத விஷயம். முக்கியமாக சிங்கையில் குழந்தைகளின் பிறந்த நாள் ஒரு சின்ன கல்யாணம் போலவே கொண்டாடப்படுகிறது. நாம வாங்கித் தர்றது போதாதுன்னு பல விளையாட்டுச் சாமான்கள் (பாதி உருப்படாதவை!) வந்து குவிந்துவிடும். தன்யாவின் சமீபத்திய பிறந்த நாளை ஆடம்பரமில்லாமல் கொண்டாட முடிந்தது (அவள் சம்மதத்துடன் தான்). அதில் மிச்சப்படுத்திய டாலர்களை ஒரு தொண்டு நிறுவனதிற்கு அனுப்ப முடிந்தது.

நண்பர்கள் சிலர் திருமணச் செலவை குறைத்துக் கொண்டோ அல்லது பரிசு பொருட்கள் தரும் அன்பர்களை பணமாக கொடுக்க சொல்லி சில நல்ல காரியங்கள் செய்தார்கள் . இதோ சில உதாரணங்கள்:

1. மரங்கள் இல்லாத பகுதி/சாலையை தேர்ந்தேடுத்து மரக் கன்னுகள் நடுவது. மரம் நட முக்கியமாக தேவைப்படும் விஷயம்: Tree guards. அதற்கான செலவை ஏற்றுக் கொண்டால் இந்த இரு தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு சென்னையில் மரம் நடலாம். இவர்களின் சுயநலமில்லாத செயல் நம் எல்லோரையும் நிச்சயம் ஒரு கணமாவது யோசிக்க வைக்கும்.

2. கிராமங்களில் ஊரணிகளை புதுப்பிக்கலாம். இதற்கு சுமாராக ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை செலவாகும். ஒரு ஊரணியை சரியான முறையில் புதுப்பிச்சா ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதில் தண்ணீர் வந்து வருடம் முழுவதும் தண்ணீர் கஷ்டமில்லாம இருக்கும். உங்க திருமண ஆண்டு நிறைவின் பொழுது ஒரு கிராமமே தண்ணி பஞ்சம் இல்லாம இருக்குங்கிற உணர்வை விட வேறு பெரிய பரிசு ஏதாவது இருக்க முடியுமா? இதைச் செய்யணும்னா இதோ இவங்களோட தொடர்ப்பு கொள்ளலாம்.

3. நீங்க படிச்ச பள்ளி/காலேஜுக்கு ஏதாவது செய்யலாம். அல்லது உங்க வீட்டு கிட்டே இருக்கிற அரசு பள்ளிக்கு ஏதாவது உதவலாம். உதாரணமாக கழிப்பறைகள் கட்டிக் கொடுப்பது, கணினிகள் கொடுப்பது, சிறிய நூலகம் கட்டிக் கொடுப்பது.

4. தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்: கிட்டதட்ட 30 குழந்தைகள் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் (பால்வாடி) கட்டை அடுப்பை உபயோகப்படுத்தி தான் சமையல் செய்கிறார்களாம். அதனால், தினமும் 5 வயதிற்கும் கீழ் உள்ள இந்த குழந்தைகள் அடுப்பு புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயம். தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் ரூ.12,000 செலவு செய்தால் ஒரு காப்பகத்திற்கு காஸ் அடுப்பு, சிலிண்டர் இணைப்பு கொடுத்து, பிரஷர் குக்கர் வாங்கிக் கொடுத்து, பெயிண்ட் அடித்து கொடுக்கிறார்கள் (புகையால் சுவர்கள் பாதிக்கப்பட்டதனால்).

கொஞ்சம் யோசிச்சா நிச்சயமா செய்யக்கூடியது நிறைய இருக்கு. தனியா இதுக்கு பணம் ஒதுக்க முடியலைன்னாலும் விசேஷங்கள் வரும் பொழுது செஞ்சா எப்படியும் செய்யப் போகும் செலவை சமூக அக்கறையோட செய்யலாம்.

"ஆமா..நம்ம நாட்டிலே இருக்கிற கஷ்டங்களுக்கு இதெல்லாம் எந்த மூலைக்கு? கடல்லே கரைச்ச பெருங்காயம்'" அப்படின்னு சில சமயங்களிலே ஒரு ஆயாசம் வரும். அப்போ இந்தக் கதையை நினைவு படுத்திக்கலாம்:

There once was an old man who was walking along a seashore filled with starfish which had been washed ashore. Thousands and thousands of them lined the shore, struggling to make it back to the water. A small boy was throwing the starfish one by one back into the water.

In amazement the old man approached the boy and said to him: "My dear boy, there are thousands and thousands of starfish on this seashore! Do you think that you could possibly make a difference? It seems rather hopeless and most of them will surely die!"

The boy looked up as he threw another one back into the sea and said to the man, "I made a difference to this one."

43 Comments:

At 10:45 pm, October 06, 2005, Blogger வீ. எம் said...

ரம்யா அக்கா
நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு .. விசேஷ நாட்கள் மட்டுமல்லாது, சாதாரனமாகவே இது போன்ற விஷயங்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம் . இந்த word verification எடுத்துடுங்களேன்..தம்பியின் வேண்டுகோள்.. :)

 
At 10:49 pm, October 06, 2005, Blogger Unknown said...

ரம்யா அருமையான தகவல்கள். மிக்க நன்றி.
உங்களிடம் உள்ள சேவை அமைப்புகளின் செய்திகளை எல்லாம் தொகுத்து இந்த மாதிரி தகவலுக்காக ஒரு பிளாக் போட்டால் என்ன?
ஏற்கனவே இந்தியாவிற்காக ஏதாவது செய்ய விருப்பமா? http://ramyanags.blogspot.com/2005/07/blog-post_16.html என்று ஒரு சிறப்பான தகவல் வழங்கியிருந்தீர்கள்.

 
At 11:42 pm, October 06, 2005, Blogger டி ராஜ்/ DRaj said...

Cliché தான். அனாலும் சொல்லாமல் இருக்கக்கூடாது. நல்ல பதிவு ரம்யா. ஆங்காங்கே தனிதனியாய் நல்லது செய்யும் நண்பர்களை கண்டு, மேலும் பலரும் இப்பணியில் கலந்து, இது ஒரு மாபெரும் இயக்கமாக மாறினால் எவ்வளவு நல்லா இருக்கும்?

 
At 11:47 pm, October 06, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

ரம்யா,

என்னுடைய வேலூர் பற்றிய பதிவிலேயே திரு. ஸ்ரீனிவாசனைப் பற்றி நீங்கள் கொடுத்திருந்த சுட்டி வியக்க வைத்தது. இப்போது அவர் திருமணம் நடந்த முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இது போன்ற நபர்கள் மேலும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.

 
At 12:28 am, October 07, 2005, Blogger தாணு said...

ரம்யா,

தேவையற்ற, மனவருத்தம் தரும் பதிவுகளையே பார்த்து monotony வந்திருந்த வேளையில் உங்க பதிவு நல்ல ஊக்கம் தரும் விருந்து. விளம்பரமற்ற உதவிகளுக்கு நல்ல துணை உங்கள் தகவல்கள். நன்றி ரம்யா.

 
At 1:28 am, October 07, 2005, Blogger முகமூடி said...

நல்ல பதிவு ரம்யா. தன்னார்வலர்களை பற்றிய சுட்டிகளுக்கு நன்றி.

 
At 1:43 am, October 07, 2005, Blogger Suresh said...

நல்ல பதிவு.. பதிவுக்கு நன்றி ரம்யா!! நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பதிவில் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

 
At 1:54 am, October 07, 2005, Blogger inomeno said...

nandri

 
At 2:02 am, October 07, 2005, Blogger inomeno said...

Ramya,
Could u send his(Srinivasan) contact details to inomeno@yahoo.com ?

 
At 5:34 am, October 07, 2005, Blogger இராதாகிருஷ்ணன் said...

நல்ல தகவல்கள், நன்றி!

 
At 6:28 am, October 07, 2005, Blogger Unknown said...

மகளிர் சுய உதவி குழுக்கள் கூட தோற்றுவிக்கலாம். ரம்யா நல்ல பதிவு., உதவிகரமான தகவல்கள். நன்றி

 
At 7:12 am, October 07, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

அருமையான அவசியமான பதிவு.

தொண்டு நிறுவனக்களைப் பற்றிய விவரம் கொடுங்களேன்.
எதாவது செய்யமுடியலாம்.

 
At 3:41 pm, October 07, 2005, Blogger CrazyTennisParent said...

திருமதி ரம்யா அவர்களுக்கு, என்னுடைய கதையை பாராட்டி எழுதி இருந்தீர்கள்.நன்றி ஆனந்த விகடனில் வெளியான உங்கள் கதை எது? நான்
அதை படிக்கமுடியுமா?தெரியப்படுத்தவும்.

 
At 6:13 pm, October 07, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம். நன்றி..எடுத்துட்டேன் verificationஐ..சும்மா தொரை எல்லாம் வந்து பின்னூட்டமிட்டாங்கன்னா உங்க blogக்கு அனுப்பிடறேன் :-)

நன்றி கல்வெட்டு..இவங்களை போன்றவங்களை பத்தி எழுதறதும் இந்த blogளோட முக்கிய குறிக்கோள்.

டி ராஜ்..பதிலும் Cliched தான்..:-) ரொம்ப நன்றி :-)

பெனாத்தல் சுரேஷ்..உங்க ஊருதானே? அடுத்த முறை போகும் பொழுது அவரை சந்திக்கலாம் நீங்க..

தாணு, நன்றி.

 
At 6:20 pm, October 07, 2005, Blogger Ramya Nageswaran said...

முகமூடி, இராதாகிருஷ்ணன், அப்படிப்போடு: தகவல்கள் உபயோகமாக இருந்தது குறிந்து மிக்க மகிழ்ச்சி.

சுரேஷ், பதிவைப் பார்த்தேன். சுட்டிகள் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி.

ஐநோமீநோ, அனுப்பிவிட்டேன்.

துளசிக்கா, எந்த துறையிலே உதவ நினக்கறீங்களோ ஒரு தனிமடல் அனுப்புங்க. தகவல்கள் அனுப்பறேன்.

நானும், மதுமிதாவும் சென்னையிலே இருக்கிற ஒரு blind schoolக்கு உதவ முயற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கோம். எல்லா தகவல்களும் திரட்டின உடனே நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆர்வமிருக்கிறவங்க பங்கேற்கலாம்.

முத்து, அந்தக் கதை 1999ல் வந்தது. இன்னும் வலையேற்றலை. வேறு சில கதைகள் பதிவில் இருக்கு. நேரம் கிடைக்கும் பொழுது படித்து கருத்து சொல்லுங்க.

 
At 11:42 pm, October 07, 2005, Blogger வீ. எம் said...

//சும்மா தொரை எல்லாம் வந்து பின்னூட்டமிட்டாங்கன்னா உங்க blogக்கு அனுப்பிடறேன் //

SURE SURE! appadiyaachum namma site count increase aagattum... :)
neengalum once vandhuttu ponga.. new posting irukku, ippo.

 
At 12:26 am, October 08, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

amazing. why dont u start a separate blog to share such useful and relevant information .

 
At 7:00 am, October 08, 2005, Blogger Arjuna said...

ரம்யா, அருமையான கருத்துக்கள்! நிச்சயமாக பின்பற்ற கூடியவை :)

 
At 10:33 am, October 08, 2005, Blogger b said...

தன்னலமற்ற பொதுச்சேவை. பாராட்டப்பட வேண்டியவர் தாங்கள்.

 
At 5:33 pm, October 08, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம்..பார்த்தேன் லேட்டஸ்ட் பதிவை! :-)

Ravi, thanks..somehow I like my blog to be a pot-pourri,without any particular focus. That kind of reflects who I am :-) Once I acquire the necessary skills, I will at least sort them based on topics.

அர்ஜுனா, நன்றி.

பாராட்டுக்கு நன்றி மூர்த்தி.

 
At 7:29 pm, October 10, 2005, Blogger கலை said...

அருமையான பதிவு ரம்யா. இந்த கொண்டாட்டங்கள்பற்றி நானும் யோசித்துப் பார்த்திருக்கிறேன். அந்த green wedding ஐ நடத்தியவர் பாராட்டப் பட வேண்டியவர்.

 
At 9:24 pm, October 10, 2005, Blogger Ramya Nageswaran said...

உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, கலை

 
At 10:19 pm, October 10, 2005, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ரம்யா அக்கா..(இப்படி உறவு சொல்லி அழைப்பது வலைப்பதிவு உலகில் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..)

இதில பாராட்டாம விட்ட முக்கியமான ஆள் அந்தக்கல்யாணப் பெண்ணும் அவங்க குடும்பத்தாரும்..மாப்பிள்ளை எவ்வளவு தான் முற்போக்கு வாதியா இருந்தாலும் பொண்ணு வீட்டு காரங்க "எதுக்கு மாப்பிள்ளை இந்த சீர் திருத்தம் எல்லாம்" அப்டின்னு ரொம்ப easyயா அவரை அடக்கி வைச்சிடுவாங்க..மற்றபடி, இந்த மாதிரி நல்ல பணி செய்பவர்கள் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்

 
At 10:54 pm, October 10, 2005, Blogger Ramya Nageswaran said...

ரவி (அக்கான்னு கூப்பிட்டது எனக்கும் பிடிச்ச விஷயம்..உடனே ஒரு instant அன்பு வந்திடுது இல்லே?), நீங்க சொன்னது ஒரு முக்கியமான point..இதை நானே எழுதணும்னு நினைச்சு விட்டு போயிடுச்சு...'இதேல்லாம் எதுக்கு' அப்படின்னு சொல்றவங்க நிறைய பேர் இருப்பாங்க..ஒரு urge to conform தான் பல பேர் கிட்டே பார்க்கிற ஒரு விஷயம். எல்லாறையும் சமாளிச்சு கொள்கையை விட்டு கொடுக்காம இருக்கிறவங்க அரிது தான்.

 
At 7:02 am, October 11, 2005, Blogger முகமூடி said...

ரம்யா இங்க பாருங்க :
http://www.dinamalar.com/2005oct11/flash.asp

அக்கான்னு சொல்லாவிடினும் அன்புடன் முகமூடி :)

 
At 8:58 am, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

முகமூடி, தகவலுக்கு நன்றி..ஊரிலிருந்து அப்பா, அம்மா வந்திருக்காங்க..ஏதோ பொண்ணை பத்தி பெரிய ந்யூஸ் வந்திடுச்சுன்னு சந்தோஷப்பட்டுகிட்டிருக்காங்க..:-)

நீங்க கூப்பிட்டாலும் அக்கான்னு சொல்ல மாட்டீங்க தானே? பேத்தி?!! :-)

 
At 2:26 pm, October 11, 2005, Blogger vin said...

நல்ல பயனுள்ள பதிவு. அட நம்ம வலைத்தளம் கூட போன வாரம் தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில் இடம்பெற்றிருந்தது :-) Welcome to the gang!

-Vinodh
http://visai.blogspot.com

 
At 3:43 pm, October 11, 2005, Blogger மதுமிதா said...

அன்பு ரம்யா

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
சந்திரசேகரன் இப்போதுதான் தினமலரில் வந்த விஷயம் சொன்னார்
உங்கள் தொலைபேசி எண் கேட்டார் உங்களுக்கு இந்த தகவலைச் சொல்வதற்கு
நேற்றும் பேசினோம்

இங்கே பார்த்தால் முகமூடி முதலிலேயே சொல்லியிருக்கிறார்
தனிமடலிடுகிறேன் ரம்யா

நன்றி முகமூடி

 
At 9:50 pm, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

வினோத், மது, நன்றி...

 
At 11:49 am, October 12, 2005, Blogger ஜோ/Joe said...

இதுக்கு (-) ஓட்டு போடவும் 4 பேர் இருக்காங்க! கொடுமைடா சாமி!!

 
At 12:58 pm, October 12, 2005, Blogger டி ராஜ்/ DRaj said...

@ரம்யா: வாழ்த்துக்கள்.

//அப்பா, அம்மா வந்திருக்காங்க..ஏதோ பொண்ணை பத்தி பெரிய ந்யூஸ் வந்திடுச்சுன்னு சந்தோஷப்பட்டுகிட்டிருக்காங்க//

எங்களுக்கே சந்தோசமா இருக்கு, அப்பா அம்மாவுக்கு இருக்காதா?

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகளை(னை)
சான்றோன் எனக் கேட்ட தாய் (தந்தை)

 
At 2:28 pm, October 12, 2005, Blogger Ramya Nageswaran said...

டி ராஜ்..உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.

ஜோ, நானும் பார்த்தேன்.. ஆனா போன பதிவை விட (-8) இதுலே பரவாயில்லை :-)

 
At 10:14 pm, October 14, 2005, Blogger வீ. எம் said...

காணவில்லை ! காணவில்லை !! காணவில்லை !!!

 
At 3:00 pm, October 16, 2005, Blogger Arjuna said...

ramya - I have written a tamil short story in my blog - let me know ur views on it :)

 
At 4:56 pm, October 17, 2005, Blogger வீ. எம் said...

காணவில்லை ! காணவில்லை !! காணவில்லை !!!

 
At 5:41 pm, October 17, 2005, Blogger Ramya Nageswaran said...

யப்பா வீ.எம்..எழுதறத்துக்கு விஷயமே இல்லையே!!

 
At 8:26 pm, October 17, 2005, Blogger வீ. எம் said...

HINT:


write some samayal tips .. or singapore part 1 , 2, 3.... 15

 
At 11:49 pm, October 17, 2005, Blogger Arjuna said...

Ramya - thanks once again for visiting my blog and correcting my mistakes :) - I have corrected them now ( I guess :) )

 
At 7:06 am, October 19, 2005, Anonymous Anonymous said...

All the Africans have atlast started writting in Afrikaans , soooooo Goooooood ,

Flourish like pigs,

Vartta

 
At 1:27 am, October 21, 2005, Blogger கயல்விழி said...

நல்ல பதிவு ரம்யா. குறிப்பா போட்டிபோட்டுக்கொண்டு சின்னச்சின்ன விசேசங்களைக்கூட பெரிய விழாவாக கொண்டாடிற நம்மாக்கள் புரிஞ்சு நடக்கணும். அருமையான பதிவு. :))

 
At 8:52 am, October 21, 2005, Blogger Ramya Nageswaran said...

கயல்விழி..நீங்க சொல்றது உண்மை தான். நம்ம சமுதாயத்துலே எல்லாத்துக்கும் ஒரு கொண்டாட்டம்! :-) பதிவு பிடித்தது குறித்து மகிழ்ச்சி கயல்விழி.

 
At 12:11 am, December 30, 2005, Anonymous Anonymous said...

Very good writing about the Green Wedding!

Am forwarding it to many of my friends.

நன்றி!

 
At 9:00 pm, January 11, 2006, Blogger SSNO said...

we are one group to accept ur feel.
ssno.blogspot.com

 

Post a comment

<< Home