Sunday, November 11, 2012

ஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....


வாசலில் குவிந்து கிடந்த செருப்புக்களை பார்த்தவுடன் 'திரும்பி விடலாமா?' ன்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து போயிற்று. பல விதமான ஆண், பெண் செருப்புகளுக்கு நடுவே என்னுடையதைத் தனியாக அவிழ்த்தேன். மணமான புதிதில் கோவிலுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் விருந்திற்கோ செல்லும் பொழுதெல்லாம் அருணின் செருப்புகளின் பக்கத்தில் என்னுடையதை விடுவதற்குக் கூட மனமில்லாமல் அவற்றின் மேலேயே விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். முதலில் இதை கவனித்த போதெல்லாம் கேலி செய்தவாறிருந்த அருணுக்கு நாளடைவில் என் பழக்கம் எரிச்சலூட்டுவதாக மாறியது. அது ஒன்று மட்டும் தானா அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்திய விஷயம்?


மேலும் தொடரவிருந்த நினைவோட்டத்தை நல்லவேளை பின்னால் என்னைப் பார்த்தபடி வந்த தோழி சட்டென்று நிறுத்தினாள். முகத்தில் புன்னகையுடன், "என்ன, இப்ப தான் வரியா சுபா? எனக்கும் நேரமாயிடுத்து," என்று கேட்டபடி அவசர அவசமாக உள்ளே சென்றவளின் பின்னாலேயே ஒட்டிக் கொண்டு நானும் நுழைந்தேன்.
வழக்கம் போலவே பெரிய கும்பல் தான். மிர்சந்தானி வீட்டு தீபாவளி பார்ட்டி என்றால் சும்மாவா? கிட்ட தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்து பெரிய மனிதர்களும், குடும்ப நண்பர்களும் குழுமும் இடமாயிற்றே? ஒரு பக்கம் சுடச்சுட ஜிலேபி பொரி துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் கடகட வென்று சப்பாத்திகள் தட்டில் பறந்த வண்ணம் இருந்தன.
பெரிய கும்பலில் ஒரு செளகரியம். யாருடனும் அதிகம் பேசத் தேவையில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் நெருங்கி, "நலமா? வே ல பளு அதிகமா?" என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டபடி நகர்ந்தாலே ஒரு மணி நேரம் μடிவிடும். மீதி நேரமோ சாப்பிடுவதில் சென்று விடும். கடைசி வரை அதிக கவனத்தை ஈர்க்கமலே கூட நழுவிவிடலாம்.போன வருட பார்ட்டிக்கும் இந்த வருட பார்ட்டிக்கும் எத்தனை பெரிய வித்தியாசம்? போன வருடம் கூட்டத்தில் என் 'ஆண்டிக்' நகை செட்டை தோழிகள் கவனிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்பது தான் அக்கணத்தின் மிகப் பெரிய கவலை. ஒரிருவர் அதைப் பற்றி பேசும் பொழுது அது மற்றவர்கள் காதில் விழுகிறதா என்ற கொசுறுக் கவலை வேறு! வாழ்க் க தான் படி மாறிவிட்டது? ன் ன வரவேற்க வந்த மிஸஸ். மிர்சந்தானி, "எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா?" என்றார்.


கேட்ட பிறகு, 'நல்லபடியாக' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாமோ என்ற தர்மசங்கடம் அவர் முகத்தில் படர்வது தெரிந்தது. அவரை மேலும் சங்கடப்பட விடாமல், "எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. இப்பொழுது நான் சுதந்திரப் பறவை!" என்று பேச்சை இலகுவாக்க முயன்றேன். 'விவாகரத்து தானே ஆயிற்று. நான் என்ன செத்தா போய்விட்டேன்?, என்று நினைத்தபடி பார்ட்டியை ரசிக்கலாம் என்று முடிவு செய்தேன்!
"எப்படி இருக்கே சுபா?' என்று கனிவாகக் கேட்டபடி அருகில் வந்தார் டாக்டர் மோட்வானி. இங்குள்ள பல இந்தியர்களின் குடும்ப டாக்டர். அதனால், குடும்ப விஷயங்களும் தெரிந்தவர். "உன் ன விட்டுட்டு போகிறத்துக்கு அந்த முட்டாளுக்கு எப்படி மனசு வந்ததோ? நிச்சயமா திரும்பி வருவான் பார்!" என்றார் கோபமாக. கணவன் எப்ப திரும்ப வந்தாலும் திறந்த கைகளோடும், மனத்தோடும் மனைவி காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர். நான் நிச்சயமாக அதற்குக் காத்திருக்கவில்லை என்று மனதிற்குள் நினைத்தபடி மெதுவாகச் சிரித்து வைத்தேன்.
விவாகரத்து அளவுக்கு எப்படி போயிற்று என்று பல முறை யோசித்ததுண்டு. ஒவ்வொரு முறையும் பல்வேறு பதில்கள் வந்தன. "நீ மக்கு" என்பது முதல் பதில். ஆனால் நான் நானாகத் தான் இருந்தேன். சென்னையில் வளர்ந்து படித்த பெண். நல்ல குடும்ப நிர்வாகி. அனைவரிடமும் அன்போடு பழகும் குணம். ஒன்று தான் கற்கவில்லை. சுயலாபங்களைக் கணக்கில் கொண்டு நட்பு வட்டத்தைப் பெருக்கியபடி காய்களை நகர்த்தும் அருணுக்குத் தெரிந்த வித்தை! தனக்கு யாரிடமிருந்து என்ன பலன் கிடைக்கும் என்பது தான் அவனுக்கு முதலில் மனதில் படும் விஷயம். அவன் இருந்த மீடியா தொழிலுக்கு தொடர்புகள் தான் மிகவும் முக்கியம் என்பான். தனக்கு பயன் உண்டு என்று தெரிந்தவர்களை மட்டுமே தன் வசீகரமான பேச்சாலும், சிரிப்பாலும் கவர முயல்வான். என்னையும் "அவளிடம் போய் பேசு,
இவர்களை வீட்டுக்கு சாப்பிட கூப்பிடு!' என்று நச்சரிப்பான். அவனில் இருந்த இந்த குணம் வே ல விஷய தில் அவனுக்கு பல உயர்வுக ள பெற்றுத் தந்தனேன்னவோ உண்மை தான்.


முதலில் μரளவு இதற் கெல்லாம் ஒத்துழைக்க நான் முயன்றாலும் தொடர்ந்து ன்னால் வேஷம் போட முடியவில் ல. வேறு ந்த விதத்திலும் என்னைக் கவராதவர்களிடம் வலுவில் போய் ஒட்டிக் கொள்ள எனக்கு தெரியவில்லை; பிடிக்கவுமில்லை. பொதுவாக அருண் காக்கா பிடிக்க நினைப்பவர்கள் நான் ன்ன வரம் அணிந்திருக்கிறேன்? ன் வாட்ச் ன்ன ‘ ராண்ட்’? ன்று நோட்டம் விடுபவர்களாகவே இருந்தார்கள். என் பாட்டி வீட்டுக்கு வந்த தட்டானிடம் பேரம் பேசி வாங்கின வைரத்தோடும் என் டைட்டன் வாட்சும் அவர்களைக் கவராதிருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தான்!
போகும் பார்ட்டிகளுக்கும், டின்னர்களுக்கும் கண்கவரும் முறையில் உடை உடுத்த தெரியாதது இன்னொரு பிரச்சனையாக முளைவிட ஆரம்பித்தது. ஷ்ரேயாவும், அவினாஷ¤ம் பிறந்த பிறகு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர வயதைக் குறைத்து காட்ட என்னென்ன செய்யணும் என்றெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ள நான் முனையவுமில்லை. அருணுடன் வெளியே போகும் பொழுது அங்கு வரும் பெண்க ள பார் தால், "நா ளக்கு நம்ம ஷ்ரேயாவும் இ படி தானே வளர்ந்து நி பா. இந்த மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணி பாளோ இல்லே நம்ப மாதிரி கொஞ்சம் பத்தாம் பசலியா இருப்பாளோ?', என்று என்றெல்லாம் பலவாறாக யோசித்ததுண்டு. அதே நேரம், அருணின் எண்ணங்கள் வேறு மாதிரியானவை என்றே நான் உணர்ந்திருக்கவில்லை.
நான் அதிகம் பழகியராத ஒரு பெண்மணி அருகே வந்தமர்ந்தாள். பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின், "யார் உன் கணவர்?' என்றாள். "வரவில்லை", என்றவுடன், "என்னவர் மாதிரியே ஊரிலே இல்லையா? அப்பா! இந்த சிங்கப்பூரிலே இருக்கிற பல கணவர்மார்கள் ஊர் ஊரா சுத்த வேண்டியிருக்கு, இல்லை?" என்றார். "என் கணவர் என் வாழ்க்கையிலெயே இல்லை", என்று சொல்ல நினைத்த பொழுது எனக்கே சிரிப்பு வந்து விட்டது. "இது என்ன, சினிமா வசனம் மாதிரி", என்று நினைத்தபடி "ஆமாமாம்" என்று பேச்சை முடித்து கொண்டேன். அவள் உடை அலங்காரங்களைப் பார்த்தால் கணவர் ஊரிலிருந்தால் நிச்சயம் தன்னுடன் வெளியே அழைத்து செல்லும்படியாகத் தான் இருந்தாள்.ஒரு கட்டத்தில், அருண் என்னை வெளியிடங்களுக்கு கூட்டிக் கொண்ட போவதை நிறுத்திய போது கூட, 'நல்ல வேளை, இன்னிக்கு தொல்லை விட்டது', என்று தான் நினைத்துக் கொண்டேன். "ஏய் சுபா! மீனல் நட தின பெய்ண்டிங் க்ஸிபிஷனுக்கு அருண் ஒரு சீன பெண்ணோட வந்திருந்தானே", என்று கேள்வி பட்ட பொழுது கூட, "கூட வேலை செய்யறவளா இருக்கும்", என்று அலட்சியமாக இருந்த எனக்கு அருணோடு விவாகரத்து பேச்சு எழுந்த போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
தொழில் வளர்ச்சிக்கு நான் தடையாக இருப்பதாவும், நான் ஒரு 'மத்தியவர்க்கப் பிரதிநிதி' என்றும் ஏதேதோ காரணங்கள். ஒருவருக்கொருவர் அடிப்படையில் பிடிக்காமல் போயிற்று. காரணங்களை துல்லியமாக ஆராய்வதில் என்ன பயன்? "சரி, எங்கேல்லாம் கையெழுத்து போடணும்", என்று தான் கேட்டேன். "இந்தியா திரும்ப வந்துடு", என்று அம்மாவும், அப்பாவும் சொன்னதை உடனே என்னால் ஏற்க முடியவில்லை. இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். திடீரென்று, அப்பாவும் விட்டுட்டு போன நிலையில், நாடும் பள்ளிக் கூடமும் மாற வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து குழந்தைகளிடம் சொல்ல மனம் வரவில்லை. 'கொஞ்சம் நாள் பார்ப்பமே' என்று நினைத்திருந்தேன்.
"குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வரலையா?' என்றாள் ரேகா. கூட அழைத்து கொண்டு வரலாமா என்று ரொம்பவும் யோசித்தேன். சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. சுனிதா இரண்டாவது மு றயாக மணம் செய்து கொண்டவள். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தாரா. ஒரு பார்ட்டியில் மற்ற குழந்தைகள், "உனக்கு ரெண்டு அப்பாவாமே!', என்று அவளை மிகவும் கேலி செய்து விட்டார்கள். சுனிதாவின் இரண்டாவது கணவர் அமர், பொறுமையாக அந்த குழந்தைகளிடம், "ஆமாம், தாராவோட டாடி நான், பாபா வேறு நாட்டில் இருக்கிறார்”, என்று அதையே ஒரு விளையாட்டு போல் சமாளித்தான். ஆனால், சுனிதா பல நாட்கள் அதை எண்ணி வருந்தியபடியிருந்தாள். பெரியவர்கள் முதுகுக்கு பின்னே காதில் விழாதபடி பேசுவார்கள். குழந்தைகள் முகத்திற்கு நேராகவே கேட்டு விடுவார்கள். "உன்னோட அப்பா சீன கேர்ள் ·பிரண்டோட இருக்காராமே?', ன்று பதிமூன்று வயது ஷ்ரேயாவிடம் யாராவது கேட்டு விட்டால் குழந் த தாங்க மாட்டாள். "இருவரையும் கொஞ்ச நாள் கழிச்சு அழைச்சுண்டு வரேன்" என்றேன்.தனியே வளைத்த சீமா, "சொல்றேனேன்னு தப்பா நினைச்சுகாதே. அருணை கைக்குள்ளே போட்டுக்க தெரியலை உனக்கு. உனக்கேன்ன நாற்பது வயசு கூட முடியலை. நான் சொல்றதை எல்லாம் கேட்டா ஈசியா ஒரு சக்ஸெஸ்·புல் ஆ ள இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கலாம்.." ன்று சொல்ல ஆரம்பித்த ஆலோசனைகளை கேட்டால் ஏதோ உலக அழகி போட்டிக்கு தயார் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் போல் இருந்தது. "இதுலேல்லாம் எனக்கு ஆர்வமில்லை சீமா" என்று சொன்னபடி விலகினேன்.


கொஞ்ச நேரத்திலேயே, அடுத்த பார்ட்டி எங்கே என்ற பேச்சுக் கிளம்பியது. நண்பர்கள் குழுவில் குனாலுக்கு அடுத்த மாதம் நாற்பது வயதாகப் போவதால் அவன் மனைவி நூபுர் அதை பெரிசாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறாளாம். μர் இனிய அதிர்ச்சி கொடுக்கும் விதமாக எல்லோரும் மாறுவேடமிட்டு வரலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். கைகழுவச் சென்ற நூபுரிடம், "நூபுர், நான் ன்ன வேஷம் போட்டுண்டு வரணும்னு சொல்லவேயில் லயே!' ன்றேன். "உன் இஷ்டம் சுபா.. ஆனா ஒரு விஷயம்..", ன்று இழு தாள்.
"பரவாயில்ல சொல்லு..", என்றேன்.


"குனால் அருணையும் கூப்பிடுட்டான். நான் கூட சொல்லி பார்த்தேன். ஆனா, குனால் பிஸினஸ்லே அரு ண அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கு. கூப்பிடாம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லிட்டான். நீ ஒண்ணும் தப்பா நினைக்கலையே..", என்றாள் சொற்களை மென்றும் முழுங்கியபடியும்.
ம், சோஷியல் நெட்வொர்கிங்! இந்த வி த தானே னக்கு தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?
"அதனாலேன்ன நூபுர்? நாற்பத்தி ஒண்ணாவது பர்த்டேக்கு என்னை மட்டும் கூ பிடு" ன்ற அசட்டு ஜோக் க அடி து விட்டு விலகினேன். வேறு சிலர் இந்த வருட தீபாவளி விருந்துகளுக்கு என்னைக் கூப்பிடாத காரணம் இப்போழுது சட்டென்று புரிந்தது.


மிஸ்டர் அண்ட் மிஸஸ் மிர்சந்தானியிடமாவது சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று அவர்களை தேடினேன். "என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளு சுபா", என்று அன்போடு தோளில் கை வைத்தார். எப்பொழுதும் தொட்டு பேசுபவர் தான். இந்த முறை ஏனோ ஒரு இனம்
புரியாத பயம் ஒட்டிக் கொண்டது. அவசரமாக விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். தனியாகக் கிடந்த செருப்புகளில் இருந்த செளகரியம் புரிந்தது. டக்கென்று போட்டுக் கொண்டு வெளியேறினேன்.
கைப்பேசி ஒலித்தது. தீபாவளி வாழ்த்துகள் சொன்ன அம்மா, "ரெண்டு நாள் முன்னாடி நம்ம சீதாவோட பையன் கல்யாணத்துக்கு போனேன்டி குழந்தே. எல்லாரும் அரசல் புரசலா உன்னை பத்தியே கேட்டுண்டு இருந்தா. னக்கு ரொம்ப மனசு கஷ்டமா போயிடு து. நல்ல வே ள.. நீ கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டே. எனக்கும் அ பாவுக்கும் முதல்ல வரு தமா இருந்தாலும் இங்கே இருக்கிற மனுஷா ள பார்த்தா நல்ல முடிவு தான் எடுத்திருக்கேன்னு நினைச்சுண்டேன்" என்றாள்.
"ம்... இங்கே இருக்கிறவாளும் மனுஷா தானேம்மா" ன்றேன்.
குரல் கம்மியதால் அம்மாவுக்கு சரியாக கேட்கவில்லை போலும். "என்னடி கொழந்தே?" என்றாள்!