Sunday, July 24, 2005

Born into brothels"அந்தப் படமா? ஒரே depressingஆக இருக்கும். நான் வரலே" என்று பல நண்பர்கள் ஒதுங்கிவிட்டார்கள். குணாவில் சில காட்சிகள் பார்த்திருக்கிறோம். மாகாநதியில் பார்த்ததும், கமலின் ஓலமும் எவ்வளவு நாட்கள் மனக்கண்ணின் முன் தோன்றியிருக்கும். ஆனால் இது நிஜம்.

நான் இதை எழுதும் பொழுதும், நீங்கள் இதை படிக்கும் பொழுதும் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் தினம் தினம் நடக்கும் நிஜம். Born into brothels என்ற விவரணப்படத்தை எதிர்பார்த்தபடியே அழுதுகொண்டே பார்த்து முடித்தேன்.

நம்மால் இரண்டு நாட்கள் கூட தங்க முடியாத ஒரு இடத்தில் Zana Briski என்ற பெண் மாதக் கணக்கில் தங்கியிருக்கிறார். அது தான் கல்கத்தாவின் red light பகுதி. அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வந்தவரை அங்குள்ள குழந்தைகள் உடனடியாக தங்களின் நண்பராக்கிக் கொள்கிறார்கள். "The children were everywhere", என்று சொல்லும் Zana இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவேடுக்கிறார். அவர்களுக்கு photography சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஆளுக்கோரு காமெரா மூலம் இந்த எட்டு குழந்தைகளும் தங்கள் உலகைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்ச நேரம் தங்கள் உலகத்தின் அவலத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

முழு படத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை. உங்களில் பலர் (எல்லோரும்) இதை பார்க்க வேண்டும். என்னை மிகவும் பாதித்த சில காட்சிகளை மட்டும் சொல்கிறேன்:

ஒரு குழந்தை தன் வாழ்க்கையை பற்றி சொல்கிறாள்: "எனக்கு பெரிய பணக்காரி ஆக வேண்டுமென்றெல்லாம் ஆசை கிடையாது. ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கலாம். வாழ்க்கை என்றால் சோகமானது, கஷ்டங்கள் நிறைந்தது என்பதை ஒப்புக் கொண்டால் போதும்." என்ன ஒரு maturity பார்த்தீர்களா? வாழ்க்கை பற்றி வேறு யார் சொன்னாலும் உறைக்காத அர்த்தம் இந்தக் குழந்தை சொல்லும் பொழுது உறைக்கிறது.

இன்னோரு பெண் குழந்தைக்கு தாய் இறந்துவிட்டாள். தன் மாமி வீட்டில் இருக்கிறாள். மாமி அவளை சீக்கிரம் 'தொழிலுக்கு' அனுப்ப போகிறாள். அந்தக் குழந்தையிடம் கேட்கிறார்கள் ''உனக்கு இதற்கு ஏதாவது தீர்வு தெரிகிறதா?' என்று. அந்தக் குழந்தை ஒரு வினாடி யோசித்துவிட்டு 'இல்லை' என்று சோகமாக தலையை ஆட்டுகிறாள். கண்ணீரை அடக்க முடியாமல் செய்த காட்சி.

அவிஜித் என்ற பையன் தன் தந்தையைப் பற்றி சொல்கிறான், "அவர் நல்ல பலசாலியாக இருந்தார். சந்தையில் இரண்டு பேரை கூட ஒரே சமயத்தில் அடித்திருக்கிறார் (இதை சொல்லும் பொழுதும் ஒரு லேசான சிரிப்பும், பெருமையும் முகத்தில்) ஆனா எங்கம்மா ஓடிப் போனதுக்கு அப்புறம் இப்போ இரண்டு வருடமா போதைக்கு அடிமையாயிட்டார். யாரும் அவரை ஒரு பொருட்டா மதிக்கிறதில்லை. அப்படியும் நான் அவரை கொஞ்சமாவது நேசிக்க முயற்சி பண்ணறேன்."

எந்த ஒரு சமூகத்திலும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், பொக்கிஷம் போல் காக்கப்பட வேண்டியவர்கள். ஒரு அரை மணி நேரம் ஒரு குழந்தையோடு நீங்கள் விளையாடினால் போதும் இதைப் புரிந்து கொள்ள. நீங்கள் பெற்றோர்கள் என்றால் இதை நான் புரிய வைக்க கஷ்டப்படவே வேண்டாம். அமெரிக்காவிலும், இங்க்லாண்டிலும் ஒரு குழந்தை காணாமல் போனாலோ, வன்முறை தாக்குதலுக்கு ஆளானாலோ public மற்றும் காவல் துறையினரின் responseஐ படித்திருக்கிறேன். அவர்களின் outrageஐ டி.வியில் பார்த்திருக்கிறேன்.

நம் நாட்டில் தினம் தினம் இப்படி குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். Their eyes are full of promise and hope ஆனால் அதோடு நம்மால் துடைக்க முடியாத சோகம்.

'நம் நாட்டு அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நாமேல்லாம் இப்படி ஒரு கையாலாகாத வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?' வெறும் கேள்விகளோடு வீடு திரும்பினேன்.

மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.kids-with-cameras.org/home/

29 Comments:

At 9:34 am, July 24, 2005, Blogger -/சுடலை மாடன்/- said...

//கடவுள் என்று ஒருவர் இருக்கிறார? நாமேல்லாம் இப்படி ஒரு கையாலாகாத வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?'//

மனசாட்சியை தட்டி எழுப்பும் கேள்வி! பதில் தெரிந்த பிறகும் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த உலகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்" என்று வள்ளுவன் சொல்லியே இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டன. வள்ளுவனின் நாட்டில்தான் இப்படிப்பட்ட குழந்தைகளும் அதிகமாக வாழ்கின்றனர், கூடவே தினமும் ஒரு கடவுளும் சாமியாரும் தோன்றியவண்ணம் இருக்கின்றனர்.

சுருக்கமான நல்ல அறிமுகம், கட்டாயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். உங்களின் மற்ற பதிவுகளையும் பார்த்தேன். பயனுள்ளதாக எழுதிகிறீர்கள், நன்றி இரம்யா.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 9:49 am, July 24, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

ரம்யா
நன்றி. வருடத்திற்கு 1 மில்லியன் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். இதைப்பற்றி கவலைப்பட அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை. அவர்களுக்கு கூட்டணி பேரமும், பதிவி பரிபாலன்மும்தான் முக்கியம்.நான் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.

 
At 10:19 am, July 24, 2005, Blogger Srikanth Meenakshi said...

ரம்யா, நல்ல பதிவு, நன்றி. என்னால் கண்டிப்பாக இந்தப் படம் பார்க்க முடியாது.

சங்கர், அப்பா, ஒருவரது இறை நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் விஷயம் ஒன்று வந்து விட்டால் போதுமே, அடித்தது லக்கி பிரைஸ்! இத்தகைய இருண்ட பதிவிலும் ஒரு ஒளி விளிம்பைக் கண்டு பிடித்து விட்டீர்களே!

 
At 11:59 am, July 24, 2005, Blogger முகமூடி said...

ரம்யா, ஆஸ்கர் திரைப்பட விழா பார்த்த பொழுது இந்த படத்தின் விபரம் சொன்னபோதே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.. அப்புறம் படத்தின் கருவை பற்றி தெரிந்த போது என்னால் பார்க்க முடியுமா என்று சந்தேகம் வந்தது... இந்த படம் பற்றி சில தகவல்களை திரட்டி படித்ததோடு சரி... (எல்லா படங்களிலும் சோக காட்சியின் போது நண்பர்கள் கண்கலங்கும் போது நக்கல் அடிக்கும் நான் இதுவரை 3 படங்கள் பார்த்த பொழுது அழுதிருக்கிறேன்... அதில் ஒன்று மகாநதி. கமல் தன் பெண்ணை மீட்ட பின் காசுக்காக தவிக்கும்போது அந்த பெண்மணிகள் உதவி செய்ய, அவர் கையெடுத்து கும்பிடும் காட்சி & அவர் மகள் பெரியவளானதும் சிறையில் சுவருக்கு இந்த பக்கமிருந்து கால் தொட்டு கும்பிடும் காட்சி...) இன்னொரு முறை மகாநதியையே பார்க்க தைரியம் இல்லை...

// 'நம் நாட்டு அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நாமேல்லாம் இப்படி ஒரு கையாலாகாத வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?' //

 
At 1:19 pm, July 24, 2005, Blogger -/சுடலை மாடன்/- said...

ஸ்ரீகாந்த்,

என்னுடைய எதிர்வினைகளில் ஏதாவது அவசரக்குடுக்கைத் தனமாக இருந்ததாக தோன்றினால் நீங்கள் சுட்டிக் காட்டும் பொழுது சில வேளைகளில் ஒத்து கொண்டிருக்கிறேன். சில வேளைகளில் விளக்கம் அளித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் இங்கு சொன்னதை இரண்டு மாதிரியும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கு என்னுடைய நோக்கமே விஷமத்தனமானது என்பது போல இருக்கிறது உங்களுடைய கருத்து. வருந்துகிறேன். அதை வன்மையாக எதிர்க்கிறேன்.

நான் தோன்றிய சமூகத்தில் இப்படியெல்லாம் அவலங்கள் இருக்கின்றனவே என்று தனிப்பட்ட முறையில் என்னைக் குற்றவாளியாக உணரச் செய்த பதிவு இது. என்னுடைய இறை நம்பிக்கை மறைந்ததற்குக் காரணமே நான் நேரில் கண்ட இப்படிப் பட்ட அவலங்களே. அது வள்ளுவரோ, பாரதியோ போல நம்பிக்கை வைத்து கடவுளுக்கு எதிராக விட்ட கூக்குரலோ கூட அல்ல. இப்படிப் பட்ட அவலங்களை, குறிப்பாக ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் கஷ்டப் படும் அவலங்களை கடவுள் என்ற கற்பிதம் கொண்ட ஒருவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என்ற அடிப்படைதான். இரம்யா சொல்லிய அந்த ஒரு வரி இது போன்ற நேரங்களில் தோன்றுவது (தோன்றி நிலைக்கும் என எல்லாரிடமும் நான் எதிர் பார்க்கவில்லை) மிக முக்கியமானது என்று கருதியதால் அதற்கு மாறாக நடக்கும் யதார்த்தத்தைச் சொன்னேன்.

ஆத்திகத்துக்கு எதிரானது நாத்திகம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது? நாத்திகம் என்பதன் அடிப்படை மனிதம்!

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 2:00 pm, July 24, 2005, Blogger Jayaprakash Sampath said...

ரம்யா : வாய்ப்பு கிடைத்தால் படம் பார்க்க வேண்டும். அறிமுகத்துக்கு நன்றி.

 
At 8:07 pm, July 24, 2005, Blogger Ramya Nageswaran said...

சங்கரபாண்டி, வாங்க..வாங்க! உங்க ஊக்கத்துக்கு நன்றி. நீங்களும் ஸ்ரீகாந்தும் நண்பர்கள்னு எனக்கு தெரியும். இரண்டு பேருமே எனக்கும் தெரிந்தவர்கள். இந்த விவாதம் என் பதிவிலே வந்ததுனாலே ஒரே ஒரு observation மட்டும் செய்ய அனுமதி வேண்டும். ஸ்ரீகாந்த், இந்த contextல அவர் சொன்ன commentக்கு உங்க பதில் கொஞ்சம் sharp தான்!

பத்மா, ஐகாரஸ் ப்ரகாஷ், முகமூடி, பின்னூட்டங்களுக்கு நன்றி.

 
At 8:25 pm, July 24, 2005, Blogger Srikanth Meenakshi said...

//ரீகாந்த், இந்த contextல அவர் சொன்ன commentக்கு உங்க பதில் கொஞ்சம் sharp தான்!//

உண்மைதான். சங்கர், நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு, 'hidden-agenda' இருப்பதாக தொனிக்கும் வகையில் எழுதி விட்டேன், மன்னிக்கவும்.

 
At 3:39 am, July 25, 2005, Blogger -/சுடலை மாடன்/- said...

Thanks Ramya & Srikanth.

It was late night (or early morning :-) before I went to sleep - when I read it, I was bit disturbed by it. I should have taken it easy.

Cheers,

Sankar

 
At 12:08 pm, July 25, 2005, Blogger Santhosh Guru said...

Nice that good films are introduced. Good work.

Related to your post, this is an interview by A.Muthulingam
with Zana Briski and Ross Kaufman

 
At 5:10 pm, July 25, 2005, Blogger Ramya Nageswaran said...

Santosh Guru, thanks for your visit and for the interesting link.

 
At 6:09 pm, July 25, 2005, Blogger Unknown said...

குழந்தைகள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலைஞன் தெரிகிறான். ஆனால் அவர்களால் அவர்களது சூழ்நிலையிலிருந்து மீண்டு வர முடியுமா?

திரைப்படம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன்.

 
At 9:21 am, July 26, 2005, Blogger Ramya Nageswaran said...

திரு. கே.வி.ஆர்,

Zanaவின் கண்ணில்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையலாம். ஆனால் இவர்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு என்ன எதிர்காலம்? படம் முடிந்த பின் விரக்தியின் உச்சத்தில் இருந்தேன். ஆனால், சுந்தரபாண்டி சொன்னது போல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

இவர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால், கட்டுரையின் கீழே கொடுத்துள்ள வலைத்தளத்துக்கு செல்லலாம். இன்னோரு தொண்டு நிறுவனம்: http://sanlaap.org/#

Sanlaap பற்றி இந்தப் படத்தில் வருகிறது. என் நண்பர்கள் சிலர் இந்த நிறுவனத்தில் மூன்று வாரங்கள் தங்கி உதவி செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

 
At 12:39 pm, July 26, 2005, Blogger மதுமிதா said...

ரம்யா இது விவாதிக்கப் படவேண்டிய விஷயம் தான்
தேவையானதும் கூட நல்ல சிந்தனைத் தெளிவினைக் காண்கிறேன் உங்களிடம்
வாழ்த்துக்கள்

 
At 10:32 am, July 28, 2005, Blogger Aruna Srinivasan said...

இந்தப் பதிவில் உள்ளப் பின்னூட்டங்கள் வலைப்பதிவுகளின் தற்போதைய நிலைப் பற்றி எனக்கு பொதுவாக ஒரு நம்பிக்கையைக் கொடுக்கின்றன.

உங்கள் குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரம்யா. செய்தி உபயம்: துளசி :-)

 
At 11:40 am, July 28, 2005, Blogger Ramya Nageswaran said...

மதுமிதா மற்றும் அருணா, (உங்க இருவரையுமே அக்கா என்றழைக்க தோன்றுகிறது.. வயது வித்தியாசத்தால் அல்ல... உங்களின் படிப்பு மற்றும் achievements பற்றி படித்ததால்.. அழைக்கலாமா?)

உங்க வருகைக்கு நன்றி. பல இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்கள் ஒரு shared valuesசின் அடிப்படையில் நண்பர்களாகலாம் என்று இந்த வலைப்பதிவுகள் prove பண்ணிக் கொண்டிருக்கின்றன.

பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றி அருணா.

 
At 11:54 am, July 28, 2005, Blogger மதுமிதா said...

அன்பு ரம்யா

தன்யாவிற்கு எனது மனம்நிறைந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இன்றுதான் எனது தாத்தாவின் பிறந்தநாள்.
இராஜபாளைய சுதந்திரபோராட்ட தியாகி அவர்

தன்யா எல்லா தனங்களும் தான்யங்களும்வளங்களும் பெற்று மனநிறைவோடு வாழ ஆசிகள் பல

 
At 1:28 pm, July 28, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Many more happy returns of the day to Dhanya.

 
At 1:39 pm, July 28, 2005, Blogger Aruna Srinivasan said...

"....அக்கா என்றழைக்க தோன்றுகிறது....அழைக்கலாமா?) "

சான்ஸே இல்லை :-) வயசு என்று பார்த்தீர்களென்றால், எனக்கு வயசு ஏறுவதை மறந்து ரொம்ப காலம் ஆகிறது. அப்புறம் achievements என்று ஒன்று சொல்கிறீர்களே....? அடக்கமா, அதெல்லாம் ஒன்றுமில்லீங்க என்று சொல்லலாம்தான் பார்க்கிறேன். ஆனாலும் இந்த "சுயம்" என்று ஒன்று இருக்கே? அது துள்ளுகிறது. காலரைத் தூக்கிக்கொள்ளாம இருக்க முடியுமா? நன்றி ரம்யா. ஆனால், Miles to go before I sleep.... கதைதான். நிம்மதியா பேர் சொல்லிக் கூப்பிடுங்கள். சிம்பிள். :-)

 
At 2:23 pm, July 28, 2005, Blogger Ramya Nageswaran said...

ஓ. கே அருணா (நிறைய மரியாதை மனதிற்குள் இருக்கிறது!!) ;-)

நன்றி, ரவி..nice of you..

 
At 3:48 pm, July 28, 2005, Blogger வீ. எம் said...

ரம்யா,

தங்களின் குட்டி மகள் தன்யாவிற்க்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிர்வாதங்களும் !
குழந்தை வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற பிரார்த்தனைகளுடன்

MANY MANY MORE HAPPY RETURNS DHANYA KUTTY
வீ எம்

 
At 3:56 pm, July 28, 2005, Blogger Santhosh Guru said...

Happy Birthday, Dhanya :)

 
At 4:34 pm, July 28, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

thanks ramya, why dont you put her photo here.

 
At 6:24 pm, July 28, 2005, Blogger Nirmala. said...

ரம்யா, இந்த முயற்சியும் இந்தக் குழந்தைகள் எடுத்த புகைப்படங்களுக்கு பரிசு கிடைத்திருப்பதாகவும் செய்தித்தாளில் வாசித்திருந்தேன். கொல்கத்தா வந்து ஏறக்குறைய ஒரு வருடமாகப் போகிறது. இங்கிருந்து கிளம்புவதற்குள் ஒரு தரமாவது அங்கே போக வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கிறது. எதுக்கு? போய் என்ன செய்யப் போறேன்? எதுவும் தெரியவில்லை. ஆனாலும் போக வேண்டும்.

நிர்மலா.

 
At 7:58 pm, July 28, 2005, Anonymous Anonymous said...

ramya
Happy birthday to Dhanya.

 
At 9:07 pm, July 28, 2005, Blogger Ramya Nageswaran said...

நிர்மலா, கண்டிப்பா போயிட்டு வாங்க. At the least நாம வாழற வாழ்க்கையை பற்றி சலிப்பு வரும் நேரங்கள்லே 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' அப்படிங்கிற வரிகளோட அர்த்தம் புரியும்.

நன்றி, பத்மா.. தன்யா ஒரு குட்டி பதிவு போட்டிருக்கா... முடிஞ்சா பாருங்க..

 
At 3:36 am, July 29, 2005, Blogger நண்பன் said...

முன்னர் சலாம் பாம்பே.... 1989 என்று நினைக்கிறேன். மீரா நாயர்?

இப்போ மீண்டும் -

வேறொரு இடம் - வேற வேற குழந்தைகள்...

இனி அடுத்த தலைமுறைக்கென வேறு ஒருவர் வந்து புதிதாக படங்கள் செய்யலாம். கதை சொல்லலாம். கவிதை எழுதலாம்.

ஒரு படைப்பாளியின் தர்மம் அத்துடன் முடிந்து விட்டது. அதற்குமேல் அவரால் அதே காரியமாக இருக்க முடியாது.

பல வெளிநாடுகளில் இருந்து இத்தகைய பிரச்னைகளை முன் வைத்து கோடிக் கணக்கில் கறக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து அந்த பணத்தை வேறெங்கும் லவட்டிக் கொண்டு போகாமல் பார்த்தாலே போதும் - பல குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

 
At 10:24 am, October 11, 2005, Blogger Ranj said...

Ramya!! You blog?? I came here from Ammani's blog (am a frequent visitor there and love her stories). I want to read them, but am not able to because of my poor tamizh reading skills! Taking ages to read each sentence ....

 
At 11:58 am, October 11, 2005, Blogger Ramya Nageswaran said...

Ranjana?!!?? Is that you?? Will talk to you soon :-)

 

Post a comment

<< Home