Going to Chennai!!
கிட்டதட்ட 8 வாரங்களுக்கு வலைபதிவுகளிலிருந்து ஒரு சின்ன ப்ரேக்...அடுத்த வாரம் இந்தியப் பயணம். ஒரு திருமணத்திற்கு போறதுனாலே சற்றே நீண்ட பயணம் (6 வாரங்கள்!).
இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை வந்திருக்கிறது. இந்தக் கதை மே மாதம் எழுதியது. எழுதியவுடன் படித்துவிட்டு கருத்துகள் சொன்ன நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சிக்கும் அவர் மனைவிக்கும் மிக்க நன்றி. கதையின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். வேறேதாவது edit செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
சென்னையில் இருக்கும் சில வலைப்பூ நண்பர்களுடன் தனிமடலில் தொடர்பு கொண்டுள்ளேன். சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். வேறேதாவது குழு சந்திப்புகள் நடந்தால் எனக்கு ramyanags@gmail.com என்ற முகவரியில் தெரிவிப்பவர்களுக்கு இராமநாதன் குலுக்கல் முறையில் பரிசளிப்பார் :-)
அடாது மழை பெய்தாலும் விடாது வந்து '-' குத்தும் நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்..சீக்கிரம் வந்துவிடுவேன் :-)
மீண்டும் 2006ல் சந்திப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உலகிற்கு மன நிம்மதி தரும் ஆண்டாக மலர வேண்டும் என்று இந்தியாவில் போக திட்டமிட்ட கோயில்களிலேல்லாம் வேண்டிக் கொள்கிறேன் (பேராசை தான்..கேட்டு வைப்போமே!).
பி.கு: சலங்கை ஒலியில் கமல் டெல்லி செல்வதற்கு பொட்டியை தயார் பண்ணிக் கொண்டே எட்டி பார்க்கும் பக்கத்து மாடி பையனிடம் "Going to Delhi" என்று பெருமையாக சொல்லுவார்..டைட்டிலை அதெ தொனியில் படிக்கவும்! :-)
பி.கு2: 'சென்னைக்கு போறதுலே என்ன பெருமை?' என்று கேட்பவர்கள் இங்கே கிளிக்கவும் :-)
40 Comments:
அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க., உங்கள் பயணம் இனிதாகுக.
சுகமாய் பயணம் அமையட்டும்!
Ramya kicha maama kekapora kelvikellam pathil ready thane?
santhosam poitu vanga appidiye niraya padam kada niraya padangal eduthukondu vanga.
ரம்யா சென்று வருக, வென்று வருக.
அப்படியே கல்கி கதையை இங்க போடுங்களேன். வெளியாகிவிட்டது என்பதால் போடுவது தவறில்லை என்று நினைக்கிறேன்.
Bon Voyage
பத்திரமா போயிட்டு சீக்கிரமா வாங்க.
This comment has been removed by a blog administrator.
welcome!
Please also visit concerts during the December music season in Chennai and write about them too.
நீங்கள் கொடுத்திருக்கும் tfmpage சுட்டியிலுள்ள தங்கிளிஷ் பாடல் புரிகிறது. ஆனால், வரிக்கு வரி ஏதோ பாம்பு மொழியில் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதே? :)
Bon Voyage
நல்வரவு!
வரும் 6 வாரங்கள் உங்களுக்கு சிங்காரச்சென்னையில் இனிதே அமைய வாழ்த்துக்கள்!
//அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க//
நன்றி, அப்படிப்போடு! என்னோட அம்மாவை தானே..சொல்லிடறேன் :-)
நன்றி, டிசே
சினேகிதி..சிங்கப்பூர் பற்றியேல்லாம் கிச்சா மாமாக்கள் கேட்க மாட்டாங்க..அங்க நிறைய பேருக்கு சிங்கப்பூர் ஒரு வெளிநாட்டிலேயே சேர்த்தியில்லை! ;-)
நன்றி, உஷா..கதையை வந்து போடறேன்..
இராமநாதன் நன்றி.
தருமி சார், மதுரை வந்தாலும் வருவேன். மயில் தூது விடுகிறேன்!
அனானி, கச்சேரி விஸிட்ஸ் கண்டிப்பா உண்டு..பதிவு போடற அளவு ஞானம் இருக்காங்கிறது கேள்விக்குறி தான்!
//ஏதோ பாம்பு மொழியில்//
VoW, அது பாம்புகளுக்கு..நீங்க ஏன் படிச்சீங்க? :-)
நன்றி மாயவரத்தான்.
இளவஞ்சி, நன்றி.
ரம்யா அப்பிடியே கொல்கத்தாவுக்கும் ஒரு நடை வந்துட்டு போலாமே?
நிர்மலா.
ரம்யா, நல்வரவு
ரம்யா,
//சிங்கப்பூர் பற்றியேல்லாம் கிச்சா மாமாக்கள் கேட்க மாட்டாங்க..அங்க நிறைய பேருக்கு சிங்கப்பூர் ஒரு வெளிநாட்டிலேயே சேர்த்தியில்லை! ;-)//
போட்டீங்களே ஒரு போடு :-) உலகத்திலேயே நம்மவங்களுக்கு சௌகரியமான இடம் அதுதான். வசதிக்கு வசதியாச்சு. டில்லிக்குப் போகிறதைவிடக் கம்மி விலையில் போய் விடலாம் ( ஆகாச மார்க்கமாக ) இஞ்சிக் கருவேப்பிலையிலிருந்து கர்நாடக சங்கீதம், "டிகிரி காப்பி" வரையில் எதிலேயும் சென்னைக்குச் சளைத்தது அல்ல. போகிற போக்கில் இப்படி ஒரு சம்பாஷணை மந்தவெளி மாமிகளிடம் ( நானுமே அந்த மந்தவெளி மாமிதான் என்று, "மந்தவெளி மாமிகள் சங்கம்" சண்டைக்கு வந்துவிடும் முன் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துவிடுகிறேன் :-)) நடக்கலாம். " போன வாரம் சிங்கப்பூர் போனபோது "..வை" ஆர்சர்ட் ரோடிலேப் பார்த்தேன். எங்கேயோ வெளி நாட்டிலே இருக்கான்னுதானே சொன்னாங்க.?/!!!!!"
btw,ரம்யா, வாங்க வாங்க :-)
அப்படியானால் இன்னும் ஆறு வாரங்களுக்கு சென்னையில் மழை இருக்கும் என்று சொல்லுங்கள்.
அதாவது நல்லார் ஒருவர் உளரரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை என்று சொல்லியிருக்கிறார்கள் அல்லவா.
எப்படியோ சிங்கப்பூரில் ஒருவர் ஆறு வாரங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்.
ஸ்மைலிகளை பொருத்தமான இடத்தில் போட்டுக் கொள்ளவும்.
Enjoy your trip Ramya. I am sure you will come back and share information from chennai.
நல்லபடியா ஊருக்குப்போய்ட்டு வாங்க ரம்யா... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள (வருடத்தின் முதல் புத்தாண்டு வாழ்த்து சொன்னதும், பெற்றதும் நீங்கள்தான்:)
்.
பயணம் இனிதாக எனது வாழ்த்துக்கள்! புத்தாண்டு பொலிவோடு மலரட்டும்!
Ramya:
Have a safe trip.
:)
New wishes to you and your family too
Cheers
Draj
நிர்மலா, வரணும்னு ஆசை தான்..May be அடுத்த வருடம்...
ப்ரகாஷ், நன்றி
ha, ha, ha அருணா நல்ல கற்பனை.
Ravi, make up your mind: Do you want to be nice to me or mean? ஒரு வரியிலே மழை பெய்யும்ங்கிறீங்க..அடுத்த வரியிலே ஒருத்தர் நிம்மதியா இருப்பாருங்கிறீங்க!! :-)
BTW, அப்படியெல்லாம் நிம்மதியா இருக்க விட்டுட முடியுமா? இரண்டு வாரங்கள் கழித்து வர டிக்கேட் வாங்கியாச்சு!! :-)
நன்றி, பத்மா..நிச்சயம் எழுத விஷயம் இருக்குமென்று நினைக்கிறேன்.
அன்பு, முதல் வாழ்துக்கு நன்றி! :-)
நன்றி, செயகுமார்.
Thank you DRaj..
வாங்க வாங்க ரம்யா
நம்ம சந்திப்பு கன்பார்ம்டு தானே
//கதையின் பெயரை மாற்றி இருக்கிறார்கள். // edit செய்கிறேன் என்று கதையையே மாற்றாமல் இருந்தால் சரி :)
பயணம் இனிதாக அமைக!
Ramya, The last "punch" was amazing. Very true indeed ("Sorgamae endraalum adhu nammoora pola varumaa?"). Ungal puthaandu vaazhthukalukku nandri. Ungalukkum iniya puthaandu nal vaazhthukkal urithaaguha.
வாங்க சென்னைக்குத்தானே..
நம்ம ஊருதான்.
சென்னைலதான் பதிவாளர்கள் ரொம்ப பேர் இருக்கீங்க போலருக்கு?
டோண்டு சார், ராம்கி அன்ட் எவ்ரிபடி எல்ஸ் இன் சென்னை!
ரம்யா இங்க இருக்கறப்பவே வலைப்பதிவாளர்களுடைய ஒரு கெட் டுகெதர் சென்னைல வச்சா என்ன?
Ramya,
Welcome to Chennai.
- Suresh Kannan
மது, வந்த உடனே ஃபோன் பண்ணறேன்.
நன்றி இராதாகிருஷ்ணன்..
//கதையையே மாற்றாமல்// கல்கியில் இதுவரை அப்படி செய்ததில்லை..
நன்றி ரவி..
ஜோசஃப் ஸார் உங்க ஆலோசனைக்கு நன்றி. நான் மது, அருணா, பத்மப்ரியா போன்ற தோழிகளைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். உங்களுக்கு நேரமிருந்து, தோழியருக்கும் செளகரியப்பட்டால் எல்லோரும் சந்திக்கலாம். உங்க ஃபோன் நம்பர் எனக்கு மெயில்லே அனுப்பி வையுங்களேன்.
சுரேஷ் கண்ணன், முதல் முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நன்றி!
ரம்யா,
நல்லபடியா போயிட்டு வாங்க.
ரம்யா , நான் சொன்னதில் முரண்பாடு இல்லை.
நீங்கள் நல்லவர் ஆகவே சென்னையில் மழை பெய்யும்,
அதே சமயம் உங்கள் கண்வர் உங்கள் அன்புத் தொல்லைகளிலிருந்து
நிம்மதியாக இருப்பார், சரிதானே :)
BTW, அப்படியெல்லாம் நிம்மதியா இருக்க விட்டுட முடியுமா? இரண்டு வாரங்கள் கழித்து வர டிக்கேட் வாங்கியாச்சு!! :-)
அப்ப்டியானால் நிம்மதி இரண்டு வாரங்கள்தானா :)
ungal valaipadhivai inrudhan neha'vin valaipadhivu moolam therindhu konden. asattu mama kadhayai parthen, padithen, rasithen.
ungal valaippadhivai uruttugiren (blogroll seigiren enru koorinen :P)
nandri,
narayanan
ரம்யா,
நேரமிருந்தால் ஈரோடு பக்கம் வரவும். ராம்கியிடம் என் நம்பர் உள்ளது.
ரம்யா,
எங்க இருக்கீங்க..இன்னும் சென்னையா?
தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்
பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
Hi Ramya:
I have tagged you. Please see my site for details. If you find time please set it rolling :)
Am sorry if this troubles you
Cheers
DRaj
அன்பு Ramya.
http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html
இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
Kalki la unga sirukadai padichhen
['Saniyan' nnu solara germany peter kadhai]
The beginning and middle portion was interesting (Saniyene?)but end I could surmise as I heard of a similar anecdote from a friend 45 years ago. To know identity he put cold water in Delhi winter and the Sindhi looking girl said "Aiyo".-Subbaraman T.P.
Kanavan Manaivi mana nikazvukalai aakka poorvamaga kondupogum nalladhoru siru kadhai-Subbaraman
Kanavan Manaivi mana nikazvukalai aakka poorvamaga chollum nalladhoru siru kadhai-Subbaraman
Post a comment
<< Home