Monday, July 18, 2005

நான் இறந்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?

சமீபத்தில் அல்வாசிட்டி விஜய் எழுதிய பதிவு நான் படிச்ச ஒரு தகவலை நினைவூட்டியது. Steven Coveyயின் 'Seven habits of highly effective people' புத்தகத்தை நீங்க படிச்சிருக்கலாம் இல்லே அந்த workshopல் பங்கேற்றிருக்கலாம். அதிலே நான் ரொம்ப முக்கியமானதா நினைக்கிற ஒரு exercise: Write your own eulogy. அதாவது நீங்க இறந்த பிறகு இரங்கல் கூட்டத்துக்கு வரவங்க உங்களைப் பத்தி என்ன பேசுவாங்க, என்ன பேசணும்ன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு எழுதணும் (கொஞ்சம் morbid விஷயம் தான். ஆனா நெருப்புன்னா வாய் வெந்துடாதே!) இந்தச் சம்பவம் நடந்த பிறகு நீங்க அங்கே போற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க. உங்க குடும்பத்தார் என்ன சொல்வாங்க? உங்க கூட வேலை செய்யறவங்களுக்கு உங்களைப் பத்தி நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? நண்பர்கள்? தெருவாசிகள்?

எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு எழுதினா அது இன்னிக்கு நாம எப்படிபட்டவரா இருக்கோம்ன்னு புரிய வைக்கும். என்ன பேசணும்ன்னு நாம எதிர்பார்க்கறோமோ அது நாம வாழ்க்கையில எதை செய்ய ரொம்ப விரும்பறோம் அப்படிங்கிறதை தெளிவு படுத்தும். இதை Covey ஒரு time management techniqueஆ சொல்லியிருக்கிறார். அதாவது short term விஷயங்களை மட்டுமே யோசிக்கிறதைவிட long termக்கு முக்கியமான விஷயங்களை செய்யுங்கன்னு சொல்றதுக்கு. இன்னோரு காரணமும் இருக்கு. 'எனக்கு வாழ்க்கையிலே என்ன செய்யணும்னே தெரியலை. எதுவுமே பிடிக்கலை,' அப்படின்னு சொல்றவங்களுக்கு ஒரு தெளிவு வரும்.

உதாரணமாக 'இவர் எல்லா ப்ராஜெக்டையும் குறித்த நேரத்தில் முடிச்சுடுவார். எத்தனை மணியானாலும் முடிச்சுட்டு தான் வீட்டுக்கு போவார்.' அல்லது 'எங்கப்பா தினம் சாயங்காலம் என் கூட கொஞ்ச நேரமாவது விளையாடிட்டு தான் தூங்குவார்.'

என்னை பொறுத்த வரை இது எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு exercise. ஒரு காலகட்டத்தில் நான் செஞ்சுகிட்டிருந்த சில உபயோகமற்ற விஷயங்களை விட்டு வெளியே வர உதவியது. என் வாழ்க்கையிலே அர்த்தமுள்ளவை எவைன்னு இனம் பிரிக்க பயன்பட்ட கருவி.

என்னை சுத்தி இருக்கிற சிலரின் eulogiesஐ நினைச்சு பார்க்கறேன்:

"அவள் ஒரு sale விடமாட்டா. அவ வாங்கி வச்சிருக்கிற சாமான் எல்லாம் குறைஞ்சபட்சம் 50% offல வாங்கினதுன்னா பார்த்துக்க!"

"வீட்லே இருக்கிற Swarovski collectionலே பல ஆயிரம் ரூபாய்க்கு மேலே!"

"அவ யார் மனசு நோக எதுவும் பேச மாட்டா. எப்பவும் சிரிச்ச முகம் தான். என்ன கஷ்டம் வந்தாலும் அது மாறாது."

"இவர் பதினைந்து வருடங்களா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தெருத் தெருவா போய் நாலு, நாலு செடியா நட்டு இந்த ஊரையே பச்சை பசெல்னு ஆக்கியிருக்கார்'

அதுக்காக எல்லோரும் செய்யற வேலையை விட்டுட்டு பாட்டெழுதவோ, சமூக சேவை பண்ணவோ போக முடியாது. வயத்து பொழப்புன்னு ஒண்ணு இருக்கே! ஏதோ ஓரளவு நாம போற நினைக்கிற பாதையை பார்த்து சில அடிகளாவது எடுத்து வைக்கலாமே.

நீங்களும் எழுதிப் பாருங்களேன் சில eulogies!!

17 Comments:

At 12:17 am, July 19, 2005, Blogger மயிலாடுதுறை சிவா said...

நீங்கள் சொல்வது மிகச் சரி ரம்யா..
நன்றி
மயிலாடுதுறை சிவா...

 
At 1:48 am, July 19, 2005, Blogger Srikanth Meenakshi said...

ரம்யா, கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயம்தான். இருப்பினும், இதை கோவியின் இன்னொரு வாசகத்தோடு சேர்த்து வாசிக்க வேண்டும் - புத்தகத்தின் ஆரம்பப் பகுதியில் அவர் சொல்லியிருப்பார் - "உங்களது ஆதாரமான குணத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியாது. நாம் என்ன தான் முயன்று பாசாங்குகள் செய்தாலும், உண்மை சொரூபத்தை உங்களோடு தொடர்ந்து பழகி வருபவர் அறிவர். ஆதலால், உங்கள் மாற்றம் உங்கள் நடத்தையில் அல்ல, உங்கள் குணத்திலிருந்து தொடங்க வேண்டும்".

இதை முழுவதும் உள்வாங்காவிட்டால் மேற்கூறிய அறிவுரை முழுப் பயன் தராது. அதாவது, பிறர் விரும்பும் வண்ணம் வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்க நேரிடலாம்.

 
At 3:11 am, July 19, 2005, Anonymous Anonymous said...

in one sentence
i was more weird that
what others thought
i was :)
no prizes for guessing which
tamil blogger can say so :)

 
At 6:56 am, July 19, 2005, Blogger லதா said...

என் மறுபாதி என்னைப் பற்றி இவ்வாறு சொல்லக்கூடுமோ ?

"மகா அழுத்தம். மற்றவரிடம் ஆலோசனை கேட்கும். ஆனால் தனக்குச் சரி என்று நினைப்பதைச் செய்யும். பல நேரங்களில் அதுவே சரியாகவும் இருந்திருக்கிறது என்பதுவும் ஒரு காரணம். எல்லோரிடமும் இனிமையாகப் பழகும். அவர்களிடம் பிடிக்காத விஷயம் சில இருந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கும்."

 
At 12:50 pm, July 19, 2005, Blogger Voice on Wings said...

Coveyயை மேற்கோள் காட்டி நன்றாக எழுதியுள்ளீர். ஆனால் உங்களுடன் கொஞ்சம் மாறுபடுவதால் இதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். Covey குறிப்பிட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பழக்கங்களை நீங்கள் குழப்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

அவர் குறிப்பிடும் 2வது பழக்கம்: "முடிவை மனதில் கொண்டு செயலில் இறங்கு" இதற்குப் பயிற்சியாக அவர் பரிந்துரைப்பதே நமக்கே eulogies எழுதிக்கொள்ளும் உத்தி. எந்தெந்த விளைவுகளை, முடிவுகளை, இலக்குகளை நாம் அடைய விரும்புகிறோம் என்பதில் தெளிவு பெறுவதே இப்பயிற்சியின் நோக்கம். இது நம் தலைமை (leadership) குணத்தை வளர்க்க, வலுப்பெறச் செய்ய உதவும். எத்திசைகளில் முயற்சிகளை மேற்கொள்ளுவது என்பதனை உறுதி செய்யப் பயன்படும்.

3வது பழக்கம்: "முக்கியத்துவத்திற்கேற்றவாறு செயல்களை வரிசைப்படுத்து" இதுவே நேர நிர்வாக உத்தி. முக்கியமானவை, முக்கியமற்றவை என்று தரம் பிரித்து, அவைகளுக்கு நேரம் வழங்குதல். முக்கியமானவைகளிலும் அவசரமானவை, அவசரமில்லாதவை என்று ரகம் கண்டு, அவசரமில்லாத முக்கியமான செயல்களே உண்மையில் முக்கியமானவை, நம் வாழ்க்கையின் குறிக்கோள்களுக்குத் துணைச்செல்பவை என்று பரிந்துரைக்கிறார் Covey. அவற்றின் உதாரணங்களாக, திறமைகளை வளர்த்துக் கொள்வது, உறவு முறைகளைப் பேணுவது, உடல் / மன நலத்தில் கவனங்கொள்வது போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறார்.

Coveyயின் இந்தப் புத்தகம் அருமையானவொன்று. பலருக்கு இதைப் பரிந்துரைத்திருக்கிறேன். நானும் அவ்வப்போது படிப்பதுண்டு. இயந்திர கதியில் அதைப் பின்பற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் கூறப்பட்ட கருத்துகளை மனதில் கொண்டு செயல் படுவது நலமே [இந்தப் பின்னூட்டத்திற்குப் பத்து நிமிடங்கள் செலவழித்து விட்டேன் :( ]

 
At 2:40 pm, July 19, 2005, Blogger துளசி கோபால் said...

ர்ம்யா,

//"அவள் ஒரு sale விடமாட்டா. அவ வாங்கி வச்சிருக்கிற சாமான் எல்லாம் குறைஞ்சபட்சம் 50% offல வாங்கினதுன்னா பார்த்துக்க!"

"வீட்லே இருக்கிற Swarovski collectionலே பல ஆயிரம் ரூபாய்க்கு மேலே!"//

என்னைப்பத்திச் சொன்னதுக்கு தேங்ஸ்.

நம்ம வூட்டுலேயும் அந்தப் புத்தகம் இருக்கு. ஆனா கோபாலோட ஷெல்ஃப்லே

 
At 5:28 pm, July 19, 2005, Blogger Sud Gopal said...

ரசித்துப் படித்தேன்,ரம்யா.

இது என்னைப் பற்றிய Covey:

"இவன் இருக்கானே.இல்ல..இல்ல இருந்தானே.ரொம்ப நல்லவன் ஆனா செம அழுத்தம்.யாருக்காவது ஏதாவது பிரச்சினைன்னா இவன நம்பி மனசு விட்டு சொல்லலாம்.ஆனா இவனோட பிரச்சினைய மட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டான்."

:)

 
At 7:45 pm, July 19, 2005, Blogger Ramya Nageswaran said...

This comment has been removed by a blog administrator.

 
At 7:47 pm, July 19, 2005, Blogger Ramya Nageswaran said...

சிவா, சுதர்சன் கோபால் மிக்க நன்றி!

அனானிமஸ், உங்களுக்கு நிறைய competitors இருக்காங்க! :-)

துளசியக்கா, என்ன இப்படி சொல்லிட்டீங்க! மூணாவது தான் உங்களுக்கு சரி! :-)

லதா, நீங்க செஞ்சிருக்கிறது self-analysis. மற்றவர்கள் என்ன சொல்வாங்கன்னு யோசிச்சு பாருங்க.

ஸ்ரீகாந்த் 'பாசாங்கில்லாம செய்யணும்' is a givenன்னு நினைச்சேன். அதான் சொல்லலை.தெளிவுபடுத்தினதுக்கு நன்றி.

VoW, எப்பவுமே ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது அல்லது கேட்டும் பொழுது நம்ம மண்டையிலே எவ்வளவு ஏறுதோ அது மட்டும் தான் ஞாபகம் இருக்கும். என் மனசுலே இந்த eulogy விஷயம் அப்படியே ஒட்டிகிச்சு. அதான் உங்களை மாதிரி விளக்கமா எழுதலை.

பத்து நிமிட பின்னூடத்துக்கு நன்றி. Time well spent :-).

 
At 8:35 pm, July 19, 2005, Anonymous Anonymous said...

அனானிமஸ், உங்களுக்கு நிறைய competitors இருக்காங்க! :-)
அடக்கடவுளே இதிலுமா போட்டியாளர்கள், ஏதோ நான் தான் தேறாத கேஸு என்று நினைத்தால் போட்டியாளர்கள் என்று பயமுறுத்துகிறீர்களே :).

 
At 4:44 pm, July 20, 2005, Blogger முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...

 
At 6:00 am, July 21, 2005, Blogger வெங்கி / Venki said...

அருமையான ஒரு பதிவு. யோசித்துப் பார்த்துவிட்டுப் பின்பு என்னைப் பற்றி என் மறுபாதி என்னச் சொல்லக் கூடும் என்பதை எழுதுகிறேன். என் தந்தையார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் "இருந்து பாடிய இரங்கற்பா" என்ற கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். உங்கள் வலைப்பதிவைப் படித்தவுடன் எனக்கு அதுதான் நியாபகத்திற்கு வந்தது. அதனை கூடிய விரைவில் என்னுடைய வலைப்பதிவில் போடலாம் என்று இருக்கிறேன்.

 
At 8:53 am, July 21, 2005, Blogger Ramya Nageswaran said...

மிக்க நன்றி திரு. வெங்கட். உங்கள் மதிப்பிற்குரிய தந்தையின் கவிதையை படிக்க ஆவலா இருக்கு.

சிங்கப்பூர்வாசியா நீங்கள்? இதுவரை சந்திச்ச மாதிரி ஞாபகம் இல்லையே?

 
At 11:21 pm, July 24, 2005, Blogger வெங்கி / Venki said...

Hi Ramya,
I have published the poem by my father in my blog. Do visit to read it at http://theydal.blogspot.com/
Regards

 
At 12:34 am, July 25, 2005, Blogger wichita said...

good idea, i will use this in my blog.watch out for wichita's obit cum euologies :)

 
At 2:05 am, July 25, 2005, Blogger (Mis)Chief Editor said...

இருந்தப்ப இப்டி எழுதிகினே போனா, செத்தப்போ ஆரும் கண்டுக்க மாட்டாங்க...

ரம்யாம்மா........உசிரு இருக்கப்பவே நல்லத செய்ங்க...அவ்ளோதான்!

 
At 10:23 am, July 25, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி வெங்கி, கண்டிப்பாக படிக்கிறேன்.

Wichita மற்றும் ரங்கநாதன், வருகைக்கு நன்றி.

ரங்கநாதன், இந்த exerciseசின் பயனே இருக்கும் பொழுது நல்லது செய்யலாமே அப்படின்னு புரிய வைக்கத்தான். அது உங்களுக்கு புரிஞ்சுடுச்சுன்னா இதை செய்யவே வேண்டாம்! :-)

 

Post a comment

<< Home