Thursday, July 28, 2005

அனைவருக்கும் நன்றி!!!

Dhanya with her mom, brother and a sea lion at Singapore Zoo

Posted by Picasaஅம்மாவின் இணைய நண்பர்கள்,

Uncles/மாமாஸ்: அல்வாசிட்டி விஜய், வீ.எம், சுதர்சன் கோபால், முகமூடி, சந்தோஷ் குரு, அல்வாசிட்டி சம்மி, ரவி ஸ்ரீநிவாஸ், ராம்கி, அன்பு, கோபி மாமா மற்றும் அவரின் மொத்த குடும்பம் எல்லாரும் எனக்கு இன்னிக்கு வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

Aunties/மாமிஸ்: துளசி, ஷ்ரேயா, மதுமிதா, அருணா, ஜெயந்தி, எல்லா மாமிக்கும், முக்கியமா துளசி மாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களாலே என் பிறந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாயிடுச்சு. நான் இன்னும் பெரியவள் ஆக ஆக உங்க எல்லாரோடைய நட்பும் வளரணும்னு சாமி கிட்டே வேண்டிக்கறேன்.

மிக்க அன்புடன்,
தன்யா

35 Comments:

At 8:20 pm, July 28, 2005, Blogger Sud Gopal said...

தன்யா,

இத்தப் படிச்சதும் நெம்ப சந்தோசமாப் போச்சி.

உலகம் ரொம்பவும் சின்னதாமே.கண்டிப்பா எப்பாவாவது,எங்கயாவது சந்திக்காமாலா போகப் போறோம்.

இந்த ஆண்டில் இன்னும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...

கேக்கை மட்டும் மறக்காம ஈ-மெயிலில் அட்டாச் செய்து அனுப்பவும்.அளவு கூடுதலாக் இருப்பின் ஜிப் செய்து அனுப்பவும்...

சுதர்சன்.கோபால்

 
At 8:24 pm, July 28, 2005, Blogger Jayaprakash Sampath said...

வாழ்க வளர்க!

 
At 8:27 pm, July 28, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

நன்றி தன்யா, ரம்யா. பொண்ணு அம்மா சாயல்ன்னு ஊரில சொல்லியிருப்பாங்களே :).

 
At 8:45 pm, July 28, 2005, Blogger வீ. எம் said...

தன்யாக்கு பின்னாடி நிக்கிறது யாரு????? :)

அதென்னங்க மாமாஸ்??? தன்யாக்கு, 14 வயசுல மாமா(வீ எம்) இருக்க முடியுமா என்ன?? :) ஹி ஹி ஹி
//பொண்ணு அம்மா சாயல்ன்னு ஊரில சொல்லியிருப்பாங்களே :).//
ஆமா ஆமா, கரெக்ட், பொண்ணு அம்மா மேல சாய்ந்தா ம் மாதிரி நிக்குது, அம்மா சாயல் தான்..
வீ எம்

 
At 8:46 pm, July 28, 2005, Blogger குழலி / Kuzhali said...

தன்யா எனக்கு தெரியாம போயிடுச்சே, பிறந்த நாள் வாழ்த்துகள்

 
At 9:01 pm, July 28, 2005, Blogger Ramya Nageswaran said...

சுதர்சன் கோபால், அனுப்பிட்டா போச்சு.. அதே அட்டாச்மெண்டா giftஐயும் அனுப்பிடுங்க!! :-)

வாழ்த்துக்கு நன்றி, ஐகாரஸ்.

ரவி, சாயல் இல்லே carbon copyன்னு சொல்வாங்க!!

வீ.எம். நினைச்சேன் எழுதும் பொழுதே. ஆனா ஆறு வயசுங்கிறதாலே யாரும் கோபிக்க மாட்டாங்கங்கிற தைரியத்திலே எழுதிட்டேன்!!

வாங்க குழலி, மிக்க நன்றி.

தமிழ்மணத்துலே ஐந்து commentsன்னு பார்த்த உடனேயே நிச்சயமா ஒரு நக்கல் comment யாரு அம்மா? யாரு sea lionன்னு இருக்கும்னு நினைச்சேன்.. :-) Resist பண்ணினவங்களுக்கேல்லாம் நன்றி!!! :-)

 
At 9:22 pm, July 28, 2005, Blogger முகமூடி said...

Uncles/மாமாஸ்:
Aunties/மாமிஸ்:
எல்லாம் சரி...

ப்ரதர் (யங்கர்) : முகமூடி அப்படீன்னு வரதுக்கு பதிலா, இடப்பற்றாக்குறை காரணமா அங்கில்ஸ்ல சேத்துட்டீங்க பாருங்க.... சரி பரவாயில்லை. பையன் பர்த்டே வாழ்த்துக்காவது கரெக்டா "ப்ரதர் (யங்கர்)" அப்படீன்னு போடுங்க...

 
At 9:34 pm, July 28, 2005, Blogger Manjula said...

வாழ்த்துக்கள் !

 
At 9:41 pm, July 28, 2005, Blogger Arun Vaidyanathan said...

Dhanya Kuttikku Belated wishes - Love, Arun

 
At 9:51 pm, July 28, 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தன்யா!

அன்புடன்,
மதி

 
At 10:06 pm, July 28, 2005, Blogger மாலன் said...

தாமதமாகத்தான் தெரிந்தது. தன்யாவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மாலன்

 
At 11:32 pm, July 28, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

தன்யா,

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..

உன்னை விட இரண்டு வயது சிறிய,

சுரேஷ் - பினாத்தல்கள்

 
At 12:01 am, July 29, 2005, Blogger Srikanth Meenakshi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், தன்யா!

 
At 12:33 am, July 29, 2005, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

ரவி, சாயல் இல்லே carbon copyன்னு சொல்வாங்க!!

RAMYA
DHANYA
you could have named her Ramya Jr :)

 
At 12:34 am, July 29, 2005, Blogger Boston Bala said...

பிறந்த நாள் வாழ்த்துகள் :-)

 
At 12:39 am, July 29, 2005, Blogger Suresh said...

Belated Wishes....

-suresh uncle

 
At 4:55 am, July 29, 2005, Blogger துளசி கோபால் said...

தன்யா, இந்த்ப் பொறந்தநாளைத் 'தூள்' கிளப்பியாச்சு!!!!

ஒரே ஒரு திருத்தம் சொல்லட்டுமா?

நான் ஆன்டீஸ் லிஸ்டுலே இல்லை. உன்னோட பெரியம்மா லிஸ்ட்லே இருக்கேன்:-))))))

என்றும் அன்புடன்,
துளசிப் பெரியம்மா

 
At 5:50 am, July 29, 2005, Blogger மாயவரத்தான் said...

தன்யா பாட்டிக்கு வாழ்த்துக்கள். (தன்யாவோட பாட்டிக்குன்னு சொல்லலை.. தன்யா வயசையும் என்னோட வயசையும் கம்பேர் பண்ணினா எனக்கு தன்யா பாட்டி முறை.. அதான்!)

 
At 7:33 am, July 29, 2005, Blogger சினேகிதி said...

Belated Happy Birthday Dhanya

 
At 8:23 am, July 29, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, மஞ்சுளா, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீங்க போல இருக்கு. குட் லக்!

அருண், மதி, மாலன் சார், சுரேஷ், பாஸ்டன் பாலா, முதல் முறையா என் ப்ளாகிற்கு வந்தற்கும், உங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!

முகமூடி, மாயவரத்தான், (பினாத்தல்) சுரேஷ், அடாடாடா!! வீ.எம் எதோ டீனேஜர்னு சொல்ல பார்த்தாரு.. நீங்க எல்லோரும் அவரை மிஞ்சிடிங்களே. பெண்கள் தான் வயதை குறைக்க படாத பாடு படுவாங்க!! இங்கே என்னடான்னா நாங்க அக்கா, மாமி, பெரியம்மா எல்லாத்தையும் ஏத்துக்கிட்டோம். நீங்க எல்லாம் underage bloggersன்னு blogger accountஐ மூடிட்ட போறாங்க!!! :-)))உங்கள் comments வாய் விட்டு சிரிக்க வைத்தது!!

ஸ்ரீகாந்த், சினேகிதி, துளசிக்கா ப்ளாகில் எழுதியிருந்த கணேசன், தேன் துளி பத்மா, எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.

துளசிக்கா, பெரியம்மா எவ்வளவு நல்லா இருக்கு!! எனக்கு தோணாம போச்சே!

ரவி, இப்பவே நிறைய பேர் எங்க பேரை மாத்தி கூப்பிடுவாங்க. Rhymingஆ இருக்கிறதுனாலே வரும் சின்ன சிக்கல்!

தன்யாவோட அப்பா மும்பாயிலே மாட்டிகிட்டிருக்கார். 27ஆம் தேதி மீட்டிங்கிற்காக போன officeசிலிருந்து வெளியே வந்து 4 மணி நேரம் காரில் மாட்டிக்கொண்டு, திருப்பி வந்த officeக்கே சென்று, அங்கேயே தூங்கி, phones இயங்காததால் என்னை contact பண்ண முடியாமல்....மற்றவர்கள் பட்ட கஷ்டத்தை விட ஒன்றும் பெரியதாகபடவில்லை என்றாலும் கிட்டதட்ட ஒரு வாரமாக ஊரில் இல்லாததால் கொஞ்சம் கவலையாக இருந்தது.

இணையத்தில் இருந்து வந்த இந்த அன்புச் சுனாமியால் இப்பொழுது ஒரு நல்ல காரணத்துக்காக தன்யாவின் பிறந்த நாள் மறக்கமுடியாமல் போய்விட்டது.

மீண்டும் நன்றி!

 
At 10:31 am, July 29, 2005, Blogger மதுமிதா said...

அன்பு தன்யா

இப்போதிருந்தே நமது நட்பு தொடர்கிறது

தன்யாவின் தோழி
மதுமிதா

 
At 9:10 pm, July 29, 2005, Blogger ஜென்ராம் said...

இன்று விமான சேவை தொடங்கியிருக்கும். இல்லையெனில் நாளை அவர் வருவார். அப்பாவுடன் ஒரு கொண்டாட்டம் கொண்டாட மாலையிலும் வாழ்த்துக்கள்

ராம்கி
http://stationbench.blogspot.com

 
At 9:17 pm, July 29, 2005, Blogger மயிலாடுதுறை சிவா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் தான்யா...(மிக அழகான பெயர்)
நன்றி
மயிலாடுதுறை சிவா

 
At 11:11 am, July 31, 2005, Blogger -/சுடலை மாடன்/- said...

ஒரு வாரத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் இங்கு திரும்பி வந்தேன்.

குழந்தை தன்யாவுக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 
At 11:16 am, July 31, 2005, Blogger Ramya Nageswaran said...

மதுமிதா, சிவா, ராம்கி, சங்கர், அனைவருக்கும் தன்யாவில் சார்பில் மனம் கனிந்த நன்றி!

 
At 12:46 am, August 01, 2005, Blogger cholai said...

Belated (ரொம்பவே belated-nu நினைக்கிறேன் :) Birthday wishes Dhanya..Carbon copy பற்றி ஏற்கனவே நிறைய comment வந்துவிட்டதால் தவிர்க்கிறேன்! :)

 
At 2:33 am, August 01, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

Belated wishes to the little one !!

அம்மா சாயல் தான் :) (Just like my elder daughter at http://balaji_ammu.blogspot.com/2005/07/blog-post_09.html
who happens to be a carbon copy of her mother !!!!!!!!!!

 
At 8:51 am, August 01, 2005, Anonymous Anonymous said...

பிறந்தநாள் கண்ட எங்கள் செல்லத்திற்கு எனது அன்பு வாழ்த்துக்களும்! நூறாண்டு காலம் வாழ்க! நோய்நொடி இல்லாமல் வளர்க!!

அன்புடன்,
மூர்த்தி

 
At 12:08 pm, August 01, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

போச்சு! என் கற்பனையெல்லாம் போச்சு!

ரம்யாக்கா...நிறைய எண்ணெய் வைச்சு, இழுத்துப் பின்னி, சீலை உடுத்தி ஒரு 80 - 90 கிலோவில ஒரு "மாமி" யை எதிர்பார்த்தா இப்பிடி "நவீன பாணி"யில வந்து அசத்துறீங்க!!! ;O)

அழகான குடும்பம். குட்டீஸ் so cute!

தன்யா...பிறந்த நாளை நல்லா கொண்டாடினீங்களா?

//நான் ஆன்டீஸ் லிஸ்டுலே இல்லை. உன்னோட பெரியம்மா லிஸ்ட்லே இருக்கேன்:-))))))//

துளசி(ம்மா)க்கு நான் மகள் மாதிரி..பெரியம்மா மகள் உங்களுக்கு அக்கா தானே... ;O)

"எல்லாருமே வயசைக் குறைச்சுச் சொல்றாங்களே..ஏம்மா?" என்று தன்யா கேட்க அதுக்கு ரம்யா சித்தி முழிக்க..அட! அட!! அட!!! கற்பனை குதிரையத் தட்டி விடுங்க மக்களே! :oD

 
At 12:39 pm, August 01, 2005, Blogger Ramya Nageswaran said...

சோலை, நன்றி.. அவள் இன்னும் தன் பிறந்த நாளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள்.. அதனால் belated எல்லாம் ஒன்றும் இல்லை.

பாலா, நான் அந்த படத்தை வலைப்பூக்களுக்கு வந்த புதிதில் பார்த்திருக்கிறேன். கொள்ளை அழகு இரண்டு குழந்தைகளுமே!

ஷ்ரேயா, 80-90 கிலோ தான்! அதேல்லாம் camera trick!! :-)

எனக்கு சித்தி, அக்கா, பெரியம்மா எதுனாலும் ok ப்பா! அன்போடு எந்த பெயரை சொல்லி கூப்பிட்டாலும் ok தான்!! :-) என்ன சொல்றீங்க துளசிக்கா? தன்யாவையே பாட்டின்னு சொன்ன மாயவரத்தான் நம்மை எல்லாம் கொள்ளு பாட்டின்னு கூப்பிடப் போறாரு!!

 
At 1:06 pm, August 01, 2005, Blogger மாயவரத்தான் said...

பார்க்கப்போனா தன்யாவே எனக்கு கொள்ளுப்பாட்டி முறை தான். அப்படி பார்த்தா நீங்க எல்லு(எள்ளு)ப் பாட்டி முறை. ஆனாலும் பரவாயில்லைன்னு ஒரேடியா 'பாட்டி'ன்னு கூப்பிடுறேன்.

 
At 1:19 pm, August 01, 2005, Blogger முகமூடி said...

மாயவரத்தான் தாத்தா.. நீங்க நடக்க வசதியா ஒரு கைத்தடியும், படிக்க வசதியா ஒரு சாளேஸ்வர கண்ணாடியும் வாங்கி தந்தேனே... உங்களுக்கு பிடிச்சிருக்கா...

அன்புடன், பேரன் முகமூடி...

தன்யாவை நான் எப்படி கூப்பிடுவது என்று மாயவரத்தான் தாத்தா குரல் நடுங்கியபடி சொல்லுவார்.

 
At 4:07 pm, August 01, 2005, Blogger மாயவரத்தான் said...

யோவ் முகமூடி.. கனவிலேயிருந்து எழுந்திரு... ச்சூ...ச்சூ..! வயசாகிட்டாலே இப்படி தான் முகமூடிக்கு பகல் கனவு அடிக்கடி வருதாம்.

 
At 5:01 pm, August 01, 2005, Blogger Unknown said...

தன்யாவின் பிறந்தநாள் அன்று உங்கள் வலைப்பதிவில் அது சம்மந்தமாக பதிவு இல்லாததால் மனதால் வாழ்த்துச் சொன்னேன்.

இன்று Belated B'day wishes Danya.

 
At 6:24 pm, August 01, 2005, Blogger Ramya Nageswaran said...

KVR, நன்றி..ஒரு side கேள்வி: நீங்க AIMS India மெம்பரா? உங்க பெயரை அங்கே பார்த்த மாதிரி ஞாபகம்..

தன்யா பிறந்த நாளன்னிக்கு நம்ம தமிழ் ப்ளாக் உலகத்திலே நிறைய தாத்தா, பாட்டியும் பிறந்திருக்காங்கப்பா. அடுத்த வருஷம் அதை ஒரு முதியோர் மாநாடா கொண்டாடிடலாம்!!!

 

Post a comment

<< Home