Friday, September 23, 2005

அமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு

Amitav Ghosh




பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். 'என்றைக்காவது ஒரு நாள் படிக்க' என்று வாங்கி அடுக்கிய புத்தகங்களில் இவரின் THE HUNGRY TIDE புத்தகமும் அடக்கம். சிங்கைக்கு வருவார் என்று முன்னாடியே தெரிந்திருந்தால் 50 பக்கங்களாவது படித்திருப்பேன். அவரைப் பற்றியோ, அவரின் எழுத்துக்களைப் பற்றியோ ஒன்றுமே தெரியாமல் தான் சென்றேன். 50 பேர் வந்திருந்தார்கள். முழுவதுமாக நரைத்திருந்த தலை முடியைப் பார்த்தால் சற்று வயதானவராக தோன்றினாலும் 50 வயதானவர் என்று அவரைப் பற்றிய தகவல் தொகுப்பு சொன்னது.


THE GLASS PALACE என்ற தன் புத்தகத்திலிருந்து நான்கு பக்கங்கள் படித்தார். அவர் படித்த பகுதி, 1941ல் இந்திய தேசிய படையை சேர்ந்த இரு சிப்பாய்களின் அனுபவமும், அவர்களின் கலந்துரையாடலும் வரும் பகுதி. அதன் பிறகு கேள்வி/பதில் தொடங்கியது. அவர் படித்த பக்கங்களின் தொடர்ச்சியாக போர் வீரர்களைப் பற்றி முதலில் பேசினார்:

"ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்று போர் புரிந்த படை வீரர்களைப் பற்றி பெரிதாக இலக்கிய குறிப்புகள் இல்லை என்பது வருத்தத்தை தரும் விஷயம். அவர்களில் பலர் நெருக்கடியான நிலமையைச் சந்தித்தார்கள். ஒரு புறம் அந்நிய படைகளுடன் போர் புரிய வேண்டிய கட்டாயம். இன்னோரு புறம் தாய்நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களுடன் சேர்ந்து போராட முடியவில்லையே என்ற உறுத்தல் மற்றும் ஆதங்கம். போர் புரியும் இடங்களில் (முக்கியமாக மலாயா, சிங்கப்பூர்) மரியாதை இல்லாத சூழ்நிலை. இவர்களை ஆட்டு மந்தைகள் போல் தான் ப்ரிடிஷ் அரசாங்கம் நடத்தியது. போர் புரிந்த இடங்களில் இவர்களுக்கு கூலிக்காக கொலை செய்பவர்கள் (mercenaries) என்ற பட்டம் தான் கிடைத்தது. இந்த மனநிலையை THE GLASS PALACEஸில் வெளிக் கொண்டு வர முயன்றிருக்கிறேன்."


புலம் பெயர்ந்த இந்தியர்களைப் பற்றி பேசும் பொழுது (இவர் பல ஆண்டுகளாக ந்யூ யார்க்கில் வசிக்கிறார்):


"புலம் பெயர்ந்த இந்தியர்களின் முன்னோடிகள் என்றால் பொதுவாக நமக்கு தோன்றுவது இஞ்சினியர்கள் அல்லது டாக்டர்கள். உண்மையில் முதலில் புலம் பெயர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளாகச் சென்ற இந்தியர்கள் தான். நாம் அவர்களை மறக்கவும் கூடாது, இந்த உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது. பிரவசி பாரதிய திவஸ் போன்ற விழாக்களில் நாம் இவர்களை நினைவுகூர வேண்டும். இவர்கள் கடுமையான பொருளாதாரக் கஷ்டத்தினால் தன் தாய் நாட்டிலிருந்து பிடுங்கி நடப்பட்டவர்கள். தாம் சென்ற நாடுகளில் ஒடுங்கங்களுக்கு ஆளானும் தன்னுடைய தாய் நாட்டின் ஞாபகங்களிலிருந்து புலம் பெயர்ந்த நாட்டில், ஒவ்வோரு செங்கலாக கட்டி தன் தாய் நாட்டின் ஒரு சிறு பகுதியையாவது மீட்டேடுக்க முயன்றவர்கள். உதாரணமாக மொரிஷியஸில் பல இடங்களில் புடவை கட்டிக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டு, போஜ்புரியில் பேசும் பெண்களைப் பார்க்கிறேன். மும்பாயில் அரிதாக போய்விட்ட காட்சி இது. அதே போல் அங்கு கங்கைக்கு சமமாக கங்கா தலாவோ என்ற ஏரிக்கு நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மஹா சிவராத்திரியின் பொழுது நடந்தே செல்கிறார்கள். "


"இந்திய உணவு உண்ண சில சமயங்களில் முகம் சுளிக்கும் என் குழந்தைகளிடம், 'உங்களின் இந்தியத்தனத்திலிருந்து நீங்க நினைத்தாலும் இனி தப்பிக்க முடியாது. உங்கள் அமெரிக்க நண்பர்கள் உங்களிடம் இந்திய உணவு பற்றியும், பார்ட்டிகளில் பாங்க்ரா இசையைப் பற்றியும் கேள்விகள் எழுப்புவார்கள். அது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மற்றும் காலாச்சார ஈர்ப்பின் சக்தி' என்று சொல்கிறேன்," என்றார்.


எழுதுவது பற்றி வழக்கமான கேள்விகள் வந்தன. உதாரணமாக, "நீங்கள் ஒரு கதையை முழுவதுமாக யோசித்து விட்டு பின் கதாபாத்திரங்களால் நிரப்புவீர்களா அல்லது கதாபாத்திரங்கள் கதையின் ஓட்டத்தை நிச்சயிப்பார்களா?"


"இரண்டும் கலந்து தான். 'It's like driving a car at night. You never see further than your headlights, but you can make the whole trip that way' என்று சொன்ன E.L.Doctorowவின் கருத்து தான் தன்னுடையதும் என்றார்.


"பொதுவாக ஒரு எழுத்தாளரின் குணாதிசியத்தின் ஒரு பகுதியாவது அவரின் கதாபாத்திரங்களில் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது உங்களின் குணாதிசியத்திற்கு தொடர்ப்பே இல்லாத பாத்திரங்களை எப்படி படைக்க முடிகிறது?" என்ற ஒரு கேள்விக்கு "தனக்கு பரிச்சியமில்லாத ஒரு/பல பாத்திரத்தை/பாத்திரங்களை நிச்சயம் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். அப்படி செய்யும் பொழுது அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களை செலுத்துவது என்ன, தூண்டுதல்கள் என்ன போன்றவைகளை ஆராய்ந்து, முடிந்தால் அப்படிபட்டவர்களுடன் கலந்துரையாடி, அந்த பாத்திரத்துக்கு உயிரூட்டினால் அது நிச்சயம் ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கும்," என்றார்.

"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்."

பாசாங்கில்லாத, தன் வேர்களை மறக்காத, எளிதில் அணுகக்கூடிய ஒரு மனிதரைச் சந்தித்த உணர்வு நிகழ்ச்சியின் முடிவில் எனக்கு ஏற்பட்டது.

19 Comments:

At 6:30 pm, September 23, 2005, Anonymous Anonymous said...

I have read the calcutta chromosome years ago.it is an interesting novel.

 
At 8:59 pm, September 23, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

//"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்."//

நமக்கு சொன்ன மாதிரி இருக்கு ரம்யா !!
எனக்கென்னவோ சில சமயம் பொய்யும் சொன்னால் தான் வலைப்பதிவில் நிலைத்து நிற்க முடியுமென்று தோன்றுகிறது... நீங்க என்ன சொல்றீங்க

 
At 9:42 pm, September 23, 2005, Blogger வீ. எம் said...

//உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்////

SUPER ... ! NALLA IRUKKU IDHU..

-----------

//பொய்யும் சொன்னால் தான் வலைப்பதிவில் நிலைத்து நிற்க முடியுமென்று //

ganesh: EN last posting la sonna kadhai patri solreengala??? :)

 
At 9:58 pm, September 23, 2005, Blogger Boston Bala said...

சுவையான சந்திப்பைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

 
At 11:14 pm, September 23, 2005, Blogger தாணு said...

புலம்பெயர்ந்த இந்தியர்களின் சொந்த ஊர் பற்றிய உணர்வு இங்குள்ளவர்களுக்கும் இருந்தால்போதும். இதுபோன்ற சந்திப்புகள் உங்கள் சொந்த ஊர் பற்றிய நினைவுகளை இனிமையாகியிருக்குமே!

 
At 8:34 am, September 24, 2005, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள ரம்யா,
மிகவும் பயனுள்ள பதிவு.
'வேர்களை மறக்காத பண்பு' உண்மையில் தற்காலத்தில் மிகவும் அவசியமாக வலியுறுத்தப்பட வேண்டிய இன்றியமையாத பண்பு என்பதைப் பற்றி நான் கூட னிறைய யோசித்திருக்கிறேன். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் வருங்காலத்தில் உலகம் அழகாக அமையும்.

அமிதவ் கோஷைச் சந்திக்கமுடியாத சின்ன வருத்தத்துடன், ஜெ

 
At 9:45 am, September 24, 2005, Blogger Ramya Nageswaran said...

அனானி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் நண்பர் ஒருவர் 'Calcutta Chromosome is the most bizzare novel I have read' என்றார்.

//எனக்கென்னவோ சில சமயம் பொய்யும் சொன்னால் தான் வலைப்பதிவில் நிலைத்து நிற்க முடியுமென்று தோன்றுகிறது... நீங்க என்ன சொல்றீங்க//

கணேஷ், முதல்லே உங்க நோக்கமே ரொம்ப குறுகியதா இருக்கே..பெரிசா யோசிங்க. இரண்டாவது, பொய் சொல்லி நிலைப்பது சரியான்னா நிச்சயம் சரியில்லை தான். இதுலே மாற்று கருத்துக்கு இடமில்லை.

வீ.எம். நன்றி!! (நாலே நாள்லே புது பதிவு..கவனிங்க!!) :-)

பாஸ்டன் பாலா, முதல் முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி!

 
At 9:58 am, September 24, 2005, Blogger Ramya Nageswaran said...

//இதுபோன்ற சந்திப்புகள் உங்கள் சொந்த ஊர் பற்றிய நினைவுகளை இனிமையாகியிருக்குமே!//

நிச்சியமா தாணு..

நன்றி, டி.ராஜ்..நீங்க சொல்லியிருக்கிறது ஒரு பெரிய டாபிக். எதனாலே ஆராய்ந்தால் பல கோணங்கள் வெளி வரும்.

நன்றி, ஜெயந்தி. அடுத்த முறை உங்களையும் அழைத்துக் கொண்டு போகிறேன்!! :-)

 
At 4:49 pm, September 24, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

// கணேஷ், முதல்லே உங்க நோக்கமே ரொம்ப குறுகியதா இருக்கே..பெரிசா யோசிங்க. இரண்டாவது, பொய் சொல்லி நிலைப்பது சரியான்னா நிச்சயம் சரியில்லை தான். இதுலே மாற்று கருத்துக்கு இடமில்லை. //

ரம்யா !! பாசிட்டிவ்வா யோசிக்கறது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். எனக்கும் அதில் முழு நம்பிக்கை உண்டு.

ஆனா நான் இங்கு சொல்ல வந்தத சரியா சொல்லாம விட்டுட்டேன். இலக்கியம் சார்ந்த படைப்புகளுக்கு (பதிவுகளுக்கும்) பொய்கள் அழகு சேர்ப்பவை. இந்த மாதம் Reader's Digest முதல் பக்கத்தில் ஒரு மேற்கோள் இருந்தது.

உங்கள் கவனத்திற்க்காக "A novel which persuades us of its truth is true however full of lies it may be" - Mario Vargas Llosa

நான் சொல்ல வந்ததும் அது தான். அழகுக்காக சில பொய்கள் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். மற்றபடி பதிவே பொய்யாகி விடக்கூடாது இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அழகுக்காக பொய் சொல்வது பதிவின் நோக்கத்திற்கு எந்த இழப்பையும் ஏற்படுத்தாது. அதனால் அவ்வப்போது பொய்களும் அவசியமாகிறது.
அதனால் தான் சொன்னேன் உண்மையை மட்டுமே எழுத முடியாது.

வீ.எம் கதையையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். அவர் சொன்ன எல்லாமே பொய்கள் தான். ஒரு வரி கூட உண்மையில்லை ஆனா பாருங்க படங்களுடன் அவை பொருந்தியதை.

கொஞ்சம் சரியா சொல்லாம விட்டுட்டேன். மன்னிச்சிக்கோங்க. (அட இதுக்கு போயி கோபப்பட்டா எப்படி?)

 
At 8:56 am, September 25, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..கோவமேல்லாம் ஒண்ணுமில்லை கணேஷ்.. நீங்க விரிவா கேட்கலைன்னு புரிஞ்சுது..விளக்கதிற்கு நன்றி.

ஏர். ஆர். ரேஹ்மான் கச்சேரி நேத்து. லேட்டா தூங்கிடு இப்பத்தான் அரைகுறையா முழிச்சிகிட்டிருக்கேன்!

 
At 10:52 pm, September 27, 2005, Blogger வீ. எம் said...

ரம்யா அக்கா, குஷ்பு பதிவுகளால் வெறுத்து போயி போர் அடிக்குது .. சீக்கிரம் வந்து ஏதாச்சும் ஒரு பதிவு போடுங்க.. !

 
At 8:42 am, September 28, 2005, Blogger Ramya Nageswaran said...

எல்லாத்தையும் நானும் படிச்சு கிட்டிருக்கேன் வீ.எம்.

போட்டிடுவோம் ஒரு பதிவு (வேற டாபிக்லே தான்.. பயந்து ஓடிடாதீங்க!!)

 
At 2:09 pm, September 28, 2005, Blogger நந்தன் | Nandhan said...

Even I was planning to read Hungry tide. Any comments guys?

 
At 11:44 am, September 29, 2005, Blogger மதுமிதா said...

###"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெறும்."###

அவரின் இந்தக் கருத்து எனக்கு பிடித்திருக்கிறது

உண்மை ரம்யா

நமக்கே பிடிக்கலைன்னா மத்தவங்களுக்கு எப்படி பிடிக்கும்.
அமிதாவ் கோஷுடனான சந்திப்பு
போன்று பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

சில வேலைகள் காரணமாய் தனி மடலிட முடியவில்லை

இரண்டு நாட்களில் எழுதுகிறேன் ரம்யா

 
At 11:45 am, September 29, 2005, Blogger Ramya Nageswaran said...

இல்லைங்க ராஜ்.. ஒரு 'பச்சையான' பதிவு போடலாம்னு ஒரு idea!! :-)

ராஜ், உங்க email id தரீங்களா? இல்லைன்ன ramyanags@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்புங்க.

 
At 11:48 am, September 29, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, மது. மடல் எழுதுங்க. நானும் நண்பர்களிடம் பேசிக்கிட்டிருக்கேன்.

 
At 5:53 pm, September 29, 2005, Blogger Vaa.Manikandan said...

good writing style ramya!keep it up.

 
At 11:58 pm, September 29, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, மணிகண்டன்.

 
At 5:21 pm, October 05, 2005, Blogger Ramya Nageswaran said...

ராஜ், ஆஃபிஸிலே பயங்கர வேலை..இன்னும் எழுதிகிட்டிருக்கேன்..

யாரு நிறைய பேரு?? நீங்க ஒருத்தர் தான்!! :-)

 

Post a Comment

<< Home