Monday, June 20, 2005

கணினி கலாசாரம்

கணினி கலாசாரம்
(மங்கையர் மலர் - செப்டம்பர் 2003)


நீங்க ஒரு உறவினர் வீட்டுக்கோ, நண்பர் வீட்டுக்கோ விருந்தாளியா போகும் பொழுது இங்கே இருக்கிற ஏதாவது ஒரு காரியத்தை செய்வீங்களா?
1. அவர்களோட கடிதங்கள் இருக்கும் இடத்தை குடைவது,2. அவர்களோட வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும் பெட்டியை திறந்து பார்ப்பது,3. அவர்களின் கணக்கு வழக்கு, வருமானம் போன்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பது,4. அவர்கள் தங்கள் பீஸ் வேலையை செய்யவிடாமல் இடைஞ்சலாக இருப்பது,5. அவர்களின் தொலைபேசியை வெகு நேரம் க்ரமிப்பது.
“என்னங்க! இதெல்லாம் அநாகரீகம்னு எங்களுக்கு தெரியாதா? நிச்சயம் செய்ய மாட்டேன்,” அப்படின்னு தானே சொல்றீங்க?
னால் இதையெல்லாம் நீங்க அறியாமலேயே செய்ய வாய்ப்பு இருக்குங்க. எப்படி தெரியுமா? அவர்கள் வீட்டிலிருக்கிற கம்ப்யூட்டரை நீங்க உபயோகப்படுத்தினா இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு!
பொதுவா நம் பொருட்களை தங்கள் பொருட்கள் போல் சுவாதீனமாக உபயோகப் படுத்தும் விருந்தாளிகளை கண்டால் மனசுக்குள்ள அலறாமல் இருக்க முடியாமா?
இப்பொழுதுள்ள காலகட்டத்திலே டி.வி, வி.சி.டி ப்ளேயர் இருக்கிற மாதிரி பெரும்பாலான வீடுகள்லே கண்டிப்பா கம்ப்யூட்டர் இருக்கு. அதுவும் சாப்ட்வேர் துறைலே வேலை செய்யறவங்களோட முக்கியமான வேலை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அதிலே தாங்க இருக்கு.
உதாரணமா என் தோழி ரேகா வீட்டிலிருந்தபடியே சாப்ட்வேர் கன்ஸல்டண்டாக வேலை செய்கிறாள். கணவன், மனைவி இருவருக்கும் தனி கம்ப்யூட்டர். ஒருவரின் மிஷினை மற்றோருவர் தொடமாட்டார்கள். அந்த அளவு அதில் விஷயம் இருந்தது. ரேகாவின் உறவினரும், அவரின் மனைவியும் வந்தார்கள். ரேகா வெளியே சென்றிருந்த சமயம் இருவரும் கம்ப்யூட்டரில் அமர்ந்து அவர்கள் எடுத்துள்ள டிஜிடல் போட்டோக்களை பார்ப்பதற்காக ஏதோ ஒரு இலவச சாப்ட்வேரை இணையத்திலிருந்து டெளன்லோட் செய்து, கம்ப்யூட்டர் க்ராஷாகும்படி செய்துவிட்டார்கள். அதாவது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்கள் வேலை செய்யாமல் நின்று விடும். வீட்டிற்கு வந்த ரேகாவிற்க்கு இதயம் நின்று விடும் போல் இருந்தது. ஏனேன்றால் அடுத்த நாள் அவள் தர வேண்டிய முக்கியமான ரிப்போர்ட் அதில் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்தது! நடு இரவு வரை அவள் போராடி கம்ப்யூட்டரை சரி செய்தது தனி கதை!

உங்களுக்கே தெரியும்! இப்பொல்லாம் எல்லா விஷயங்களும் ஈ-மெயில்லே தான் வருகிறது. நண்பர்களிடமிருந்தாலும் சரி, அலுவலகத்திலே வேலை கூட செய்பவர்களானாலும் சரி, எல்லாரும் ஈ-மெயில் தான் அனுப்பறாங்க. மற்றவர் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தறதுனாலே நீங்க அவர்களோட பர்ஸனல் விஷயங்களை சுலபமா தெரிஞ்சுக்கிற வாய்ப்பு இருக்கு.
இன்னோரு நண்பர் வீட்டுக் கதையை கேளுங்க. நண்பர் கோபாலோட வீடு கொஞ்சம் சின்னது. அதனால் கம்ப்யூட்டரை தனது படுக்கை அறையில் ஒரு ஓரத்திலே வைச்சுருந்தார் கோபால். அவரின் அண்ணன் மகன் ஊரிலிருந்து வந்தார். காலேஜில் படிக்கும் இளைஞர். கேட்கணுமா? 24 மணி நேரமும் “சாட்” அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்தார். “என்னடா ஒருவரின் பெட் ரூமில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறோமே!” என்ற உணர்வு துளியும் இல்லை. “நீங்க தூங்குங்க பெரியப்பா. எனக்கு தூக்கமே வரலே” என்று பெரியப்பா, பெரியம்மாவிற்க்கு பர்மிஷன் வேறு!
இன்னும் சிலர் மணிக் கணக்கில் கம்ப்யூட்டரில் முன் அமர்ந்து தனக்கு தெரிஞ்ச விஷயங்களை மற்றவருக்கு புரிய வைக்கணும்ங்கற ர்வத்துலே எதையாவது மாற்றிவிடுவார்கள் அல்லது புதிதாக ஏதாவது ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்.
“சரி..அப்போ என்னதான் செய்யணும்? நண்பரை/உறவினரை பார்க்க வேற ஊருக்கோ, நாட்டுக்கோ போனால், போன இடத்துலே ஈ-மெயில் கூட செக் பண்ணக்கூடாதா?” அப்படின்னு நீங்க கேட்கறது புரியறது. உங்க கேள்வி நியாமானதுதாங்க. நண்பர்/உறவினர் வீடுகளுக்கு நான் விருந்தாளியா போகும் பொழுது கடைப்பிடிக்கிற சில பழக்க வழக்கங்களை சொல்றேன். முடிஞ்சா கடைப்பிடிச்சுப் பாருங்க:
v கூடிய மட்டும் மற்றவர்களின் கம்ப்யூட்டரை உபயோகிப்பதை தவிர்க்கணும். பக்கத்தில் ஏதாவது சைபர் கபே (Cyber Cafe) இருந்தால் அங்கே போறது நல்லது.v அப்படி கண்டிப்பாக ஏதாவது வேலை இருந்தால், முதலில் அவர்களின் அனுமதி கேளுங்க. என்ன வேலை இருக்கு, எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் வேண்டும் அப்படிங்கற விஷயத்தை தெளிவா சொல்லி எப்பொழுது உபயோகிக்கலாம்ங்கறதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிறது நல்லது. உதாரணமாக “ஹாட்மெயில் செக் பண்ணணும் இல்லே ஒரு கடிதம் டைப் செய்யணும். ஒரு அரை மணி நேரம் நான் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தலாமா?”v நாசூக்காக அவர்கள் ப்ராட் பேண்ட் (broad band) உபயோகிக்கிறார்களா (அதாவது 24 மணி நேரம் இணையக் கனெக்ஷன் இருக்கலாம். ஒரே கட்டணம் தான்) அல்லது மணிக்கு இவ்வளவு என்று கனெக்ஷனுக்கு பணம் கட்டுகிறார்களா என்று தெரிஞ்சுக்கங்க. இன்னோரு முக்கியமான விஷயம். சில வீடுகள்லே இணையக் கனெக்ஷனுக்காக தனி தொலைபேசி லைன் கிடையாதுங்க. நீங்க இணையத்துக்கு கனெக்ட் பண்ணினா, அவர்களுக்கு யாரும் போன் செய்ய முடியாது (எங்கேஜ்ட் சத்தம் தான் வரும்), அவர்களாலும் யாருக்கும் போன் செய்ய முடியாது. அவங்க போன் பில்லும் எகிறும். அதனாலே இதை முதல்லே கண்டிப்பா கேட்டு தெரிஞ்சுக்கங்க. v நம் உறவி¨ர்/நண்பர் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக ஒரு ப்ரொக்ராமை டெளன்லோட் செய்யறதோ அல்லது அழிக்கறதோ கூடவே கூடாதுங்க. அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால் அவர்களையும் பக்கத்திலே வைத்துக் கொண்டு தான் செய்யணும். அவர்கள் இல்லாத பொழுது ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு தெரியப் படுத்தணும்.v கூடிய மட்டும் நீங்க என்ன வேலை செய்யப் போறேன்னு சொன்னீங்களோ அது மட்டும் செஞ்சுட்டு எழுந்து வந்துடுங்க. அவர்களின் எந்த சாப்ட்வேரையும் அனாவசியமாக திறக்காதீங்க. v ஒரு சிலர் தங்கள் வேலை முடிந்த உடன் எல்லாவற்றையும் மூடி (shut down), மின் இணைப்பையும் துண்டித்து விட்டு வந்துடுவாங்க. அதையும் கேட்காமல் செய்யாதீங்க. ஏனேன்றால் சிலர் வீட்டில் சில ப்ரோக்ராம்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் மிஷினை அடிக்கடி shut down செய்யமாட்டார்கள். v குழந்தைகளை கூடிய மட்டும் உபயோகப்படுத்த அனுமதிக்காதீங்க. அப்படி அவங்க ஏதாவது கேம்ஸ் விளையாடினா நீங்க கண்டிப்பா பக்கத்திலேயே இருங்க. v உங்க உறவி¨ர்/நண்பர் கம்யூட்டரிலிருந்து நீங்களும் பர்சனல் கடிதங்களோ அல்லது அவர்களைப் பற்றி ஏதாவது அபிப்பிராயங்களோ அனுப்புவதை தவிர்க்கப் பாருங்க. நீங்க உங்க மெயில் சாப்ட்வேரை சரியாக மூடாமல் போய்டீங்கன்னா, அவர்கள் உங்கள் கடிதத்தை பார்க்க வாய்ப்பு இருக்கு. அடுத்த நாலு நாளைக்கு சாம்பார்லே உப்பு இல்லைன்னா ச்சர்யப்படாதீங்க. “அட சே! இவ்வளவு விதிமுறைகளா?” அப்படின்னு நீங்க அலுத்துகிறது புரியறதுங்க. என்ன செய்யறது? நாம வாழறது கம்ப்யூட்டர் யுகமில்லையா? மற்றவரின் கம்ப்யூட்டரை நீங்க அவர்களோட சாபத்திற்க்கு உள்ளாகாம உபயோகப்படுத்த என் வாழ்த்துக்கள்!
------------------------------------------

16 Comments:

At 10:04 am, June 21, 2005, Blogger Moorthi said...

வித்தியாசமான ஆனால் பயனுள்ள சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள்!

 
At 5:56 pm, June 21, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி மூர்த்தி.. முதல் விருந்தினராக வருகை தந்தமைக்கும், தங்களின் ஊக்கத்திற்கும்!

 
At 10:03 pm, June 22, 2005, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வலைப்பதிவிற்கு வருக ரம்யா. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

 
At 11:59 pm, June 22, 2005, Blogger பரணீ said...

நல்ல பயனுள்ள பதிவு

- பரணீ

 
At 5:52 pm, June 23, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி திரு. செல்வராஜ் மற்றும் திரு. பரணீ.

 
At 7:05 pm, June 23, 2005, Blogger NambikkaiRAMA said...

ரம்யா மேடம் !நீங்க சொன்ன விசயம் ரொம்ப முக்கியமானதுதாங்க!

 
At 8:22 pm, June 23, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

நான் உங்கள் எழுத்துக்களை முன்பே மங்கயர் மலரில் படித்ததாக நினைவு.வாழ்த்துக்கள்

 
At 9:52 am, June 24, 2005, Blogger Ramya Nageswaran said...

திரு.பாஸிடிவ் ராமா மற்றும் பத்மா அரவிந்த் அவர்களே,
ஊக்கதிற்க்கு மனமார்ந்த நன்றி!!

 
At 5:07 pm, July 04, 2005, Blogger Vijayakumar said...

நல்ல கட்டுரை

 
At 8:38 pm, July 04, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

வாங்க வாங்க....

நல்லா எழுதியிருக்கீங்க..... கொஞ்சம் எங்களுக்கு பயம் வர்ற மாதிரியான மெஸேஜ் சொல்லியிருக்கீங்க......

 
At 7:49 am, July 05, 2005, Blogger எம்.கே.குமார் said...

வலைப்பதிவுலகத்திற்கு வந்த உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி.


உங்களது அறிமுகம் படித்தேன். 'உங்களுக்கும் ஏதோ எழுத வருகிறதென்று.'..?! ம்ம். அநியாயத்துக்கு தன்னடக்கம்.

எங்கெங்க எத்தனை கதைப்போட்டியில பரிசு வாங்கியிருக்கீங்கென்னு சொன்னா, அப்புறம் அது தனிப்பதிவாயிடும். :-)

வாழ்த்துகள்!

எம்.கே.குமார்

 
At 8:09 am, July 05, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

நீங்க சொல்றதை பின்பற்றாட்டி நிலமை என்வீட்டு சோகக்கதை மாதிரி ஆகிடும்!!! எங்க விருந்தாளி இந்தப்பதிவை வாசிச்சிருந்தா எங்கள் கணினி இந்த நிலைக்கு வந்திருக்காது!! பதிவு நன்றாயிருக்கிறது.

 
At 9:20 am, July 05, 2005, Blogger Ramya Nageswaran said...

அன்புத் தம்பி விஜய், திரு.கணேஷ், புது மாப்பிள்ளை குமார் மற்றும் ஷ்ரேயா, மனமார்ந்த நன்றி!

 
At 9:22 pm, July 18, 2005, Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கொஞ்ச நாள் முன்னாடி தான் என் தோழி வீட்டில் கம்ப்யூட்டரை சரி செய்கிறேன் பேர்வழி என்று அதை Crash செய்தேன். இந்தப் பதிவே முன்னரே படிச்சிருக்கணும். அப்புறம், என் வலைப்பதிவுக்கு வந்ததுக்கு நன்றி. நானும் 2 மாசம் முன் வரை சிங்கப்பூர் காரன் தான் :)

 
At 12:14 pm, December 22, 2006, Anonymous Anonymous said...

Correct Ramya.

Ithu MathiRe palla Murai palla Anupavam pattu irukan.
Sila samayam, re-install panniyachu.

Sonna, Kovichikiranga.

Aduthavang Letter padika kudathu - ithu ellarukum teriyavay 40 varusam aeduchu.

Aduthavanga Computer PayanPadutha Kudathu - Eppoo theriya varumo?

Migavum payan Ulla valai Pathivu.

NanDri
Mani

 
At 9:54 pm, December 26, 2006, Anonymous Anonymous said...

I have an simple suggestion for this. You can create a guest (non administrative) user account in your computer and log off and log in as a guest user and give the computer to your guest. You need not sit with them while they are using.

 

Post a comment

<< Home