Tuesday, July 05, 2005

ஏர் ரேஜ் (air rage) தேவையா?

சமீபத்தில் பத்மா அர்விந்த் அவர்களின் பதிவில் குடியினால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி இருந்தார்கள். பல நாட்களாக மனதை உருத்திக் கொண்டிருந்த ஒரு சிந்தனை அதைப் படித்தவுடன் மீண்டும் தலைத் தூக்கியது.

காலத்திற்கு ஏற்றார்போல் மனிதர்களின் மன உளைச்சல்களுக்கும், கோபதாபங்களும் பல பெயர்கள் நிலவுகின்றன (சந்திரமுகியும், அந்தியனும் பார்த்த பிறகு காலையில் 'வள்'ளென்று விழும் பாஸ் மாலையில் சிரித்தால், "நிச்சயம் MPD தான்" என்று சொல்லத் தோன்றும்). நாம் கேள்விப்பட்டிருக்கும் மற்ற சில சொற்கள் ரோட் ரேஜ், ஏர் ரேஜ்.

என்னை மிகவும் எரிச்சலைடைய செய்த விஷயம் ஏர் ரேஜ். விமானத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல தான் கட்டணம். சில மணி நேரங்கள் சாப்பிடாமல் இருக்க முடியாது. சாப்பாடு கொடுங்கள், நியாயம். எதற்கு விதவிதமான மது பானங்களை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறீர்கள்? அது என்ன அத்தியாவசிய தேவையா? ஒரு மனிதனால் சில மணி நேரங்கள் குடிக்காமல் இருக்க முடியாதா? அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு கலாட்டா பண்ணும் ஒருவனால் எல்லா பயணிகளுக்கும் அல்லவா ஆபத்து. அந்த மாதிரி ஒரு சூழலை உருவாக்குவது உச்சக் கட்ட பொறுப்பற்ற ஒரு வேலையாக எனக்கு தோன்றுகிறது. ஒரு குடிகாரனால் நம் பயணம் பாதிக்கப்பட வேண்டுமா? 'மது பானங்கள் serve பண்ணக் கூடது' என்று Airlines மீது யாராவது வழக்கு தொடுத்தால் நன்றாக இருக்கும்! விமானங்களில் புகைப் பிடிப்பதை தடுப்பதை விட குடியை தடுப்பது இன்னும் முக்கியமாக எனக்குத் தோன்றுகிறது.

16 Comments:

At 9:02 pm, July 05, 2005, Blogger Balaji-Paari said...

இப்பதிவிற்கு நன்றிகள்!!

நீங்கதான் ஒரு ஆங்கில கவிதை எழுதினவங்களா?. அப்படின்னா அந்த கவிதையை இங்கேயும் பப்ளிஷ் பண்ண முடியுமா?

 
At 9:32 pm, July 05, 2005, Blogger Ramya Nageswaran said...

பாலாஜி பாரி அவர்களே,

கவிதை படித்து, ரசிக்கத் தான் தெரியும். நான் அவளில்லை! :-)

உங்கள் வருகைக்கு நன்றி!

 
At 10:03 pm, July 05, 2005, Blogger சன்னாசி said...

//எதற்கு விதவிதமான மது பானங்களை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறீர்கள்? அது என்ன அத்தியாவசிய தேவையா? ஒரு மனிதனால் சில மணி நேரங்கள் குடிக்காமல் இருக்க முடியாதா?//
Social drinking என்பது ஒரு கலாச்சாரமாக உள்ள இடங்களில் தப்பில்லை. குடிப்பதே போதையேறுவதற்குத்தான் என்று இருக்கும் சிலருக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். மேலும், விமானத்தில் ஒரு அளவுக்கு மேல் போகிறதென்று பணியாளர்கள் ஊகித்தால், மது வழங்க மறுக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு.

 
At 10:15 pm, July 05, 2005, Blogger Ramya Nageswaran said...

திரு. மாண்ட்ரீஸர் அவர்களே,

உங்கள் கருத்து புரிகிறது. நன்றி. ஆனால் உலகம் ஒரு global villageஆன பிறகு எல்லா விதமான மக்களும் பயணிக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன் என்று நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து ஆஸ்த்ரேலிய பல்கலைகழகத்தில் படிக்க சென்று கொண்டிருந்தான் ஒரு இளைஞன். சிங்கப்பூரில் விமானம் மாற்ற வேண்டும். அதற்குள் அதிகமாக குடித்து விட்டு கலாட்டா செய்திருக்கிறான். சிங்கப்பூரில் இறக்கி (Singapore Airlines விமானம்) ஒரு வருடம் உள்ளே தள்ளிவிட்டார்கள். இதற்கு அவனின் பொறுப்பற்ற செயல் தான் மூல காரணம் என்றாலும் அதற்கு வழிவகுத்த சூழல் தேவைதானா?

 
At 11:23 pm, July 05, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

This comment has been removed by a blog administrator.

 
At 11:25 pm, July 05, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

I am sorry to pose this question here.Has your husband written in Business Line.Is his full name is
anatha nageswaran.did he do MBA at IIMA.

 
At 12:03 am, July 06, 2005, Blogger Aruna Srinivasan said...

நீங்கள் சொல்வதுபோல் பலமுறை எனக்கும் தோன்றியதுண்டு. விமானம் என்றில்லை. பொது இடங்கள் எல்லாவற்றிலுமேதான். ரயிலில், பஸ்ஸில் குடித்துவிட்டு பக்கத்தில் உட்காரும் பயணிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதின் கெடுதல் பற்றி ஒரு புரிந்துணர்வு வரும் அளவு, இன்று உலகம் முழுவதும் ஒரு இயக்கம் செயல்படுவதுபோல், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதன் பாதிப்புகளும் புரிய ஒரு இயக்கம் உருவாகும்வரை - அது உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படும் வரை - இப்படிபட்ட சங்கடங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். பத்மா எழுதியுள்ள குடியின் கேடுகள் அத்தனையும் உலகம் முழுவதும் ஜாதி மத மொழி பேதமின்றி பரவலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. விழிப்புணர்வு வர வேண்டிய ஒரு விஷயம் இது.

ஆனால் அதற்கெல்லாம் இன்றைய வணிக சூழ்நிலையில் வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.

 
At 7:30 am, July 06, 2005, Blogger Ramya Nageswaran said...

Dear Mr.Ravi Srinivas,

Yes, you are right. He is from 83-85 batch. He writes for Financial Express these days.

அன்புள்ள அருணா,

கருத்துக்களுக்கு நன்றி.

 
At 8:10 pm, July 08, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

thanks.ask him whether he rembers someone in the name of ravi srinivas.

 
At 11:22 pm, July 08, 2005, Blogger Ramya Nageswaran said...

Dear Ravi,

I have sent a mail to your rediff e-mail id.

 
At 11:38 pm, July 08, 2005, Blogger கறுப்பி said...

ரம்யா, உங்கள் பதிவோடு முற்றுமுழுதாக என்னால் ஒத்துப்போக முடியவில்லை. பொது இடத்தில் ஒருவர் குடித்துத் தகறாறு பண்ணுவது மற்றவர்களுக்கு இடஞ்சலான விடையம்தான் இருப்பினும் அளவாகக் குடித்து தமது பயணத்;தை அனுபவிக்க விரும்புபவர்கள் இருக்கின்றார்கள். சிலரின் தரக்குறைவான நடவடிக்ககைகளால் மற்றவர்களின் சந்தோஷம் கெட்டுப் போவதும் நியாயமில்லைத்தானே. ஒரு அளவிற்கு மேல் குடிவகைக்கு அனுமதியில்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

 
At 8:42 am, July 09, 2005, Blogger Ramya Nageswaran said...

வாங்க சுமதி.. உங்க suggestionஐ அமல் படுத்தினாங்கனா நல்லா இருக்கும். ஆனால் அருணா சொன்னது போல இதுக்கு ஒரு பெரிய வணிக lobby இருக்கு.

பஸ்ஸில் ஒருவர் குடிச்சுட்டு கலாட்டா பண்ணினால் 'டக்'கென்று பஸ்ஸை ஓரம் கட்டிவிடலாம். விமானத்தில் அது முடியாதே :-)

சுமதி, மனுஷி குறும்படம் பார்த்திருக்கேன். ஒரு பெரிய விஷயத்தை, ஒரு சில நிமிடங்களில், 'நச்' சென்று மனதினிலிருந்து நீங்கா வண்ணம் சொல்லிட்டீங்க. வாழ்த்துக்கள்!

 
At 9:06 am, August 31, 2007, Blogger வடுவூர் குமார் said...

விமானங்களில் புகைப் பிடிப்பதை தடுப்பதை விட குடியை தடுப்பது இன்னும் முக்கியமாக எனக்குத் தோன்றுகிறது.
அப்ப ஏதோ ஒன்று உடம்பை கெடுக்க இருக்கனும் என்று சொல்கிறீர்களா? :-)
மது அவனை/அவளை கெடுக்கும்,புகை நம்மையும் சேர்த்து கெடுக்கும்.்
இரண்டையும் நிறுத்தினாலே நல்லது.(ஏற்கனவே புகையை நிறுத்திவிட்டார்கள்)

 
At 9:10 am, August 31, 2007, Blogger Unknown said...

நானும் சுமதியோட கருத்தை ஆமோதிக்கிறேன். அளவோடு இருந்தால் பயணம் நன்றாகத்தான் இருக்கும்.

உங்களோட நிறய மெயில்கள் ஒரு யஹூ குழுமத்தில் படிப்பேன். நல்ல சிந்தனை மற்றும் மற்றவர்களுக்கு உதவும் உங்கள் குணம் மெச்சத்தக்கது!

 
At 10:16 am, August 31, 2007, Blogger Ramya Nageswaran said...

Vaduvur Kumar, I only said compared to the two, drinking seems more dangerous for air passengers. Please watch this video on passive smoking: http://www.youtube.com/watch?v=4Vn3mLIlqp4 I totally agree!!

Thanjavuran, thanks for views on this and for your kind message.

I am sorry my tamil fonts are not working. Have to reinstall them.

 
At 11:46 am, August 31, 2007, Blogger  வல்லிசிம்ஹன் said...

Dear Ramya,
shall read Padma's post.
thank you.
I certainly appreciate the concer behind this post.

In Emirates and and Swiss (I think)Airlineas you have to pay for the drinks you consume.
I do not know abt other airlines.

I will be happiest person if the alcohol is banned during flying hours.
Have seen a young mother suffer her husband's antics during a particularly long flight.
there are chemically imbalanced persons who cannot take alcohol.
and though people do seem to enjoy taking a sip now and then, in general I wish they would clean the whole Universe AND LETS HAVE A AN ALCOHOL FREE WORLD.

 

Post a Comment

<< Home