மொழி - சிறுகதை
டைட்டில்லே 'மீண்டும் ஜே.கே.பி'ன்னு போடணும்ன்னு ஆசை தான். ஆனா அடங்கு, அடங்குன்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கே..என்ன செய்யறது?
எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே? கொஞ்சம் நீண்ட இடைவெளியா போயிடுச்சு. இனிமே ஏதோ எழுதுவேன்னு தான் நினைக்கறேன்.
ப்ளாகேஸ்வரி (நல்ல பேருங்க), நீங்க கல்கிலே படிச்ச கதை இதோ:
____________________________________________________________________________________
அது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக். சுவரேல்லாம் சித்திரங்கள். பல 'பளிச்' நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள். குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு! சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து.
பணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம். சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன். 'சள சள' வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம்.
வருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது? எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும் தூங்கவிடாமல்
இப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.
எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள். நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.
க்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண். கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை. எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள். அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று சத்தமாகவே பறைசாற்றின. அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம்! அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.
குழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்! அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள்! 'உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.
பக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது. புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள். தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிரமாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் என்று சொல்லிக் கொண்டே போனாள். 'நான் உன்னைச் சேர்ந்தவள்' என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.
அந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண். மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்!
'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா?' 'என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.
இந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா?' என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.
அதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது. பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது! 'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: "சனியனே!"
38 Comments:
இது இப்படினா... போன தடவை நான் சென்னை போயிருந்தப்போ, travel agent ஆகட்டும் bank ஆகட்டும், தமிழ்ல பேசாம English-ல தான் பேசுவொம்னு அடம் பிடிச்சவங்க எத்தனையொ பேர பாத்தேன்...
Welcome back Ramya...
ஹிபர்னேஷனில் இருந்து திரும்பவும் வலைப் பதிய வந்திருக்கும் ரம்யா அக்கவாவுக்கு ஒரு பெரிய ஓ.
இனி தொடர்ந்து அடிக்கடி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் வலைப்பதிவை புதிய தமிழ்மணத்தில் இணைக்க உதவும் பயனர் கையேட்டை மயில் மூலம் அனுப்பியுள்ளேன்.
மத்தபடி,கதை வழமை போலவே சூப்பரப்பூ...
அருமையான கதை.
நீங்கள் வெளிநாட்டைச் சொல்லுகிறீர்கள். அவ்வளவு தொலைவு ஏன்? இந்த முட்டாள்தனமான அலட்டல் தருமமிகு சென்னையில் எத்தனை பேரிடம் இருக்கிறது?
தமிழ் என்றால் ஒரு இளக்காரம். நம்மவர்கள் திருந்துவார்களா என்ற அய்யப்பாடு எனக்கு எப்பொழுதுமே உண்டு.
அன்புடன்,
இராம.கி.
ரம்யா,
வாங்க வாங்க. நலமா?
கதை நல்லா இருக்கு. ஆனா 'அந்தப் பொண்ணு' தமிழ்க்காரராத்தான் இருக்குமுன்னு பாதி படிக்கறப்பவே
ஒரு ஊகம் வந்தது, 'சனியனே'யில் புரிஞ்சுருச்சு.
கதை அருமை.. :)
சுகவாசி, சுதர்சன் கோபால்,
ரொம்ப நன்றி!
இராம.கி ஐயா,
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத வந்த எனக்கு உங்க பாராட்டு ஒரு பெரிய மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.
துளசிக்கா, நல்லா இருக்கீங்களா?
பொன்ஸ், பாராட்டுக்கு நன்றி.
Hey ramya, welcome back. Romba loooong break. I even uninstalled my tamil software, so commenting in english.
'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா?'
--naan romba rasicha line.
ரம்யா அக்கா ! நீண்ட இடைவேளைக்கு தடைபட்ட உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
கதை நடை நல்லா இருந்திச்சி!
ரம்யா அக்கா ! நீண்ட இடைவேளைக்கு தடைபட்ட உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
கதை நடை நல்லா இருந்திச்சி!
என்னதான் நடை உடை பாவனைகள் மாறினாலும். இயல்பில் சிறு வயதில் வளர்ந்த சூழ்நிலையின் பாதிப்பு கட்டாயம் வெளிப்படும். நல்ல கதை முடிவு.
வணக்கம். பெரிய இடைவெளி..
என் பதிவொன்றில் இக்கதையைப் பற்றி சிங். ஜெயக்குமார் கோடுகாட்டியிருந்தார். (mention பண்ணியிருந்தார்!!)
ரத்தத்திலேயே ஊறியிருந்தாலும் நம் மொழியை வெளிக்காண்பிக்க நாம் படும் வெட்கம் கொஞ்சம் வேடிக்கையாகவும், நிரம்ப வேதனையாகவும் உள்ளது.
நல்ல சத்தான கதை.
செளம்யா, நன்றி. திரும்ப தமிழ் ஃபாண்ட்ஸ் போட்டுடுங்க! :-)
செயகுமார் தம்பி, ரொம்ப நன்றி.
அனுசுயா, இது பாதிப்புங்கிறதை விட நான் காட்ட நினைச்சது கவனமா மாட்டிக் கிட்ட ஒரு முகமூடி விழும் தருணம்.
தருமி ஐயா..வணக்கம். உங்க பதிவையும் படிச்சேன். ஆமா..உண்மைதான். இது ஒரு வேதனை தரும் விஷயம்.
//எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்//
Hey Ramya,
Nice story.
In my opinion, one good thing about the story is that the narrator isn't portrayed as a "walking angel" as they would normally be pictured as.
The narrator's rapid judgement on the other woman and her "seeking recognition" from the other lady, only shows she is just like us, a commoner. :)
Nice Story. Reminded me how during my younger days in India I used to speak only English inside school/college campuses as if I didn't know Tamil(inspite of my obvious tamizhachi looks!)! :)
அருமையான narration. ஏதோ உங்களது இடத்தில் நானே இருந்து அந்தப் பெண்ணை அளவிட்டது போன்ற உணர்வு. ஜெர்மனியில் நிரந்தரமாகக் குடியேறும் எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நல்லவேளையாக வேற்று தேசங்களில் நாம் சந்திக்கிற (அல்லது நான் சந்திக்க நேர்ந்த) இந்திய மற்றும் ஈழத்தமிழர்கள் அனைவரும் இதே மாதிரி இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
-குப்புசாமி செல்லமுத்து
D the dreamer, நீங்க யாரை சொல்லறீங்கன்னு சரியா புரியலையே? Narrator is not the one judging or seeking approval. Narrator is the woman who is watching the show. Anyway, in some sense or the other, we are all commoners! :-) Thanks for your visit.
Me too, நன்றி. நானும் நீங்க செஞ்சதெல்லாம் செஞ்சிருக்கேன். அதெல்லாம் இல்லாம இருக்குமா காலெஜ் லைஃப்லே? :-) உங்க வலைப்பூவிலே கூஞ்ச் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கீங்க. மிக்க நன்றி. அதை பற்றி அடுத்த பதிவு ஒண்ணு எழுதணும்.
குப்புசாமி செல்லமுத்து, ரொம்ப நன்றி. நீங்க சொல்ற மாதிரி நானும் தன் வேர்களை மறக்காதவங்களை சந்திச்சிருக்கேன். இந்த பொண்ணை போன்றவங்களையும் நிறைய சந்திச்சிருக்கேன்!! :-(
I am talking about Varun's Mom.
//Narrator is not the one judging or seeking approval. Narrator is the woman who is watching the show//
//அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. //
//எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்//
These sentences were perhaps overdoing their cause. Right from the begining Varun's Mom starts to think that the other lady is a show off. In real life, it is often wrong to judge the book by the page. That is what I meant.
Anyway, I loved the story
Cheers
D the D
D the D,
Thanks. Got it now!
I agree that in this case I have been judgemental. That it because I have met one too many such characters! :-)
Kathay nalla irukku. Vimarzhananangalum swarasiyamaga irrukkindrana.
Vimarzhanangaldhan, kadhaiyum adhan nunukkangaliyum marubadiyum azhai podavaithu ninaivil niruthhuginrana.
nigazhvugalin thakkangal thodarattum. Vimarzhanam matrum vazhthukkalum serthuthan.
Vaazhthukkal (Seekiram tamizh font install pannanum)
siva
சிவா...ரொம்ப நன்றி. தழிழ் ஃபாண்ட்ஸ் பற்றி தனி மடல் அனுப்பறேன்.
LOL!! Brilliant. Welcome back, Ramya. Ungal ezhuthai rombavey miss pannitom :)
நம்மை நாமாக காட்டிகொள்வதைவிட யாரோவாக காட்டிக்கொள்வதில் நம்மவர் சிலருக்கு என்னபெருமை(சிறுமை) நல்ல கதை. ஆறுமாதம் காத்திருந்தது வீண்போகவில்லை. தி.ரா.ச
இந்த "ஆறு" அழைப்பு பத்தி தெரியுமில்ல ரம்யா? நான் உங்களை இதில் இழுத்து விட்டிருக்கேன்.
பார்க்க:
http://kalvetu.blogspot.com/2006/06/blog-post_23.html
Ramya,
nalla kadhai - andha "saniyane" miga iyalbaana nagaichchuvai :).
vegu naaL kazhiththu ungaL ezhuththai padiththadhil magizhchi.
Hello Ramya...
This is Anand from Australia.Just a few days ago i came to know about you blog.It's really quite impressive.I red all the posts you have posted in your blog.
Really your blog hasbeen changed my view in my life.Your view and the way you are telling the things thru in your post is really good.
Then i need you mail id to have a contact with you.
My Email id is anandaustralia@hotmail.com.
Expecting your mail.
///மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்!///
///தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: "சனியனே!"///
here is ramya
Ammani, belated thanks!! For some reason, I could not post comments on blogger. Guess it knows me too well by now! :-) I am having problems with Tamil fonts also! :-(
TRC, priyamvada, Anand and Madhu, anaivarukkum nandri!!
Kalvettu, innum parkalai. pangu pera muyarchikkiren!
Hi Ramya...
This is Anand from Australia.
unga mail id ketten..neenga ithuvaraikum anupave illa...
yen..? already intro anavangaluku than mail pannuveengala..? :-)
enjoyed reading your story. i don't know how to write in tamil on blog. only got into this site yesterday. anyway, 'saniyane' is such a unique tamil word, it seems. my mother used to use the word a fair bit and my brother used to tell her to stop using it. then few months ago, he (medical student in the UK) said while he was observing in the operating theatre, he met 3 surgeons - 1 caucasian and 2 indians. as soon as the caucasian surgeon left the room, one of the surgeons told the other 'saniyan tholangithu!!!'. my brother realized how universal the word was. your story reminded me of this.
enjoyed reading your story. i don't know how to write in tamil on blog. only got into this site yesterday. anyway, 'saniyane' is such a unique tamil word, it seems. my mother used to use the word a fair bit and my brother used to tell her to stop using it. then few months ago, he (medical student in the UK) said while he was observing in the operating theatre, he met 3 surgeons - 1 caucasian and 2 indians. as soon as the caucasian surgeon left the room, one of the surgeons told the other 'saniyan tholangithu!!!'. my brother realized how universal the word was. your story reminded me of this.
அருமையான கதை...அப்படியே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்கிய எழுத்துக்கள் அருமை...பாராட்டுக்கள்...
பேரழகி,
நன்றி..உங்க அண்ணனின் அனுபவம் சில சொற்களோட பரிமாணங்களை 'டக்'குனு காட்டிடுச்சு, இல்லை?
சுடர்விழி,
ரொம்ப நன்றி.
அன்புடன்,
ரம்யா
Nalla Kathai, very descriptive..
Thank you SaaRee
Liked that subtle rap at our inherent racism by pondering about the mother's likeliness to learn Swahili had her husband been posted in Kenya.
Intha Kathiala oru twist ta antha Germaniya Pen Tamil Natilla 2 aandu irunda soli. Avaluku Tamil panpadu pudchu poi Tamil payana kalyanam panni antha kozhanda Tamil la Amma nu koopidara mathiri kooda mudichirukalam. Ithu kathai ya paddikum pothu enaku vantha ethirparpu. Unga kathai super - Tam
Tam - mikka nandri. Unga Karpanaiyum nandra irukku. Kadai ezhuthungal!
Ungal vazhthuku nanri. Katha ezhutha muyirchikren Ramya.
Post a comment
<< Home